புது வரவு :
Home » , , , » உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-5

உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-5

                     உயிரைத்தின்று பசியாறு
                                               (க்ரைம்..க்ரைம்..க்ரைம்)


                   நான்காவது அத்தியாயத்தை இங்கே சென்று வாசிக்கவும்
               
                                  அத்தியாயம்-5   

             டற்கரை காவல் நிலையம்.
             காலை மணி ஏழு ஆகியிருந்தது.
             சூர்யாவும் சப் இன்ஸ்பெக்டர் அருள்மதியும் எதிரெதிர் அமர்ந்திருந்தனர்.
சூர்யா கேட்டான்.


"அருள்மதி..பாடியை எத்தனை மணிக்கு பாத்தீங்க?"
"எட்டே கால் இருக்கும் சார்"
"யாரோ ஒருத்தன் போன் பண்ணி சொன்னான்னு சொல்றீங்க..அவன் யாருன்னு தெரியலை இல்லையா?
"தெரியலை சார்..அவன் யாருன்னு சொல்லலை"
"இறந்தவன் பேரு தினேஷ்..அவதார் லெதர்ஸ் கம்பெனியில ஆறு மாசத்துக்கு முன்னாடி வேலை பாத்திருக்கான் இல்லையா.அதுக்கப்புறம் எங்க வேலை செஞ்சாருன்னு தெரியலை இல்லையா"
"ஆமா சார்..அந்த கம்பெனியோட ஜி.எம் ஜி.ஹெச் வந்து பாடியை பாத்து அது தினேஷ்தான்னு கன்பார்ம் பண்ணிட்டு, மூணு மாசத்துக்கு முன்னால எங்க கம்பெனியில வேலை பாத்தாரு அதுக்கப்புறம் நான் அவரைப் பாக்கலைன்னு தான் சொன்னார்.அவருக்கும் தெரியல"
"ஓ.கே அருள்மதி.விசாரணையை ஆரம்பிச்சுடலாம்.பி.எம் ரிப்போர்ட் எத்தனை மணிக்கு கிடைக்குமாம் "
"இப்ப வந்துடும் சார்"
"ஓ.கே பாடிய செக் பண்ணினப்ப கிடைச்ச பொருட்கள எல்லாம் கொண்டு வாங்க"
            என்று அருகில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து சொல்ல,நிமிடத்தில் மேசை மீது அவை இடம் பெற்றன.
            பர்ஸ்,விசிட்டிங் கார்டு,ஏடிஎம் கார்டு என்று அனைத்தையும் ஒரு பார்வையிட்ட சூர்யா அருள்மதியைப் பார்த்தான்.
"சொல்லுங்க சார்"
"அருள்மதி...பாடியோட பக்கத்துல கிடந்த அந்தப் பொருளைக் கொடுங்க"
            மேசை டிராயரில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த பாலிதீன் கவரை எடுத்து பிரித்து அதை சூர்யாவிடம் கொடுத்தான் அருள்மதி.அதை வாங்கிய சூர்யா உற்றுப் பார்த்தான்.
             மூடி திறந்த நிலையில் இருந்தது அந்த பேனா.பேனாவின் மீது இருந்த பார்வையைத் தூக்கி அருள்மதியின் மீது போட்டான் சூர்யா.
"சொல்லுங்க சார்"
"இந்தப் பேனாதான் பாடிக்கு பக்கத்துல கிடந்தது.அதுவும் மூடி திறந்த நிலையில..இந்த பேனா யாருடையதா இருக்கும்ன்னு நினைக்கிறீங்க அருள்மதி"
"இது தினேஷோட பேனாவா இருக்கலாம்ன்னு தோணுது சார்"
"ஏன் கொலையாளியோட பேனாவா இருக்கக்கூடாது?
              கேட்ட சூர்யா தொடர்ந்தான்.
"ஒ.கே அருள்மதி பாடியோட இடது புற உள்ளங்கையில 1234 ன்னு எழுதப் பட்டிருந்தது இல்லையா..அதை யாரு எழுதியிருப்பான்னு நெனைக்கிறீங்க அருள்மதி"
" கொலையாளிய அடையாளம் காட்ட,உயிர் போற கடைசி நேரத்துல தினேஷ் தன்னோட பேனாவைத் திறந்து கொலையாளியை அடையாளம் காட்ட இதை எழுதியிருக்கலாமே சார்"
             அருள்மதி சொல்ல இரண்டு விநாடி யோசித்த சூர்யா,
"அந்த நெம்பர் கொலையாளியோட கார் நெம்பரா இருக்குமா சார்"
"இருக்கலாம் அருள்மதி..அதை எழுதிய பேனா மூடி கிடைக்கவேயில்லையே"
"ரெண்டு பேருக்கும் நடந்த போராடத்துல மூடி எகிறி விழுந்திருக்கலாம் சார்"
"அப்ப கொலை அங்கதான் நடந்திருக்கனும் இல்லையா..வேற எங்கேயும் கொலை பண்ணி அங்க கொண்டு வந்து போடலை"
"யெஸ் சார்..அதே இடத்துலதான் கொலை நடந்திருக்கனும்ன்னு தோணுது..வெளியில் கொலை பண்ணி பாடியை கொண்டு வந்து பீச்சுல போடுறது சாதாரண வேலை இல்லை சார்..அப்படி ஒரு வேளை நடந்திருந்தா எப்படியும் எங்களுக்கு தெரிஞ்சிருக்குமே சார்."
