புது வரவு :
Home » , , » தனுஷ் விளம்பரத்துல நடிக்கிறாராம்

தனுஷ் விளம்பரத்துல நடிக்கிறாராம்


கொக்கரக்கோ
தனுஷ்

"அம்மணி...அம்மணி"
       வீட்டு வாசலில் சின்ராசுவின் குரலைக் கேட்ட அம்மணி,ஆர்வமாய் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
"வாங்க மாமா வந்துட்டீங்களா? உள்ளார வாங்க"
       என்று சொல்ல வீட்டிற்குள்ளே நுழைந்த சின்ராசு சட்டையையும் வேட்டியையும் மாற்றிக் கொண்டு மூலையில் போட்டிருந்த இரும்பு சேரில் அமர்ந்தான்.
"ஏனுங்க மாமா கோயமுத்தூரு போயி ரெண்டு நாளு இருந்துட்டீங்க..உங்கள பாக்காம என்னால ரெண்டு நாளு கூட இருக்க முடியலையே மாமா"
         அம்மணியைப் பார்த்து சின்ராசு சிரித்தான்.
"எனத்துக்கு மாமா சிரிக்கிறீங்க"
"ஒண்ணுமில்ல புள்ள என்மேல நீ வச்சிருக்கிற பாசத்தை நெனச்சேன் சிரிப்பு வந்துச்சு"
"அதை பாசம்ன்னு சொல்லாதீங்க மாமா"
"பின்ன என்னான்னு சொல்றது"
"காதல்ன்னு சொல்லுங்க மாமா"
           சொல்லி அம்மணி வெட்கப்பட சின்ராசு மீண்டும் சிரித்தான்.
"இப்ப என்ன சொல்லிப் போட்டேன்..என்னத்துக்கு இப்படி சிரிக்கிறீங்க
செவ்வாக் கிழமை நீங்க ஊர்ல இல்லைன்னு நான் எவ்வளவு வெசனப்பட்டேன்னு உங்களுக்கு தெரியுமா"
"ஏன் அம்மணி செவ்வாக்கிழமை என்ன"
"என்ன மாமா ஒன்னும் தெரியாத புள்ளப்பூச்சி மாதிரி கேட்கறீங்க..உலகம் முச்சூடும் காதலர் தெனம் கொண்டாடுச்சே தெரியல"

சென்னை மெரீனா

           அம்மணி சின்ராசுவைப் பார்த்து சொல்ல அம்மணியின் முகத்தில் பொங்கிய காதலைப் பாத்து மீண்டும் சிரித்தான் சின்ராசு.
"இங்கப் பாருங்க மாமா எதுக்கு சிரிக்கிறீங்க..எனக்கு உங்க மேல காதல் இல்லையா என்ன..பட்டணத்துல இருக்குறவங்க மட்டுந்தான் காதலர் தெனம் கொண்டாடுனுமா..நாம கொண்டாடக் கூடாதா..நாமளும் காதல் பண்ணிதானே கண்ணாலம் பண்ணிக்கிட்டோம்"
"ஆமா அம்மணி இப்ப யாரு இல்லைன்னா"
"வருசா வருசம் வாங்கித் தருவீங்களே ரோசாப் பூ..இந்த வருசம் உங்க கையால பூ வைக்காம நானே வாடிப் போயிட்டேன் மாமா"
"அதெல்லாம் ஒன்னுமில்ல அம்மணி எப்பவுமே அன்பா இருக்கிறவங்களுக்கு எப்பவுமே காதலர் தினந்தான்..நமக்கு எல்லா நாளும் காதலர் தினந்தான் கவலைய விடு..இப்ப உனக்கு ரோஜப் பூதானே வேணும்..அப்புறமா வாங்கித்தாரேன்..அதுவரைக்கும் இதை வச்சுக்க"
             என்று சொன்ன சின்ராசு அம்மணியை இழுத்து 'பச்சக்' என்று ஒரு முத்தமிட நெகிழ்ந்து போனாள் அம்மணி.
"சரி அம்மணி நம்மள விடு ஊரு உலகத்துல எல்லாம் எப்படி கொண்டாடுனாங்களாம்"
"என்ன மாமா ரெண்டு நாளா பேப்பரையே பாக்கலையா"
"இல்ல அம்மணி..அதுக்கெங்க நேரம்..நீயே சொல்லு கேட்டுக்கிறேன்"
"ம்..சொல்லுறேன்..காதலர் தினத்த முன்னிட்டு தாய்லாந்து நாட்டுல கின்னஸ் சாதனை பண்றத்துக்காக முத்தம் குடுக்குற போட்டி நடத்துனாங்களாம்.அதிக நேரம் முத்தங்கொடுத்த சோடிக்கு 3,333 டாலர் மதிப்புள்ள வைர மோதிரமும் 6,666 மதிப்புள்ள பரிசு கூப்பன்களும் பரிசா கொடுத்தாங்களாம்"
"என்ன புள்ள இப்ப சொல்றே?..அப்பவே சொல்லியிருந்தா நாம ரெண்டு பேரும் கலந்து.."
"கலந்து.."
"ஊருப்பட்ட முத்தத்தை கொடுத்து நாம ஜெயிச்சிருக்கலாமே அம்மணி"
"மாமோவ்..அது நீங்க நெனைக்கிற மாதிரி கன்னத்துல 'பச்சக் பச்சக்'ன்னு கொடுக்கிற முத்தமில்ல மாமா..உதட்டோட உதடா கொடுக்குர முத்தம்"
"ஓ..நம்ம கதாநாயகிக்கு நம்ம கமல் கொடுக்கிற இங்கிலீசு முத்தமா
"ஆமா மாமா"
"அதுக்கெல்லாம் நமக்கு கையாலாகாது அம்மணி..உதடு புண்ணாயிப் போயிடுமே"

