புது வரவு :
Home » , , , » சென்னை பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்து கூறிய திரட்டிகள்

சென்னை பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்து கூறிய திரட்டிகள்


                 ணக்கம் தோழமைகளே..

           வரும் ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி ஞாயிறு தமிழக தலைநகரமான சென்னையில் இதுவரை இல்லாத  அளவில் மாபெரும் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.அதற்கான அழைப்பிதழ், நம் தோழர்களின் மூலமாக அனைத்து பதிவர்களுக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்..

          இப்போது இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்வதற்கான ஆவல் அனைத்து பதிவர்களிடத்திலும் நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்.நிறைய பதிவர்கள் தங்களின் வருகையை உறுதிபடுத்தியவாறு இருக்கிறார்கள்.பல பதிவர்கள் அன்று தங்களுக்கும் பணியை வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்..


       
           இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடை பெற்று வருகிறது..
 இச்சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வமிருந்தும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையிலுள்ள வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழக பதிவர்கள்   தொடர்ந்து வாழ்த்துக்களை சொல்லி இன்னும் சிறப்பாக செயலாற்றும் வண்ணம் ஊக்கமளித்து வருகிறார்கள்..

          இந்த மாபெரும் சந்திப்பு பற்றி அறிவித்த முதல் அறிவிப்பைக் கண்டதும் (சென்ற மாதம்)திரட்டிகளில் முக்கியமாக கருதப்படும் வலையகம் திரட்டி நம்மிடம் தொடர்பு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் திரட்டியின் முகப்பில் பதிவர் சந்திப்பிற்கான விளம்பரத்தையும் வைத்து இருக்கிறது.வலையகம் திரட்டிக்கு ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


ads
         

திரட்டி உலகில் அதிரடியாய் நுழைந்து பதிவர்களை அதிக அளவில் ஈர்த்து வரும் மற்றொரு திரட்டியான தமிழ் பதிவர்கள் திரட்டி,சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பிற்கு பேருதவியாக இருக்கிறது என்பதை இங்கே சுட்டிக் காட்ட கடமை பட்டிருக்கிறேன்.

         இப்படியொரு சந்திப்பு நடக்கவிருப்பதைக் கண்டு உடனே எங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் சந்திப்பு சிறப்பாய் அமைய எங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் அதை செய்தும் வருகிறார்கள்.



          இந்த சந்திப்பை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருந்த இச்சூழலில் அந்த திட்டம் நடக்க மிகவும் உறுதுணையாக தமிழ் பதிவர் திரட்டி இருந்து வருகிறது.அந்த திரட்டிக்கும் அந்த திரட்டியின் நிறுவனமான மக்கள் சந்தை.காம் மற்றும் அந்நிறுவனத்தின் தோழமைகளுக்கும்  தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..

                                                                                                                                        நன்றியுடன்,
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

15 comments:

  1. நானும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள் பல...(TM 3)

    ReplyDelete
  4. திரட்டிகளுக்கு நன்றி.

    ReplyDelete
  5. திரட்டிகளுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள் .

    ReplyDelete
  7. நமக்கு நாமே நன்றி சொல்லிக்கொள்வது ஞாயமா....?

    தோழரே இது நமது சந்திப்பு..

    ReplyDelete
  8. வாழ்த்துகள் நண்பர்களே...!

    ReplyDelete
  9. வாழ்த்து வழங்கிய திரட்டிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete
  10. வாழ்த்துத் தெரிவித்தல் இன்னும் பல நல்ல முயற்சிகளில் ஈடுபடுபவர்களை ஊக்கப்படுத்த திரட்டிகளுக்குத் தூண்டுதலாக இருக்கும் அல்லவா? நானும் என் இதயம் நிறைந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  11. திரட்டிகளுக்கு நன்றி நன்றி.

    ReplyDelete
  12. வாழ்த்துகள். திரட்டிகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. தமிழ் பதிவர்கள் திரட்டிக்கு நன்றி..

    வலைப் பதிவுகளையும் வலைத்திரட்டியில் இணைத்து வாசக நண்பர்களை பெருக்குவோமே..!

    ReplyDelete
  14. தங்கள் வலைப்பக்கத்தின் வாயிலாகத் திரட்டிகளுக்கு எனது நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்ரீ....

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com