            அருள்மதி சொல்ல யோசித்த சூர்யா,
"ஓ.கே..பாடியோட பாக்கெட்ல இருந்த செல்போன் அவருடையதுதான்னு உறுதிபடுத்தியாச்சா?"
"அது தினேஷ் பயன்படுத்தினதுதான்.அதுல எந்த மாற்றமும் இல்ல ."
"அதைக் கொஞ்சம் கொடுங்க "
               என்று சூர்யா கேட்க, அருள்மதி அந்த கைப்பேசியை அவரிடம் கொடுத்தார் .வாங்கிய சூர்யா அந்த செல்போனைப் பார்த்தான்.தரமான கம்பெனியால் தயாரிக்கப்பட்ட நவீன ரக செல்போன் அது.
"அருள்மதி ... இந்த செல்போனை உங்க பாக்கெட்டில் வையுங்க.இந்த நெம்பருக்கு கால் வந்தாலும் வரலாம் "
                  சொன்ன சூர்யா அவரிடம் கொடுத்துவிட்டு , ஏதோ பேச முற்பட... அவருடைய கைபேசி சிணுங்கியது..எடுத்து "ஹலோ ..." என்றார்..
"சார் கான்ஸ்டபிள் கனகராஜ் பேசறேன்"
"சொல்லுங்க கனகராஜ்"
"சார் அந்தப் பேனாவோட மையும் பாடியோட கையில இருந்த மையும் ஒரே மைதானாம்''
"அப்படியா ரிப்போட்டை வாங்கிட்டு வந்துடுங்க"
"ஓ.கே சார்"
"அப்புறம் பி.எம் ரிப்போர்ட் என்னாச்சுன்னு கேட்டீங்களா"
"டாக்டர் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு சார்"
"சாரி நான் பாக்குறேன்"
            தொடர்பை துண்டித்த சூர்யா செல்போனை பாக்கெட்டில் போட்டபடியே அருள்மதியைப் பார்த்தான்.
"உங்க யூகம் சரிதான்..அந்தப் பேனா மையும் பாடியோட கையில் எழுதியிருந்த மையும் ஒண்ணுதான்னு ரிப்போர்ட் சொல்லுதாம்..அப்ப கொலையாளிய அடையாளம் காட்ட தினேஷ்தான் எழுதியிருக்கனும்"  
"ஆமா சார் அதுக்குதான் வாய்ப்பு அதிகம்"
"சரி.இப்ப அந்த கோட் வேர்டுக்கு அர்த்தம் என்னான்னு கண்டு பிடிக்கணும்.. வாங்க ஜி.ஹெச் போயிட்டு வந்துடலாம்"
               இருவரும் அரை மணிநேரத்தில் டாக்டர் தீனதயாளன் முன் அமர்ந்திருந்தனர்..
"அப்ப குளோராபார்மால மயக்க நிலைக்கு கொண்டு போனதுக்கப்புறம்தான் கொலை பண்ணியிருக்காங்க..கொலையாளி பயன் படுத்திய ஆயுதம் கத்தி..ஏழு மணிக்கு கொலை நடந்திருக்கு அப்படித்தானே டாகடர்"
"யெஸ்..அப்படித்தான் ரிப்போட்ஸ் சொல்லுது"
              என்று சொன்ன டாக்டர் சூர்யாவிடம் ரிப்போட்டைக் கொடுக்க தீவிர யோசனையோடு வாங்கிய சூர்யா,
"ஓ.கே டாக்டர் தாங்க் யூ"
              சொல்லிவிட்டு ஹாஸ்பிடலை விட்டு வேளியேற அருள்மதி பின் தொடர்ந்தார்.
"அருள்மதி..மயக்க நிலைக்கு கொண்டுபோய் அப்புறம்தான் கொலையாளி கத்திய பயன் படுத்தியிருக்கான்னு பி.எம் ரிப்போர்ட் சொல்லுது..மயக்கமா இருந்த தினேஷ் கொலையாளிய அடையாளம் காட்ட தன்னோட கையில் எப்படி குறிச்சொல் எழுதியிருக்க முடியும்"
               சூர்யா கேட்க அருள்மதி தலையை சொரிந்தபடி யோசித்தார்.
"அருள்மதி வாங்க பாடி கிடந்த இடத்தை ஒரு தடவை பாத்துட்டு வரலாம்"
"போலாம் சார்"
               இரண்டு கான்ஸ்டபிள்களோடு சம்பவ இடத்தை அடைந்திருந்தார்கள்..
காலை நேரம் என்பதால் பீச் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
ஆனாலும் ஆங்காங்கு சில தலைகள் தென்பட்டன.
"பீச்சுல எப்படியும் பத்து மணிவரைக்கும் கூட்டம் இருக்கும்..ஆனாலும் ஒதுக்குப் புறத்துல கொலை நடந்ததால யாருக்கும் தெரியாம போயிருக்கு
அதையும் ஒருத்தன் பாத்துதான் நமக்கு இன்பார்ம் பண்ணியிருக்கான் இல்லையா"
"ஆமா சார்"
"காதல் ஜோடிகள் தான் இந்த மாதிரி வெளிச்சம் குறைவா இருக்கிற இடத்துல வந்து உட்காருவாங்க.அதனால இங்க கொலை நடந்ததை பொதுமக்கள் பாத்திருக்க வாய்ப்பில்லை.."
"ஆமா சார்"
            இருவரும் பேசிக் கொண்டே சம்பவ இடத்தை அடைந்தார்கள்..வெயில் மணற்பரப்போடு கூட்டணி அமைத்து சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த இடத்தை சுற்றிலும் ஒரு முறை பார்த்த சூர்யா,
"கான்ஸ்டபிள்ஸ் மார்க் பண்ணின இடத்தை சுத்தி நாலாபுறமும் இருபதடி தூரத்திற்கு மணலை நல்லா கிளறிப் பாருங்க"


