"மாமோவ்..மாமோவ்"
அழைத்துக்கொண்டே சின்ராசுவின் அருகில் வந்து அந்த கயித்துக் கட்டிலின் ஓரமாக அமர்ந்தாள் அம்மணி.
"என்னங்க மாமா நான் வந்து பக்கத்துல கோந்தது கூட தெரியாம பேப்பரையே படிச்சிட்டிருக்கீங்களே அப்படி என்ன சேதி"
"அதுவா அம்மணி மெட்ராஸ் பள்ளிக்கூட வேன் ஓட்டையில விழுந்து பரிதாபமா உசுர விட்டுச்சே'
''ஆமா மாமா.. அதை நெனச்சாலே நெஞ்சு பதறுது மாமா"
"அந்த வண்டிய ஓட்டின டிரைவர்,பள்ளிக்கோட தாளாளர்,அந்த பஸ் நல்ல கண்டிஷன்ல இருக்குதுன்னு லஞ்சம் வாங்கிட்டு கையெழுத்து போட்டாரே ஆர்.டி.ஓ ஆபிசரு இவங்கள கைது பண்ணியிருக்காங்களாம்"
"இப்ப கைது பண்ணி என்ன மாமா புரயோசணம் அந்த பிஞ்சு திரும்பி வரவா போகுது"
"இப்போ என்னமோ கவுர்மெண்ட் பெருசா சொல்லுதே பள்ளிக்கூட பஸ்ஸுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்குதாம்"
"அட ஏம் மாமா..இத்தனை நாளு என்ன பண்ணினாங்களாம் அதை மொதல்லயே செஞ்சிருந்தா உசிர காப்பாத்தியிருக்கலாம் இல்லையா"
"ஆமா அம்மணி ஒரு அசம்பாவிதம் நடந்தாதான் அரசு அடுத்த நடவடிக்கையை எடுக்கும் இல்லையா"
"அது தெரிஞ்ச விசயந்தானே மாமா..ஆனா அது எத்தனை நாளைக்குங்குறேன்.. அந்த குழந்தை எறந்த அதிர்ச்சி எல்லார்க்கிட்டேயும் இருக்கற வரைக்கும் பஸ்ஸுக்கு கட்டுப்பாடு விதிக்கிறோம்ன்னு பள்ளிக்கூட முனையில நின்னுக்கிட்டு எல்லாம் பள்ளிக்கோடத்து பஸ்ஸையும் தீவிரமா செக் பண்ணி ஓட்டை பஸ்ஸுக்கெல்லாம் சீல் வைப்பாங்க இன்னும் ஒரு மாசம் ரெண்டு மாசம் ஆனதுக்கப்புறம் பாருங்க இவங்களும் அதை மறந்துவாங்க..அப்புறம் இதே மாதி ஏதாவது அசம்பாவிதம் நடந்தா மறுபடியும் விதிமுறை தண்டனைன்னு ஒரு மாசம் பரபரப்பாக்குவாங்க"
"என்ன அம்மணி சொல்ற"
"ஆமா மாமா கும்பகோணம் தீ விபத்துன்னு நடந்த புதுசுல எல்லா பள்ளிக்கோடத்தையும் செக பண்ணிணாங்க சில பள்ளிக்கோடத்துக்கு லைசன்ஸ் கூட ரத்து பண்ணினாங்க..இவ்வளவு எடம் இருந்தாதான் பள்ளிக்கோடம் நடத்தனும்ன்னு சட்டம் எல்லாம் போட்டாங்க..ஆனா என்ன பிரயோசனம்..எல்லாம் காத்தோட காத்தா போயாச்சு"
என்று சலித்துக் கொண்ட அம்மணி தொடர்ந்தாள்.
