புது வரவு :
Home » , , » சென்னை பதிவர் சந்திப்பில் தென்றலின் கனவு நனவாகப்போகிறது

சென்னை பதிவர் சந்திப்பில் தென்றலின் கனவு நனவாகப்போகிறது

         வணக்கம் தோழமைகளே..வரும் 26 ந்தேதி நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சென்னைப்பதிவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

       அந்த நாள் முழுவதும் பதிவர்களின் நாளாக இருக்கும் வகையில் தான் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவர்களுக்கு இது திருவிழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..

       விழா குறித்து அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன்.அந்த வரிசையில் இன்றைய பதிவில் பதிவர் சந்திப்பின் போது நடக்கவுள்ள ஒரு சிறப்பு நிகழ்வை சொல்ல விழைகிறேன்..

      சென்னையில் பதிவர் சந்திப்பை நிகழ்த்தலாம் என திட்டமிட்ட நாளிலிருந்து பெண் எனும் பாகுபாடில்லாமல் நம்மோடு கலந்து இன்று வரை பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளிலும் ஆலோசனைகளிலும் தனது பங்கை செலுத்தி வரும் பதிவர்தான் 'தென்றல்' எனும் வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி சசிகலா .

கவிதை நூலின் அட்டைப்படம்


      தனக்கும் கவிதை எழுத தெரியும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயிற்சிக் களமாக இருப்பது வலைப்பூ.அதை வழங்கிய கூகுள் நிறுவனத்திற்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.அதன்படி தனக்குள் இருந்த கவிதை எழுதும் ஆற்றலை வலைப்பூவின் துணைகொண்டு அதன் மெருகேற்றிக் கொண்டவர் சகோதரி சசிகலா.தினம் ஒரு கவிதை என்று தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருபவர்.

       சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என பேச்சு அடிப்பட்டதிலிருந்ததே அன்றைய சிறப்பான நாளில் தனது முதல் கவிதை புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு தான் வலைப்பூவில் எழுதி பாராட்டுக்களைப் பெற்ற கவிதைகளைத் தொகுத்து 'தென்றலின் கனவு' எனும் புத்தகத்தை தயார் செய்திருக்கிறார்.இதன் மூலம் தென்றலின் கனவு நனவாகிறது..

             கவிதை நூல் வெளியீட்டு விழா

                                        நேரம்:மாலை 3 மணி
                                        வெளியிடுபவர்: திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்
                                        நூலைப் பெறுபவர்: திரு.சிரிப்பானந்தா அவர்கள்
                                        தலைமை வகித்து நூற்குறிப்புரை:புலவர் சா.இராமாநுசம் அவர்கள்
                                        ஏற்புரை: சசிகலா

          தமிழ் வலைப்பதிவர்களின் சார்பாகவும் தென்றல் சசிகலாவின் சார்பாகவும் பதிவர்களை வருக வருக என வரவேற்கிறோம்..

                                                                                                                                     மகிழ்ச்சியுடன்,
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

29 comments:

 1. சகோதரி சசிகலா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. சசி அக்காவிற்கு என் வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 3. சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் சசி !
   அட்டைப்பட வடிவமைப்பு மற்றும் வண்ணம்
   கவரும் வகையில் உள்ளது.

   Delete
 4. பதிவர்கள் அனைவருக்கும்
  மகிழ்வுதரும் செய்தி
  பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கவிதாயினி சசிகலா அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete


 6. சசிகலாவுக்கு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. தென்றலின் கனவு நனவாகியதற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. புதிதாய் பூத்த வாசமுள்ள பூவினை போல...
  ஒலிம்பிக்கில் நம்மவர்கள் தங்கம் வென்றதை போல...
  ஏழையின் சிரிப்பை நேரில் பார்த்ததை போல...
  பெற்றோரை வணங்கிய மகனை பார்த்தது போல...
  தொலைக்காட்சி இல்லாத வீட்டினை கண்டது போல...
  சின்னத்திரை சீரியல் பார்க்காத பெண்களை கேள்விப்பட்டது போல...
  சண்டையிட்டு கொள்ளாத உடன்பிறப்புக்களை வாழ்த்துவதை போல...
  எனது உள்ளம் மகிழ்கின்றன இந்த நற்செய்தியை கேட்டதும்....
  வாழ்த்துகிறேன் சசி கலாவின் புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்தேற...

  ReplyDelete
 9. நல்லது. தென்றல் சசிக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வலைப்பூவில், தமிழ்க் கவிதைகளால் தாலாட்டும் தென்றலுக்கு ஒரு தாலாட்டு! வாழ்த்துக்கள்!


  ReplyDelete
 11. உங்கள் வாழ்த்துக்களோடு கவி என் பயணம் சிறக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன் . தங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தையும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிவிட்டு சிறப்பித்த சகோதரர் மதுமதிக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 12. sasi!

  ungalukku manamaarntha vaazhthukkal!

  ReplyDelete
 13. சகோதரி சசிகலா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்...! (TM 9)

  ReplyDelete
 14. சகோதரியை வாழ்த்துகிறேன், நம் பதிவர்கள் விழா சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.. இந்த விழாவை ஒருங்கிணைக்கும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. 'தென்றல்' சசிகலாவுக்கு நல் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 16. தென்றலின் கனவு நனவாகப்போவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் அன்பு தோழியே ....தென்றலாய் வீசுங்கள்
  அன்புடன் யசோதா காந்த் ...

  ReplyDelete
 18. கவிஞருக்கு என் வாழ்த்துகள்

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் சகோதரி சசி... உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்...மதுமதி சார் உங்களுக்கும் நன்றிகள்

  ReplyDelete
 20. அக்காவிற்கு என் வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 21. சசிகலாவுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. வாழ்த்துகள் சசி.

  ReplyDelete
 23. நண்பிக்கு வாழ்த்துக்கள் !! நலமோடு,வளமோடு படைப்புகளோடு

  ReplyDelete
 24. சென்னையில் தமிழ் பதிவர்கள் விழா வெற்றியடைய வாழ்த்துகிறேன்!

  மேலே தமிழ் பதிவர்கள் திருவிழா ஆகஸ்ட் 26 என்று side bar -ல் உள்ளத்திற்கு code தர முடியுமா? எனது பதிவில் சேர்க்கலாம் என்று இருக்கிறேன்!

  ReplyDelete
 25. தோழிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்....:-)

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com