முத்தப் போட்டி

"ஆமா மாமாண்ணா..கொஞ்ச நேரம் டிவியில பாத்தேன்..உதட்ட கடிச்சு தின்னேபோடுவாங்க போல அப்பப்பா "
"சரி அம்மணி நம்ம நாட்டுல என்ன நடந்துச்சு"
"பெரிசா ஒண்ணும் நடக்குல மாமா எப்பவும் போலதான்..என்ன செவ்வாக்கிழமைங்கிறதால நெறைய பார்க் லீவாம் அதனால பீச் பக்கமா இருந்த ஜோடிக எல்லாம் பீச்சுக்கு போய்ட்டாங்களாம்.அப்புறம் சென்னையில காதலர் தின எதிர்ப்பு தெரிவிக்க கழுதைக்கும் நாய்க்கும் கண்ணாலம் பண்ணி வச்சாங்களாம் இந்து முன்னணியினர்.
"அப்படியா இது வருசா வருசம் நடக்கிறதுதான்"

கழுதை+நாய்=கல்யாணம்

அதை விட முக்கியமான விசயம் அன்னைக்கு ஒரு நாள்ல பத்துகோடி எஸ்.எம்.எஸ் அனுப்பினதா செய்தி மாமா"
"செல்போனு கம்பெனி எல்லாம் தீபாவளி கொண்டாடிருச்சுன்னு சொல்லு"
"ஆமா மாமா கொள்ளை லாபமாம்"
"சரி அம்மணி வேறென்ன முக்கியமான விசயம்"
"உத்தர பிரதேசம் தேர்தல் முடிஞ்ச உடனே பெட்ரோல் விலை ஏறுதாம்"
"அது ஏறினா என்ன இறங்கினா என்ன..போன தடவை விலை ஏறினப்பவே நம்ம டிவிஎஸ் 50 ய தூக்கி கட்டுத் தரையில கட்டி வச்சுட்டேனே"
" மாமா பிரதமர் வீட்டு பக்கத்துல குண்டு வெடிச்சுதே..அந்த குண்ட வெடிக்க வச்சவன் பயங்கரமான தீவிர வாதியாம்..சம்பவ இடத்துக்கு பக்கத்துல இருந்த தொழிலதிபர் ஒருத்தரோட வீட்டுல இருந்த கண்காணிப்பு கேமராவுல பதிவாயிருந்த அவனோட உருவத்தை வச்சு உறுதி படுத்தி இருக்காங்களாம்.ஆனாலும் பைக் நெம்பரும் அவன் முகமும் தெரியாததனால பல கோணத்தில விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.அவன் பயன்படுத்திய பைக் கெடைச்சிடுச்சாம்"
"ஏதோ காந்த வெடிகுண்டுன்னு சொல்லிக்கிறாங்களே..இது வரைக்கும் இந்தியாவுல பயன்படுத்தப் படாத வெடிகுண்டாமே"
"ஆமா மாமா அதோட பேரு"ஓப்வா லசிகா".அப்படித்தான் அரபு நாடுகள்ல அதை சொல்லுவாங்களாம்"
"அப்ப அரபு நாட்டு தீவிர வாதியா இருக்கலாமா"
"கண்டிப்பா மாமா..இந்த காந்த குண்டு ஈரான்லேயும் ஈராக்லேயும் பரவலா பயன்படுத்தக் கூடியதாம்..இரண்டாம் உலகப்போருல கப்பலை தகர்க்க பயன்படுத்தப் பட்டதாம்.அதனால அரபு நாடுகளோட சதியா இருக்கும்ன்னு யூகமாம்."
"கூடங்குளம் பத்தி ஒரு சேதியும் இல்லையா"
"ஏன் இல்ல..ரசிய நாட்டோட சிறப்பு தூதர் நேத்து சென்னையில பேட்டி குடுத்திருக்காரே"
"என்னவாம்"

