புது வரவு :
Home » , , » சென்னை பதிவர் சந்திப்பு - தேதி மாற்றம்

சென்னை பதிவர் சந்திப்பு - தேதி மாற்றம்


                           சென்னை பதிவர் சந்திப்பு - முக்கிய அறிவிப்பு
                                                          தேதி மாற்றம்

          ணக்கம் தோழமைகளே..ஏற்கனவே முடிவு செய்தபடி சென்னை பதிவர் சந்திப்பு குறித்த ஆலோசனை கூட்டம் 29.7.2012 நேற்று மாலை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்றது.

       இந்த முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தில் நான்,கவிதை வீதி சௌந்தர்,மின்னல் வரிகள் கணேஷ்,மெட்ராஸ் பவன் சிவக்குமார்,வீடு திரும்பல் மோகன்,பட்டிக்காட்டான் பட்டினத்தில் ஜெயக்குமார்,கரைசேரா அலை அரசன்,தென்றல் சசிகலா,டி.என்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசித்தோம்.நிகழ்வை எப்படி சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்தோம்.

         இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும் இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலையும்  வீடு திரும்பல் மோகன்குமார் ஓரிரு நாட்களில் அவருடைய வலைப்பூவில் பதிவாக இடுவார்.
    
                                       தேதி மாற்றம்           19.8.2012 ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பை நிகழ்த்தலாம் என திட்ட்மிட்டு அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சந்திப்பிற்கான நாளை முடிவு செய்யும் போது அனைத்து பதிவர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் வண்ணம் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையை தேர்ந்தெடுத்தோம்.


           ஆனால் அந்த நாளில் இசுலாமிய திருவிழாவான ரம்ஜான் வருவதை அறியாமற்போய்விட்டோம்.

         
           இந்நாளில் சந்திப்பை வைத்தால் இசுலாமிய தோழர்களால் இந்த சந்திப்பில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.இசுலாமிய தோழர்கள் தொடர்பு கொண்டு தாங்கள் கலந்து கொள்ள முடியாத நிலை விளக்கினர்.எனவே இது குறித்து நேற்று விவாதம் நடந்த போது அவர்களும் இதில் கலந்து கொள்ளும் வண்ணம் 26.08.2012 ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது.ஒருநாள் முழுவதும் இந்த சந்திப்பு நடபெறும்.முழுக்க முழுக்க இது பதிவர்களுக்கான நாளாக இருக்கும் வண்ணமே ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
          
           19.8.2012 அன்று பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்த தோழமைகளோடு இது குறித்து சொன்னபோது அவர்களும் மாற்றுக்கருத்து எதுவும் தெரிவிக்காமல் இது சரியான முடிவுதான் எனவே அன்றைய தின முன்பதிவை ரத்து செய்துவிட்டு 26.8.2012 அன்றைய தேதியில் முன் பதிவு செய்து கொள்கிறோம் என சொல்லியிருக்கிறார்கள்.அவர்களின் புரிதலுக்கும்,ஒத்துழைப்பிற்கும் நன்றி.

            
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

31 comments:

 1. எவ்வளவோ அலுவல்களுக்கு நடுவில் சீரிய முயற்சி எடுத்து நிகழ்ச்சி சிறப்பாய் நடக்க ஏற்பாடு செய்கிறீர்கள். அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. இதை தாங்க அப்போவே அறிவிப்பு வெளியிட்டபோதே யாருடனும் ஆலோசிக்காமல் முடிவெடுத்துட்டிங்களேனு ஒரு பின்னூட்டத்தில் சொன்னதற்கு நேரடியாக கூட பதில் சொல்ல உங்களுக்கு மனமில்லை.மறைமுகமாக சிலர் நம்பிக்கை இல்லாமல் பேசுறாங்கன்னு ஒரு பதிவு வேறப்போட்டிங்க

  இப்போவாது மற்றவர்களிடம் கருத்துக்கேட்டு செயல்ப்பட்டிங்களே மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தோழரே..முதலில் அடித்தளம் அமைப்பது முக்கியம்.அடித்தளம் அமைக்கவே ஆலோசனை கூட்டம் வைத்தால் விடை காண ஆறு மாதத்திற்கு மேலாக ஆகிவிடும்.எனவே ஐவர் அடித்தளம் இட்டோம்.அது முதல் கட்டம்.இப்போது ஆலோசனை செய்து அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறோம்.எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.கவலையை விடுங்கள்.உங்கள் கருத்துக்கு மறுப்பேதும் இல்லை.பதிவர் சந்திப்பு நன்றாக நடக்க வேண்டும் என விரும்பும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.

   Delete
 3. நல்ல முடிவு! வரவேர்க்கபட வேண்டியது! சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. விபரம் அறிந்தேன்.... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. பயணசீட்டை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்..

   Delete
 6. விபரம் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. மிக அதிகமான அளவில் அனைத்து பதிவர்களும் கலந்து கொள்ளும் வண்ணம் விழா சிறப்பாக நடைபெறும் என்று நம்புவோம் ; முயலுவோம் நன்றி

  ReplyDelete
 8. அசத்திடலாம்ணே, நண்பர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள.

  சென்னைப்பதிவர்கள் சந்திப்புன்றத ”சென்னையில் பதிவர்கள் சந்திப்பு”னு மாத்துனா சரியா இருக்குமாண்ணே..

  ReplyDelete
 9. நாள் தள்ளி தள்ளி போக ஆவலும் மிக அதிகமாக போய்கொண்டிருக்கிறது. எல்லாம் நல்லபடியாகவும் சிறப்பாகவும் நடக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. wishes to make at the best........

  ReplyDelete
 11. மிக்க..நன்றி....

  விரைவில்....சந்திப்போம்....

  ReplyDelete
 12. தேதி மாற்றம் எனக்கு வசதி & மகிழ்ச்சி!
  சந்திப்பு சிறக்க என் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் !

  ReplyDelete
 13. சிறப்பான முடிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. வணக்கம் தோழர்..
  தேதி மாற்றம் எனக்கும் வசதியாக போய்விட்டது..
  நிச்சயம் நானும் கலந்துகொள்கிறேன்..
  அழைப்பு விடுக்கிறேன் தங்கள் தொலைபேசிக்கு...
  நன்றி..
  பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. மகிழ்ச்சி. விழா சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. ungal muyarchikku
  manam kanintha vaazhthukkal!

  ReplyDelete
 17. அறிந்து கொண்டேன்.
  சந்திப்போம்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 18. விழா சிறக்க வாழ்த்துகள் தோழரே....

  ReplyDelete
 19. தகவலுக்கு நன்றி! மாற்றம் ஒன்றும் ஏமாற்றம் இல்லை! எல்லாம் நன்மைக்கே!

  ReplyDelete
 20. மகிழ்ச்சி விழ சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. பதிவர் சந்திப்பு சிறப்பாகவும் அநேக இதயங்களை இணைக்கும் விழாவாகவும் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. அறிவிப்புக்கு நன்றி

  ReplyDelete
 23. மகிழ்ச்சி. விழா சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. மகிழ்ச்சி..தொடர்பு கொள்கிறோம்..

  ReplyDelete
 25. தேதி மாத்தினது எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. இல்லேன்னா மும்பைலேந்து வந்து கலந்து கொள்ள முடியாது. 26 நான் சென்னையில் தான் இருப்பேன். எழுத்து மூலமே அறிமுகமாகி இருக்கும் பதிவுலக நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிரேன். சென்னையில் சந்திக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி அம்மா

   Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com