ஆலோசனை கூட்டம்
(சென்னைப் பதிவர் சந்திப்பு குறித்து) நாள்: 29-07-2012 நேரம்: மாலை 3.00 மணி
இடம்:
டிஸ்கவரி புக் பேலஸ்
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்
முனுசாமி சாலை,கே.கே.நகர்,
சென்னை.600 078.
வணக்கம் வலைப்பதிவு தோழமைகளே..வருகின்ற ஆகஸ்டு மாதம் 19 ம் நாள் சென்னையில் பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவது தாங்கள் அறிந்த செய்தியே..இந்த சந்திப்பில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களிலுள்ள பதிவர்களும் தயாராகி வருகிறார்கள்.இன்னும் சொல்லப்போனால் சந்திப்பில் கலந்துகொள்ள அயல்நாட்டில் இருந்து சில பதிவர்கள் கலந்து கொள்வதாக உறுதி படுத்தியிருக்கிறார்கள்.
சென்ற பதிவில் இதுவரை சந்திப்பில் கலந்து கொள்ள இசைந்துள்ள தோழமைகளின் பெயர் பட்டியலை இட்டிருந்தோம்.அதை பார்த்தாலே தெரியும் நடைபெறும் சந்திப்பானது எவ்வளவு கோலாகலமாக திகழும் என்பது.
ஆரம்பத்தில் ஐவர் கூடி இந்த சந்திப்பு ஏற்பாடுகளை கவனிக்கும்போது பதிவர்களிடையே இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
சென்ற பதிவில் தோழமைகள் இட்டுசசென்ற கருத்துரைகளை வாசித்து இருப்பீர்கள்.இந்த சந்திப்பானது மிகப் பெரிய அளவிலே இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையான தோழர்களின் விருப்பமாக இருக்கிறது.
தமிழ் வலைப்பதிவர்களில் இப்போது பிரபலமாக இருக்கும் பதிவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இசைந்திருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாது பல புதிய பதிவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
எனவே தோழர்களே..இது சாதாரண சந்திப்பாக இருக்கக்கூடாது.மிகவும் சிறப்பான ஒரு சந்திப்பாகவும் பதிவர்கள் மனதை விட்டு மறையாத சந்திப்பாகவும் இச்சந்திப்பை மாற்றுவோம்..
சந்திப்பு நடக்கும் நாள் இடம் சிறப்பு அழைப்பாளர் நிகழ்ச்சி நிரல் என கிட்டத்தட்ட ஏற்பாடுகள் முடிந்திருந்தாலும் இதை செவ்வனே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எனவே தெளிவாக திட்டமிட்டு சிறப்பாக செயலாற்ற உடனடியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் .இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்னை சுற்று வட்டாரத்தில் இருக்கும் பதிவர்களை கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.எனவே உள்ளூர் பதிவர்கள் கலந்து கொண்டு இச்சந்திப்பு சிறப்பான முறையில் நடைபெற ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் சென்னை பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:
மதுமதி(தூரிகையின் தூறல்) 98941 24021
பால கணேஷ்(மின்னல் வரிகள்) 73058 36166
சிவக்குமார்(மெட்ராஸ் பவன்) 98416 11301 இதுவரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இசைந்திருக்கும் பதிவர்களின் பெயர்ப்பட்டியலைக் காண இங்கே செல்லவும்.
முறையாக கூட்ட ஏற்பாடுகள் தொடர்வது குறித்து
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்
விழாவை திறம்பட நடத்த ஆலோசனை அவசியம் அல்லவா..ஆதலால் இக்கூட்டம் ஐயா..நன்றி.
Deleteமேலும் இதற்கு முந்தைய பதிவில் பதிவர்கள் விசாரித்த விவரங்களையும் எழுதவும். நன்றி சார். (த.ம. 2)
ReplyDeleteகருத்துரைகள் முந்தைய பதிவில் இருக்கிறது தோழர்.இணைப்பை கொடுத்திருக்கிறேன்..பாருங்களேன்..
Deleteஅருமை ஞாயிறு மாலை நடக்கும் சந்திப்புக்கு வர முயல்கிறேன் நன்றி
ReplyDeleteஞாயிறு மதியம் மூன்று மணி எல்லோருக்கும் தோது படுமா? வெயிலாய் இருக்குமே? பரவாயில்லையா என பார்த்து கொள்ளுங்கள்.
ReplyDeleteடியர் மோகன்... 3 மணி என்றால்தான் நாம் எல்லாரும் இந்தியன் பங்சுவாலிட்டிபடி 4க்காவது வருவோம். பேச்சை ஆரம்பித்தால் பின்னர் வருபவர்களும் கலந்து கொள்ளலாம்தானே... உங்களை அங்கே எதிர்பார்க்கிறேன். அவசியம் வந்து விடுங்கள்.