      என்று சொல்ல கான்ஸ்டபிள்ஸ் மணற்பரப்பைக் கிளறி ஆராயத் தொடங்கினார்கள்.
"சார்..என்கொய்ரியை எங்கிருந்து ஆரம்பிக்கலாம்"
"இறந்து போன தினேஷ் வேலை பாத்த அவதார் லெதர்ஸ்ல இருந்து தான் ஆரம்பிக்கணும்.வேற க்ளூ ஏதும் இல்லையே அருள்மதி.எந்த கோண்த்துல கேஸை நகர்த்தலாம்ன்னு சொல்லுங்க"'
            சூர்யா சொல்ல இடது புறமாய் மணலைக் கிளிறிக்கொண்டிருந்த கான்ஸ்டபிள் முருகன்,
"ஸார்..."
            என்று சத்தமாய் அழைக்க அவரசரமாய் திரும்பிய சூர்யா முருகனிடம் செல்ல அருள்மதி பின் தொடர்ந்தார்.
"ஸார்..இது மணலுக்குள்ள புதைஞ்சு கிடந்தது"
            என்று சொல்லி அதை சூர்யாவிடம் முருகன் கொடுக்க அதை வாங்கிப் பார்த்த சூர்யாவின் மூளைசெல்கள் குத்தாட்டம் போட்டன.
            ----------------------------------(குத்தாட்டம் தொடரும்)                 

ஆறாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

15 comments:

  1. தொடர் வெகு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஸார்..இது மணலுக்குள்ள புதைஞ்சு கிடந்தது"

    nice clue...

    ReplyDelete
  3. Sir! Kadantha 2 vaarama padikkama vittutten. Itho ippa padichudaren.

    ReplyDelete
  4. ரொம்ப சுவாரசியமா இருக்கு.. தொடருங்கள்.

    ReplyDelete
  5. அருமை. அத்தியாங்கள் நகர நகர விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது கொலைஞரே... ஸாரி, கவிஞரே...!

    ReplyDelete
  6. ஒரு கவிஞருக்கு உள்ளே இருக்கும் கதைஞரை
    அதுவும் பக் பக் கதை சொல்லும் கதைஞரை
    அத்தியாயங்கள் உரைக்கிறது நண்பரே..

    ReplyDelete
  7. அந்த க்ளு தெரிய இன்னும் சில நாட்கள் பொறுக்கணுமா? சஸ்பென்ஸ் அதிகமாகுது.....

    செம கிரைம்...

    ReplyDelete
  8. சூர்யாவின் மூளைசெல்கள் குத்தாட்டம் போட்டன.
    ஆனா எங்களுக்கு அது என்னனு தெரியும் வர எந்த ஆட்டமும் போடா முடியல போங்க .

    ReplyDelete
  9. கான்ஸ்டபிள் எடுத்துக்கொடுத்தது என்ன???அறியக்காத்திருக்கிறோம் அனைவரும்.

    ReplyDelete
  10. காதல் கவிதை வடிக்கும் கைகள். கிரைம் கதைகளும் அழகாய் நகர்த்தி செல்வது ஆச்சர்யமே

    ReplyDelete
  11. படிப்பதைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போக இயலவில்லை, இதே வேலையாக இருந்து படிக்கிறேன். :)

    ReplyDelete
  12. அத்தியாயம் 6 இன்னமும் வெளியிடவில்லையா!

    ReplyDelete
  13. ஓர் நாள் அமர்ந்து 5 அத்தியாயங்களையும் வாசித்தது மிக்க மகிழ்ச்சி..ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கருத்து எழுதியதற்கு நன்றி..அத்தியாயம் 6 விரைவில் பதிவிடுகிறேன்.நன்றி

    ReplyDelete
  14. மதுமதி சார் ஐந்து அத்தியாங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.. ஆறாவது இன்னும் வெளியிடவில்லையா... காத்துக் கொண்டுள்ளேன் செம சூப்பர்

    ஒவ்வொன்றிக்கும் தனித்தனியாக கமென்ட் போடா வேண்டாம் என்று மொத்தமாக போட்டுள்ளேன்.....

    அத்தியாயம் நான்கு மட்டுமே சிறியதாகவும் விறுவிறுப்பு குறைவாகவும் இருந்த்தது

    மற்ற எல்லாம் வெகு அருமை... அதிலும் ஐந்து சூப்பர்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com