"இப்ப எத்தனை பள்ளிக்கோடம் விஸ்தாரம இருக்கு சொல்லுங்க பாக்கலாம்.அதவிடுங்க மாமா,இப்ப சொல்றாங்களே பள்ளிக்கோட வேனை சோதனை பண்றோம். நல்ல நெலையில இல்லாத வண்டியெல்லாம் சீல் வைக்கிறேன்னு அதை கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாமே"
"என்ன புள்ள ஏதாவது அசம்பாவிதம் நடந்தாதான் அரசு அதுல தலையிடும்.. இப்படி நடக்கும்ன்னு முன் கூட்டியே தெரியுமா என்ன"
"என்ன மாமா இப்பத்தான் மொதமுறையா பள்ளிக்கோட பஸ்ல இந்த மாதிரி சம்பவம் நடக்குதா என்ன..போன ஏப்ரல் மாசம் உளுந்தூர்பேட்டை பக்கத்துல ஸ்கூல்பஸ் கவுந்து 25 குழந்தைங்க படுகாயம் அடஞ்சாங்க ஒரு எல்கேஜி கொழந்தை இறந்து போச்சு.போன டிசம்பர் மாசம் கோயமுத்தூர்ல பைக் மேல ஸ்கூல் வேன் மோதி பைக்ல வந்த குழந்தை இறந்து போச்சு.போன நவம்பர்ல பொன்னேரியில ஸ்கூல் வேன் கவுந்து 20 குழந்தைங்க படுகாயம் அடைஞ்சாங்க.போன செப்டம்பர்ல திருநின்றவூர் தனியார் வேன் விபத்துல ஒரு குழந்தை இறந்துச்சு.19 பேர் காயமடைஞ்சாங்க.போன டிசம்பர்ல கடலூர் ஸ்கூல் வேன் இன்னொரு வேன்ல மோதி அகிலாண்டேஸ்வரி, அபிராமி, பவித்ரா, திவ்யான்னு இறந்துபோனாங்க"
என்று அம்மணி அடுக்கிகொண்டே போக,
"அமமணி அமமணி.. நிறுத்து நிறுத்து.. என்ன ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கிற"
"நான் வெச்சிருக்கல மாமா இதெல்லாம் இந்த ரெண்டு வருஷமா ஸ்கூல் பஸ் மூலம் நடந்த விபத்துங்க..இன்னும் இருக்கு.ஒவ்வொன்னும் நடக்கும்போதெல்லாம் இப்ப பண்றாங்களே கவர்ன்மென்டு, எல்லா ஸ்கூல்வேனையும் சோதனை போடுறோம், கைது பண்றோம்ன்னு அப்பவும் இதே மாதிரிதான் செஞ்சாங்க ,அப்புறம் சூடு தணிஞ்ச உடனே அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க.தொடர்ந்து இப்படி விபத்து ஆயிட்டே இருக்கு.அப்பவே இதை முறையா பண்ணியிருந்தாங்கன்னா இந்த மாதிரி விபத்துங்க இப்ப ஏற்பட்டிருக்காது"
"ஆமா அம்மணி நீ சொல்றது சரிதான் கவர்மென்ட்டே நாங்கதான்னு சொல்லிக்கிட்டு இருக்கிற அரசியல்வாதிங்களோட சொந்தக்காரங்க அவுங்க இவுங்கதான் ஸ்கூல் வச்சி நடத்துறாங்க. ஓட்ட ஒடசலா இருக்கிற வேனுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்து பெர்பிட் வாங்கி இப்படி ஓட்டுறாங்க இதெல்லாம் எப்ப நிற்குமோ அப்பதான் இந்த மாதிரி விபத்துங்க ஏற்படாது அம்மணி"
"ஆமா மாமா இதைவிட கொடுமையிலும் கொடுமை நேத்து பாருங்க வேலூர் ஸ்கூல் பஸ்ஸில இருந்து இறங்கின சுஜிதாங்கிற குழந்த மேல அதே பஸ் மோத அந்த குழந்தை இறந்து போச்சு"
"ஆமா அம்மணி நானும் படிச்சேன்.இந்த விசயத்துல அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வரோனும்..இனிமே இந்த மாதிரிநடக்கக்கூடாது அம்மணி"
"ஆமா மாமா இனிமேலாவது அரசு இதுக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்ன்னு நம்பலாம்"
என்று அம்மணி சொல்ல,
"அம்மா.. என்னம்மா ஸ்கூலக்கு டைம் ஆச்சு இன்னும் ஸ்கூல் வேனைக் காணோம்"
என்ற அவர்களின் மகன் முருகேசன் புத்தகப் பைய துக்கிக் கொண்டு அவர்களது அருகில் வர,
"டே..முருகேஷா..என்ர கண்ணு.. இனிமே நீ ஸ்கூலுக்கு வேன்ல போகதடா ராசா.அப்பன டிவிஸ் 50 ல கொண்டாந்து உடச்சொல்றேன்.உங்க ஸ்கூல் வேன ஏற்கனவே ஒருத்தன் பேரிச்சம்பழத்துக்கு எடைக்கு கேட்டான்னு சொன்னியேடா கண்ணு..இனிமே ஸ்கூல் வேனுங்கற ஏவாரமே நமக்கு வேண்டா..நமக்குன்னு இருக்கிறது ஒரே புள்ள..என்னங்க மாமா நான் சொல்றது"
"ஆமா அம்மணி..இனிமே நானே பையனை கூட்டிட்டு போய் ஸ்கூல்ல உட்டுப்போட்டு வந்துடுறேன்"
என்று சொன்ன சின்ராசு தனது டிவிஎஸ் 50 யை நோக்கிப் போனான்.