Deleteம்ம்ம்.. கவிஞரே... நல்லமுறையில் நடக்க நாமனைவரும் ஒருங்கிணைந்து கரம் கொடுத்து செயல்படலாம். அறிவிப்பை அழகாக வெளியிட்டுள்ளீர். மிக்க மகிழ்ச்சி.
Delete1.மழைத்தூறல் இருக்கலாம் வெயிலுக்கு வாய்ப்பிருக்காது என கருதுகிறேன்.
Delete2.அண்ணன் பால கணேஷ் சொல்வதைப்போல 3 மணி என்றால்தான் நாம் எல்லாரும் இந்தியன் பங்சுவாலிட்டிபடி 4க்காவது வருவோம்.
தவறாமல் கலந்து கொள்ளுங்கள் தோழரே..
கணேஷ் அண்ணே! நீங்க எங்களை வச்சு சொல்றீங்க போல...!ஹஹா! நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்!
Deleteமதுமதி தோழரே..... காலநிலை பற்றி அறிய வேண்டுமானால் நடிகர் சிட்டிபாபுவை அணுகவும். அவர் விரலை வைத்து வெயிலா. மழையா என சொல்லி விடுவார்.....
Deleteமினி சந்திப்பு அவசியமே..... நிகழ்ச்சிநிரல் தயாரிக்க, மற்ற ஏற்பாடுகள் செய்ய தோதாக இருக்கும்......
தோழரே..அவர் சிட்டிபாபு இல்லை மதன்பாப்.ஆமாம்.நிச்சயமாய்..
Deletesako!
ReplyDeletevaazhthukkal!
நன்றி சீனி..
Delete//3 மணி என்றால்தான் நாம் எல்லாரும் இந்தியன் பங்சுவாலிட்டிபடி 4க்காவது வருவோம்.//
ReplyDeleteHa..ha..unmai!!
உள்ளூர் தோழர்களுக்கு தகவலை சொல்லிவிடுங்கள் தோழர்..
Deleteஎன்னை கூட்டி போக ஏசி கார் வரனும், என்னோடு என் மேனேஜர் தூயா வருவாங்க. அவங்களை நல்லபடியா கவனிச்சுக்கனும், அப்பப்போ ஆப்பிள், மாதுளை, இளாநீர்லாம் குடுக்கனும். லஞ்சுக்கு மட்டன் பிரியானி, சிக்கன் ஃபிரை, இறால் வறுவல், சுறா புட்டு, முகம் கழுவ மினரல் வாட்டர்லாம் வரணும். ஈவினிங் டிஃபன் பற்றி அப்போ சொல்றேன். அதுக்கும் சேர்த்து கூட்டத்துல பேசிடுங்க சகோ.
ReplyDeleteஅப்படியா உங்க மேனேஜர் வர்றாங்களா..சிறப்பு. ஃப்ளைட் டிக்கெட் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் எதுவும் வேண்டாமா?.அதையும் சேர்த்துக்கங்க. உங்களின் கோரிக்கைகளை கவனிக்க கணேஷ் தலைமையில் ஒரு குழு அமைச்சுடலாம்.இந்த செய்தியை கணேஷ் அண்ணணுக்கு பாஸ் பண்ணிடுகிறேன்..கணேஷ் அண்ணே டீல் பண்ணிக்கோங்க..உங்கள் தலைமையில் ராஜி கவனிப்பு குழு என்று ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள்..
Deleteகொஞ்ச சிரமம்தான். இருந்தாலும், ஒரு நாள்தானே அதனால ஃபிளைட் மற்றும் ஃபைவ் ஸ்டார் ஹ்ப்ப்ட்டல்லாம் இல்லாம அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்.
Deleteசந்திப்பு விழா சிறப்பாக அமைய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteசிறந்த முயற்சி பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteஎனக்குத்தான் நண்பரே கொடுத்து வைக்கவில்லை.
ReplyDeleteஇருந்தாலும் விழா சிறப்பாக நடந்த பின் வெளிவரும் சுவாரிசியமான
நிகழ்வுகளையும் படங்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
நன்றி சகோ
Deleteசந்திப்பு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteசந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தோழரே..
DeleteMy best wishes too...
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteஎனக்கு அன்று அலுவலகம் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஒரு சிறு வருத்தம்... ஆலோசனை சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteபரவாயில்லை சீனு..முதலில் வேலையை கவனியுங்கள்..
Deleteசந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்! (TM 9)
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteஅறிவிப்புகளை மிக சிறப்பான முறையில் கையாண்டுள்ளீர்கள்
ReplyDeleteஇந்த நிகழ்வானது உங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி மேலும்
வியக்கத் தக்க வகையில் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
பணி தொடரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
நன்றி சகோதரி..
Deleteஇதோ பார்க்கிறேன் சீனு..
ReplyDelete