வணக்கம் தோழர்களே..ஆகஸ்டு மாதம் சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது . இந்த சந்திப்பு குறித்த செய்திகளை ஒரேயடியாய் பதிவிடாமல் தினமும் ஒவ்வொரு செய்தியாய் இடலாம் என திட்டம்.எனவே இந்த பதிவில் அன்றைய நாளில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி குறிப்பிடுகிறேன்.
இந்த பதிவர் சந்திப்பை மிகவும் சிறப்பானதாக மாற்ற வாரமொருமுறை சென்னையில் உள்ள பதிவர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து வருவது உங்களுக்கெல்லாம் தெரியும். தனக்கு இடையூறு ஏற்படும் என்று நினைக்காது ஒவ்வொரு சந்திப்பிற்கும் தனது டிஸ்கவரி புத்தக நிலையத்தில் இடம் கொடுத்து ஆலோசனை நடத்த மிகவும் உதவிகரமாக இருந்து வருபவர் அன்புத் தோழர் வேடியப்பன் அவர்கள்.அவர்களுக்கு தமிழ் வலைப்பதிவர்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.
இன்னுமொரு முக்கியமான அம்சம் என்னவெனில் பதிவர் சந்திப்பு நடைபெறும் அன்றைய நாளில் டிஸ்கவரி புத்தக நிலையம் சிறப்பானதொரு புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து புத்தங்களையும் பதிவர்கள் அரங்கிலேயே அவரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவர் சந்திப்பன்று நடக்கும் புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கும் பதிவர்களுக்கு ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10 சதவீதம் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
எனவே பதிவர்களே! உங்களுக்குத் தேவையான புத்தகங்களை தோழர் வேடியப்பனை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொண்டீர்களானால் சந்திப்பன்று நீங்கள் பணத்தைக் கொடுத்து புத்தகங்களை அவரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உங்களின் சிறந்த நண்பர்களில் ஒருவராக புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..
நன்றியுடன்,
விழா புதிய எல்லைகளை எட்டிக் கொண்டிருக்கிறது!
ReplyDeleteபுத்தகங்களை நேசிப்பவர்கள் அனைவரும் தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கி மகிழ நல்ல வாய்ப்பு. இயன்ற அளவில் அனைவரும் பயன்படுத்திக் கொள்வோம் கவிஞரே... மிக்க நன்றி.
ReplyDeleteஆஹா... ஒவ்வொரு தகவலும் சிறப்பாக உள்ளதே...
ReplyDelete/// உங்களின் சிறந்த நண்பர்களில் ஒருவராக புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ///
அருமை... நன்றி...
Ok. Magizhchi
ReplyDeleteநல்லது சார்
ReplyDeleteநாளொரு நல்ல தகவல்களாகக் கொடுத்து
ReplyDeleteஅசத்துகிறீர்கள்
அவசியம் இது பதிவர்கள் அனைவருக்கும்
மகிழ்வைத் தரும் செய்தி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 6
ReplyDeleteதொடங்குவதில் மட்டுமே தாமதம் ,தயக்கம் .தடங்கள் ......
ReplyDeleteதொடங்கியபின் அனைத்தும் ஆரவாரம் அற்புதம் ....
புத்தகம் நம் முதல் நண்பன் நிச்சயம் கைகுளுக்குவோம்
நல்ல செய்தி நண்பரே...
ReplyDeleteதங்களின் அலவிடமுடியா ஆர்வத்திற்கும், அதற்குள் நானும் இருக்கிறேன் என்பதிலும் மிகுந்த மகிழ்ச்சியும் , தன்னம்பிக்கையும் அடைகிறேன்.
ReplyDeleteதங்களின் குதூகலத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி!
ReplyDeleteஒவ்வொரு அறிவிப்பா பாக்கப் பாக்க சந்தோஷமா இருக்கு. எல்லாருக்கும் நல்வாழ்த்துக்கள். நான் அந்த தேதிகள்ல குடும்பத்தோட வெளியூர் போக வேண்டி இருக்கறதால (முன்னாடியே ப்ளான் பண்ணது) வரமுடியலைங்கறதை நினைச்சா வருத்தமா இருக்கு. விரிவா எல்லாரும் போடற பதிவப் பாத்து ஆறுதல் பட்டுக்கறேன். மறுபடி எல்லாருக்கும என் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete// உங்களின் சிறந்த நண்பர்களில் ஒருவராக புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் // சரியா சென்னீங்க.
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteதமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me
ReplyDelete