புது வரவு :
Home » , , , » தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரம் கொடுக்க நிறுவனம் தயார்

தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரம் கொடுக்க நிறுவனம் தயார்

        வணக்கம் தோழர்களே.. தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரம் கிடைக்காதா?  தமிழில் வலைப்பூக்கள் நடத்தி வரும் தோழர்கள் பெரும்பாலும் கேட்கின்ற வினா இதுதான்.

        வலைப்பூக்களுக்கு விளம்பரம் தருவதில் முதன்மையாக செயல்பட்டு வருவது கூகுள் ஆட்சென்ஸ்.ஆனால் தமிழ் வலைப்பூக்களுக்கு அது பெரும்பாலும் கிடைப்பதில்லை.அப்படி விண்ணப்பத்து ஒருவேளை விளம்பரம் கிடைத்தாலும் தினமும் 1000 பக்கப்பார்வைகள் தளத்திற்கு தொடர்ந்து இருக்கவேண்டும்.இல்லையென்றால் ஆட்சென்ஸ் தன் கணக்கை நிறுத்தி விடும்.
         தன் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு பதிவிடும் பதிவர்களுக்கு சிறு வருமானத்தை ஈட்டிக்கொடுக்க முன்வந்திருக்கும் நிறுவனம் தான் மக்கள் சந்தை.காம் ஆமாம் தோழர்களே..சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்பிற்கு தங்களின் மேலான உதவியை செய்து வரும் சந்தை.காம் இப்போது தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரங்களை பெற்றுத் தர ஏற்பாடு செய்து வருகிறது.

         விரைவில் தனது சேவையை தொடங்க உள்ள இந்த நிறுவனம் ஆரம்பத்தில் முன்னணியிலுள்ள 100 வலைப்பூக்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு விளம்பரம் தர இருக்கிறது.அடுத்த கட்டமாக இன்னும் 100 வலைப்பூக்களை தேர்ந்தெடுத்து விளம்பரம் தரவும் ஒரு வருடத்தில் அனைத்து தமிழ் தளங்களுக்கும் விளம்பரம் கொடுத்து பதிவர்களுக்கு சிறு வருவாயை பெற்றுத் தரும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

         அந்நிறுவனத்திற்கு பதிவர்களின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.


          இது குறித்து மக்கள் சந்தை .காம்  நிறுவனர் திரு சீனிவாசன் அவர்கள் ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு 'தமிழ் வலைப்பதிவர்கள் வருமானம் ஈட்டும் வழிகள்' என்ற தலைப்பில் பேச இருக்கிறார்.அவரது பேச்சு தமிழ் வலைப்பதிவர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்குமென நம்புவோம்..

          இது குறித்து நேற்று தமிழ்வாசி பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவைக் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
 

                                                                                                                                  தோழமையுடன்,
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

  1. அனைவரையும் மகிழ்விக்கும்
    அருமையான தகவல்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி ஐயா..

      Delete
  2. நல்லதொரு தகவல்... பல பேருக்கு உதவும்... நன்றி சார்...(TM 1)

    ReplyDelete
  3. நல்ல விடயம் அவர்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. nice news
    come to my blog www.suncnns.com

    ReplyDelete
  5. கேட்பதற்கே மகிழ்வாய் உள்ளது... திரு சீனிவாசன் அவர்களின் உரையைக் கேட்க சீனிவாசனாகிய நான் ஆவலுடன் உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. ஆவல் அதிகரிக்கட்டும்..

      Delete
  6. விளம்பரத்தின் மூலமாவது சம்பாதிக்கலாமே என்று நம்பிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற நண்பர்களுக்கு உதவும். வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் மக்கள்சந்தை.காம் நிறுவனத்தாருக்கு எனது நன்றி.

    தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..!

    ReplyDelete
  7. நல்லதொரு தகவல்...நன்றி ஐயா...

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  9. பதிவர்கள் அனைவரும் வரவேற்கக்கூடிய செய்தி.நன்றி மதுமதி

    ReplyDelete
  10. பயனுள்ள நல்லதொரு கதிவு.வாழ்த்துகளும் நன்றிகளும்.

    ReplyDelete
  11. சிறப்பான தகவல்! நன்றி!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com