கூடங்குளம்

"கூடங்குளம் அணுமின் நிலையம்தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான அணு உலையாம்"
"ஒண்ணுமே புரியல அம்மணி..அணுமின் நிலைய விசயத்துல ஒரே குழப்பமா இருக்கு..மக்கள் ஒரு பக்கம் வேண்டான்னு போராட்டம் பண்றாங்க.ஒரு பக்கம் உடனே திறக்கச் சொல்லி போராட்டம் பண்றாங்க..மத்திய அரசு என்ன பண்ணப்போகுதுன்னு தெரியலை ..பார்ப்போம்"
"வன்முறையாளர்கள்,கொலைகாரர்கள்,கொள்ளைக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் என்று அம்மா போலீசுக்கு அறிவுரை கொடுத்திரிக்காங்க மாமா..அப்ப இத்தனை நாளா அவுங்கள கண்டுக்க வேண்டாம்ன்னு சொன்னாங்களான்னு திருப்பி கேள்வி கேட்டுப் போடாதீங்க மாமோவ்"
"அது எனக்கு மட்டுமில்ல அம்மணி படிக்கற எல்லார் மனசிலயும் தோணும்" 
"சென்னையில அந்த டீச்சர் மாணவனால கொலை செய்யப்பட்டாங்கில்ல மாமா"
"ஆமா"
"அதனால ஆசிரியருக்கெல்லாம் கல்வித்துறை ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கு"
"வேண்டுகோளா அதென்ன"
"இனிமேல எல்லா பசங்களுக்கு முன்னால ஒரு பையன திட்டக் கூடாது அடிக்கக் கூடாது..தப்பு பண்ணினா தனியா குப்பிட்டுதான் திட்டனும்"
"இதை முதல்லயே சொல்லியிருந்தா அநியாயமா ஒரு டீச்சர் செத்திருக்க மாட்டாங்க..சின்ன பையன் குற்றவாளி ஆயிருக்க மாட்டான்"
"மாமோவ் பனண்டாவது பரிட்சையில் பிட் அடிச்சா இனிமே எப்பவுமே பரீச்சை எழுத முடியாதாம் தேர்வுத்துறை சொல்லிப்போடுச்சு..எதுக்கு மச்சாண்டாரு பையங்கிட்ட சொல்லிப்போடுங்க அவன் பத்தாவதுலேயே பிட அடிச்சு பாஸ் பண்ணின ஆளு"
"அதை நீயே அவனைக் கூப்பிட்டு சொல்லிப் போடு அம்மணி"
"சரி மாமா சொல்லிப்போடுறேன்..அப்புறம் என்னை சினிமாவுக்கு கீது கூட்டிட்டி போறதாயிருந்தா இந்த வாரத்துலேயே கூட்டிடு போயிடுங்க 23 ந்தேதி கூட்டிட்டு போக வேண்டாம்"
"அதென்ன அம்மணி 23 ந்தேதி"
"மாமா அன்னைக்கு மாநிலம் முழுவதும் சினிமா கொட்டாயெல்லாம் மூடப்போறாங்களாம்"
"ஏன் என்னவாம்?
"மத்திய அரசு சினிமா மேல போட்டிருக்குற சேவை வரியை ரத்து செய்யனுமாம் அதனால அந்த ஒரு நாள் ஸ்டிரைக் பண்றாங்களாம்"
"சரி அம்மணி சினிமான்னு சொன்ன உடனே ஞபகம் வந்துச்சு..ஆமா அந்த நடிகை அனன்யா கல்யாணம் நின்னு போச்சாம்மே"