------------------------------------------------------------------------------------------------------------
கதை வடிவிலான சமூக அவலக்கதை
ReplyDelete///"டே..முருகேஷா..என்ர கண்ணு.. இனிமே நீ ஸ்கூலுக்கு வேன்ல போகதடா ராசா.அப்பன டிவிஸ் 50 ல கொண்டாந்து உடச்சொல்றேன்.உங்க ஸ்கூல் வேன ஏற்கனவே ஒருத்தன் பேரிச்சம்பழத்துக்கு எடைக்கு கேட்டான்னு சொன்னியேடா கண்ணு..இனிமே ஸ்கூல் வேனுங்கற ஏவாரமே நமக்கு வேண்டா..நமக்குன்னு இருக்கிறது ஒரே புள்ள..என்னங்க மாமா நான் சொல்றது"///
எதார்த்தம் வாழ்த்துகள்
ஓட்டை ஒடசல். நல்ல அலசல். அரசியல்வாதிகளின் சொந்த பந்தங்களே பள்ளிகளை நடத்துபவர்கள் என்று சொல்லி இனி எப்படி இருக்கும் என்ற கணிப்பினையும் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDelete//இன்னும் ஒரு மாசம் ரெண்டு மாசம் ஆனதுக்கப்புறம் பாருங்க இவங்களும் அதை மறந்துவாங்க..அப்புறம் இதே மாதி ஏதாவது அசம்பாவிதம் நடந்தா மறுபடியும் விதிமுறை தண்டனைன்னு ஒரு மாசம் பரபரப்பாக்குவாங்க" //
என்ற அம்மணியின் வார்த்தைகளில் உண்மை இல்லாமல் இல்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
Deleteநல்ல பதிவு!
ReplyDeleteநன்றி.
DeleteAvalam niraintha kathai
ReplyDeleteநன்றி..
Deleteகுழந்தைகளின் எதிர்காலத்தை விட நிகழ்காலம் தான் அச்சமாக உள்ளது.
ReplyDeleteநிச்சயமாக..
Deleteஒரு செய்தியை அழகாய் கதையாக சொல்லி செல்லும் விதம்
ReplyDeleteஅருமை!...பாடசாலைகளில் நடக்கும் இவ்வாறன கவனக் குறைவுகளுக்கு
தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்தேதான் தீர வேண்டும் .பிஞ்சுக் குழந்தைகளின்
மரணம் நெஞ்சைப் பதற வைக்கின்றது!...நல்ல பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோ .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..
Deleteஅருமையாக எடுத்தியம்பியுள்ளீர்கள்.
ReplyDeleteநன்றி..
Deleteஃபார்முக்கு வந்துட்டீங்களாக கவிஞரே... அம்மணி மட்டுமில்ல... இப்ப எல்லாப் பெற்றோருமே இப்படித்தான் ஸ்கூல் பஸ், வேன்னு சொன்னாலே பதர்ற நிலைமை ஆயிடுச்சு. அரசு எடுக்கற கடுமை(?)யான நடவடிக்கைகள் சூடு ஆறினதும் மறக்கப்பட்டுடும்னு அம்மணி சொன்னது ரொம்பச் சரி. வேதனையான நிகழ்வைப் பகிர்ந்த உரையாடல்.
