41)
மனைவி மக்கள்
பெற்றோர் இம்மூவருக்கும்
இல்வாழ்வானே துணை.
இவனுக்கில்லை இணை.
குறள்-41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
-------------------------------------
42)
இல்லாதவனுக்கும்
இருந்ததை துறந்தவனுக்கும்
பசியால் தவிப்பவனுக்கும்
துணையாவான் இல்வாழ்வான்..
குறள்-42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
--------------------------------------
43)
இறந்தோர் துறந்தோர்
தான் தன் சுற்றத்தார்
சான்றோர் போன்றோரிடம்
அறநெறியில் நடப்பது கடமை-அது
இல்வாழ்வானின் உடைமை..
குறள்-43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
-------------------------------------
44)
பழிக்கு பயந்து
சேர்த்து வைத்த பொருள்தனை
இல்லாதவர்க்கும் கொடுத்து
தானும் உண்பவன் சிறந்தவன்;
அவனே துன்பம் மறந்தவன்;
குறள்-44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஏஞ்சல் எஞ்ஞான்றும் இல்
-------------------------------------
45)
இல்வாழ்க்கையில்
இழையோடும்
அன்பும் அறனும் தான்
அந்த வாழ்க்கையின்
பண்பும் பயனும் ஆகும்..
குறள்-45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது..
----------------------------------
46)
அறவழியில்
இல்வாழ்வை நடத்தினால்
பிறவழியை நாடி
பயன்பெறத் தேவையில்லை..
குறள்-46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
----------------------------------
47)
அறநெறியில்
இல்லறம் கொள்பவன்
பிறநெறியில் சிறப்பாய் வாழ
முயற்சிப்பவனைவிட சிறந்தவன்..
குறள்-47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை..
-----------------------------------
48)
அறநெறியோடு வாழ்ந்து
பிறரையும் அவ்வாறு
வாழவைத்து பார்ப்பது
தவம் செய்வதைவிடச் சிறந்தது..
குறள்-48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து..
-------------------------------------
49)
அறன் எனப்படுவதே
இல்வாழ்க்கை
பிறன் குறை கூறாததே
நல் வாழ்க்கை..
குறள்-49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று..
--------------------------------------
50)
அறநெறியோடு
மண்ணில் வாழ்பவன்
விண்ணில் வாழும்
தெய்வத்திற்கு ஒப்பாவான்..
குறள்-50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
---------------------------------------
வாசித்துவிட்டீர்களா?..சரணடைகிறேன்
வாசித்துவிட்டீர்களா?..சரணடைகிறேன்
குறள் விளக்கம் அருமை!
ReplyDeleteகலக்கல் பாஸ்! குறளுக்கு விளக்கம் இலகு நடையில் கவிதையாக!
ReplyDeleteகுரலுக்கான விளக்கங்கள் அருமை
ReplyDeleteமிக எளிமையான விளக்கம் நண்பரே.
ReplyDeleteஇரண்டு வரிக் குறளுக்கு நான்கு வரியில் தீந்தமிழில் நீர் அளித்த உரை மிக நன்று கவிஞரே...
ReplyDeleteஅருமை நண்பரே!
ReplyDeleteகுறள் விளக்கம் மிக மிக எளிமை அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
த.ம 5
சென்னை பித்தன் கூறியது...
ReplyDeleteகுறள் விளக்கம் அருமை!
முதலாவதாக வந்து கருத்திட்டமைக்கு நன்றி..
ஜீ... கூறியது...
ReplyDeleteகலக்கல் பாஸ்! குறளுக்கு விளக்கம் இலகு நடையில் கவிதையாக!
மிக்க நன்றி சகோ..
sasikala கூறியது...
ReplyDeleteகுரலுக்கான விளக்கங்கள் அருமை..
நன்றி சகோ.
மகேந்திரன் கூறியது...
ReplyDeleteமிக எளிமையான விளக்கம் நண்பரே.
எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சியே தோழர்..நன்றி..
கணேஷ் கூறியது...
ReplyDeleteஇரண்டு வரிக் குறளுக்கு நான்கு வரியில் தீந்தமிழில் நீர் அளித்த உரை மிக நன்று கவிஞரே...
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா..
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
ReplyDeleteநன்று.
தங்கள் வருகைக்கு நன்றி..
dhanasekaran .S கூறியது...
ReplyDeleteஅருமை நண்பரே!
நன்றி நண்பரே..
Ramani கூறியது...
ReplyDeleteகுறள் விளக்கம் மிக மிக எளிமை அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா..
அனைத்து வசன கவிதைகளுமே எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளன.எனக்குப் பிடித்த மிக அருமையாக வள்ளுவ கவிதை இதோ.
ReplyDelete//கற்பையும்
கணவனையும் காத்து
ஒழுக்க நெறி பார்த்து
வாழ்பவளே பெண்;
வாழாதவள் மண்;//
பணி தொடர வாழ்த்துகள்!.
அன்பின் மதுமதி - எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் படியாக - குறளை எளிய கவிதை வடிவில் வடித்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஎளிய விளக்கத்துடன் கூடிய அருமையான கவிதை!
ReplyDeleteRegards,
Siva