ஆஞ்சனேயன்-அனன்யா

"ஆமா மாமா நீங்க கூட சொன்னீங்களே அனன்யாக் கூட நிக்கிற மாப்பிளைய பாத்தா பொண்ணுக்கு சித்தப்பா மாதிரி இருக்காருன்னு..ஆமா மாமா அந்தாளுக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆயிடுச்சாம்..அதைக் கண்டிப் பிடிச்சவுடனே அனன்யாவோட அப்பா கல்யாண்த்தை நிறுத்தினதோட மட்டுமில்லாம் போலீசுலே புகாரே குடுத்துட்டாராம்"
"ஆனா அம்மணி அந்தப் பொண்ணு எனக்கும் ஆஞ்சனேயனுக்கும் கல்யாணம் நடக்குறது பிடிக்காத சிலர் இந்த மாதிரி வதந்திய கிளப்பிவிடுறாங்கன்னு சொல்லுதே"
"அதென்னமோ மாமா..முக்காவாசி சினிமா நடிகைங்க ஏற்கனவே கல்யாணம் பண்ணின ஆம்பிளைக்குத்தான் வலைய வீசுறாங்க" 
"ஆமா அம்மணி கொலைவெறி பாட்டு பயங்கர ஹிட்டுன்னாங்களே படம் எப்பதான் ரிலீஸ் ஆகுதாம்"
"அதென்னமோ தெரியலை மாமா..ஆனா தனுசுக்கு தான் இப்ப ரொம்ப கிராக்கியாம்"
"அப்படியா ரெண்டு படம் சேர்ந்தாப்புல புக் ஆயிடுச்சா"
"அது எப்படியும் ஆகுறதுதானே மாமா"
"வேறென்ன கிராக்கி"

தனுஷ்

"மாமா அந்த கொலவெறி உலகம் முழுவதும் ஹிட் ஆனதால ஏகப்பட்ட விளம்பரக் கம்பெனிக தனுச விளம்பரத்துல நடிக்க வைக்க போட்டிபோடுதாம்"
"அப்படியா ஆச்சர்யமா இருக்கே"
"ஆமா மாமா..அவரை ஒப்பந்த பண்ண போட்டா போட்டியாம் கடைசியா நவரத்ன தைலம் தயாரிக்கிறாங்களே இமாமி நிறுவனம் அவுங்க ஒப்பந்தம் போட்டு பெரிய தொகை கொடுத்திறுக்கிறதா பேச்சு.."
"ம்..இப்ப தனுஷ் காட்டுல அடைமழை..ஆனா அதுல அதிகமா நனைஞ்சாலும் ஓவரா சளி பிடிச்சுக்கும்..பார்ப்போம் கொலவெறி இன்னும் என்னென்ன செய்யப் போகுதுன்னு.ஏன் அம்மணி பிரகாஷ்ராஜ் டைரக் பன்ணின தோனி படம் எப்படு யிருக்காம்"
"ம்..நல்லாத்தான் இருக்காம் மாமா கூட்டிட்டு போறீங்களா"
"நாளா மக்கேநாளைக்கு போலாம்..தோனின்னு சொன்னவுடனே ஞாபகம் வந்துச்சு அம்மணி..ஆட்டத்தை வெற்றிகரமா முடிக்கிறதுல தோனி சிறந்த வீரர்ன்னு எல்லா கேப்டன்களும் சொன்னாங்களாமே"
"ஆமா மாமா மேட்சுல ஒரு வேளை நாம் தோத்திருந்தோம்ன்னு வையுங்க அதே கேப்டனுங்க தோனிய பிரிச்சு மேய்ஞ்சு இருப்பாங்க.மீடியாக்காரங்க மைக்க மூக்கு நேரா நீட்டிடக் கூடாது "
"ஆமா புள்ள நீ சொல்றது சரிதான் ..பார்ப்போம் இந்த சீரியஸ்லயாவது ஜெயிப்பாங்களான்னு"  
                                                                              (வெற்றி தொடரும்)

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

 1. சின்ராசு மாமாவ விட அம்மணிதான் வெவரமான ஆளா இருப்பாங்க போலருக்கே... உலக நடப்பெல்லாம் அலசித் தள்ளிட்டாங்க. கலகலப்பான இவங்க உரையாடல் மூலமா நாலு நாட்டு நடப்பும் நல்ல விஷயங்களையும் தெரிஞ்சுக்க முடியுது. அடிக்கடி இவுங்க வரணுமுன்னு சொல்லிக்கிறேன்...