ReplyDeleteஆமாம்..இனி சேவல் தொடர்ந்து கூவும் தலைவரே..
Deleteஜியான் பள்ளிப் பேருந்தின் ஓட்டையால் இறந்தது ஸ்ரியா
ReplyDeleteசோனியா கட்சியின் ஓட்டைஆட்சியால் இரந்து கொண்டிருக்கிறான் இந்தியன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஉறங்குபவர்களை எழுப்பும் கொக்கரக்கோ சத்தம்.
ReplyDeleteநிச்சயமாக..
Deleteஅரசின் கும்ப கர்ண் தூக்கத்தையும்
ReplyDeleteதிடீர் முழிப்பையும்
அழகாகச் சாடிப் போகும் அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
Deletetha.ma 8
ReplyDeleteஉங்கள் வித்தியாசமான பார்வை புதிது .. அந்த பாப்பாவை மீண்டும் கொண்டு வர முடியாதே... பாவம்
ReplyDeleteசமூக அவலத்தைச் சொல்லும் கொக்கரக்கோ! என்ன செய்வது விபத்து வந்த பின் துடிப்பதும் பின் மறப்பதும் வாழ்வாகி விட்டது!
ReplyDeleteavalm ayya!
ReplyDeletenaadla..
theriviththamaikku mikka nantri!
மனதை பாத்தித்த செய்தியை நீங்கள் தந்தவிதம் மிக அருமை..அது போல சென்னை பதிவர் கூட்டமும் உங்களின் தொகுப்பில் மிக மர்களமாக இருக்கும் என நினைக்கிறேன் பதிவர் கூட்டம் முடிந்ததும் கணேஷ் மற்றும் உங்களின் கைவண்ணத்தில் வரும் கூட்ட செய்தியை இப்போதிலிருந்தே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்...உங்கள் அனைவரின் முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்
ReplyDeleteமிகுந்த :(((
ReplyDeleteஇனியாவது விழிப்பு வரட்டும்.
நாமதான் நம்ம பிள்ளைங்க மேல அக்கறை எடுத்து அவங்க சார்ந்திருக்குற எல்லா விஷயத்தையும் கண்கானிக்கனும். அரசாங்கம் செய்யும்ன்னு அலட்சியமா இருக்க கூடாது. அவங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு டாஸ்மாக் விற்பனை கூட்டனும், எதிர் கட்சி மேல வழக்கு போடனும், பாராட்டு விழா நடத்திக்கனும்ன்னு.
ReplyDeleteவிபத்து நடந்தால்தான் நடவடிக்கை என்பது தமிழக அரசின் கேலிக்கூத்து! காசுக்கு அலையும் கட்சிகளும் தலைவர்களும் இருக்கும் வரை இந்த வேதனை தொடரவே செய்யும். நம் பிள்ளைகளை நாமே அழைத்து சென்று விடல் என்ற செயல் சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணி கட்டுரை! அறிஞர்களின் பொன்மொழிகள்! http://thalirssb.blogspot.in
சமூகத்திடம் சென்றடைய வேண்டிய சமூக அவல கதை...
ReplyDeleteஅருமை அண்ணா.....
உறங்குபவர்களை எழுப்பி விடலாம். உறங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பி விட முடியாது தோழரே...
ReplyDeleteஸ்ருதி மறைந்த அந்நாளில் தில்லியில் ஒரு விபத்து. பேருந்திலிருந்து தலையும் கையும் வெளியே நீட்டி ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டிருந்த சிறுவனைக் கவனிக்காது ஓட்டுனர் பேருந்தை வேகமாக எடுக்க, பக்கத்தில் இருந்த மின்சாரக் கம்பத்தில் தலை மோதி அச்சிறுவன் இறந்த சோகமான விபத்தும் நடந்தது. கண்கெட்ட பின்னே என்ன செய்தாலும் பலனுண்டோ....