  ReplyDelete
 2. அருமை அருமை
  இந்த வார நிகழ்வுகளையெல்லாம்
  சுவாரஸ்யமாக தொகுத்துச் சொன்னவிதம்
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. @கணேஷ்
  ஆமாம்.அதையும் கண்டு பிடித்து விட்டீர்களா?நிச்சயமா வாரம் ஒரு தடவை வருவாங்க..மகிழ்ச்சி

  ReplyDelete
 4. @Ramani
  உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

  ReplyDelete
 5. உலக நடப்பையெல்லாம் இந்த அம்மிணியும் சின்ராசு மாமாவும் புட்டுபுட்டு வைக்கிறாவுகளே.. பலே பலே.. நாமளும் ரெண்டு சேதிய தெரிஞ்சிப்புட்டோமுல்ல.. வாரேங் அம்மிணி.. வாரேங் மாம்மோய்.

  ReplyDelete
 6. ஒண்ணு விடாம எல்லாச் செய்தியையும் அலசிட்டாங்களே அம்மணியும் சின்ராசுவும்

  ReplyDelete
 7. பலே அம்மணி ... விஷயங்கள் எல்லாம்
  விரல் நுனியில ...செய்திகள் சுடச் சுடச்
  சுவையாக இருக்கு.

  ReplyDelete
 8. @Starjan ( ஸ்டார்ஜன் )

  வருகை தந்து ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 9. @சென்னை பித்தன்

  அனைத்தையும் வாசித்தீர்களா மகிழ்ச்சி ஐயா.

  ReplyDelete
 10. @ஸ்ரவாணி

  வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 11. வீட்டில் இருந்தபடியே ஒரு வார செய்தித் தாள் படித்த நிம்மதி . அருமை அருமை .

  ReplyDelete
 12. நல்ல சங்கதிகள் தான் ரெம்ப நீண்டு விட்டது. (இது என் கருத்து மட்டுமே)கூடங்குளத்தோட நிறுத்தி விட்டு மீதியை நுனிப்புல் மேய்ந்தேன். உங்கள் சிரத்தைக்கு வாழ்த்துகள். தொடருங்கள். அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 13. அம்மணி அத்தனை நாளிதழ்களையும்
  தவறாமல் படித்து விடுவார்கள் போல...
  அம்மணி சொல்ல சொல்ல நானும்
  மொக்கராசு மாமா போல தலையாட்டிக் கொண்டே
  கேட்டேன்...

  பல்சுவைக் கதம்பம்..

  ReplyDelete
 14. sir!
  thanysoda koalai veri
  paadalin moolam -
  engeyo poyittaaru!
  enna seyya !

  seythi thokuththu thanthathum -
  arumai!

  ReplyDelete
 15. நாட்டுநடப்பை, அம்மிணி – சின்ராசு உரையாடல் மூலம் சுவாரஸ்யமாக சொன்னதற்கு நன்றி!

  ReplyDelete
 16. ஆஹா... ஒரு தடவை இந்தியாவுக்கே போய் வந்த மாதிரி இருக்கு. அருமையான அலசல். பாராட்டுகள் மதுமதி.

  ReplyDelete
 17. செய்தித் தொகுப்புத் தந்தவர் மது...மதி.நன்றி வணக்கம் !

  ReplyDelete
 18. ஐயா, இந்தப்பதிவை மிகவும் தாமதாகத்தான் என்னால் படிக்க முடிந்தது.

  பலவிஷயங்களை அழகாகச் சொல்லியிருக்கீங்க.

  அதுவும் ஒரு பெண்ணும் ஆணும் ஆசையாகப் பேசுவது போல.

  நாட்டு நடப்புகளை கிராமிய மொழியில் நல்லாவே தெரிஞ்சுக்க முடியுது.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  இதுபோல இந்தப்ப்பகுதியை தொடருங்கள்.

  இன்று போல தயவுசெய்து மெயில் மூலம் தகவலும் கொடுங்கள்.

  அப்போது தான் நான் இந்தப்பகுதியைத் தவறாமல் என்னால் படிக்க முடியும். என் டேஷ் போர்டில் சரிவர பல பதிவுகள் தெரிவதில்லை.

  பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 19. கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கோ உண்மையிலேயே அனன்யா பாவம்தான் சித்தப்பாவ கட்டிக்கிட்டு என்னபாடுபடப்பாறாரோ..... வேற ஆளே கிடைக்கலயாமா?

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com