தமிழ்மண நட்சத்திர இடுகை - 3
11.09.2012
பாதம் தொட்டு கேட்கிறேன் யான்
ஏதம் ஏதும் செய்தேனா நான்
உடலத்தில் குடியிருக்கும் சின்னஞ் சிறு
படலத்திலும் உரவுமில்லை உறவுமில்லை ஏனோ?
மெய்யுள் ஊறிய உணர்வுக ளெல்லாம்
செய்யுள் வடிவிலே பொங்கி ஒழுகிறதே!
என்கை வெண்கை தானோ அதேனோ?
வெண்கை செங்கையாக எக்கருமஞ் செய்ய?
கனலியா யென்நெஞ் செரிந்து கொண்டிருக்கிறதே
புனலியா யென்னுள் கலந்திருப்பவ ளெவளோ?
யாயிருக்கிறாள் அவளுக்குச் சேய் இருக்கிறாள்
வாய் காணும் பரிவெல்லாம் அவளுக்குத் தானோ?
கவலைகொண்டு அவளைக் கொண்ட எனதங்கம்
உவலை போன்றே உருகி வெடிக்கிறதே
உம்மையில் யாதேனும் ஏதஞ் செய்தேனோ?
இம்மையில் இடுக்கணும் யானும் இனிந்துருக!
போதமிருக் கிறதெனக்கு ஆனாலுங் கூட
பேதமிருக் கிறதென்னை பெற்றவருக்கும் உற்றவருக்கும்
புகரிலா யாக்கையாய் யான் பிறப்பெடுத்தும்
நிகரிலா துன்பந் தந்தது இறையென்பவனோ?
தியானஞ் செய்தும் தவ மிருந்தும்
மயான அமைதி காணும் சூழலில்லை
இறையே!மகிழ்கிறாயோ?யார் நீ
முறையே கண்முன் நில் பார்ப்போம்.
(2000 ல் வெளிவந்த எனது "தலையெழுத்திலோர் பிழையெழுத்து" நூலில் இடம் பெற்ற கவிதை)
11.09.2012
எக்கருமஞ் செய்ய?
பாதம் தொட்டு கேட்கிறேன் யான்
ஏதம் ஏதும் செய்தேனா நான்
உடலத்தில் குடியிருக்கும் சின்னஞ் சிறு
படலத்திலும் உரவுமில்லை உறவுமில்லை ஏனோ?
மெய்யுள் ஊறிய உணர்வுக ளெல்லாம்
செய்யுள் வடிவிலே பொங்கி ஒழுகிறதே!
என்கை வெண்கை தானோ அதேனோ?
வெண்கை செங்கையாக எக்கருமஞ் செய்ய?
கனலியா யென்நெஞ் செரிந்து கொண்டிருக்கிறதே
புனலியா யென்னுள் கலந்திருப்பவ ளெவளோ?
யாயிருக்கிறாள் அவளுக்குச் சேய் இருக்கிறாள்
வாய் காணும் பரிவெல்லாம் அவளுக்குத் தானோ?
கவலைகொண்டு அவளைக் கொண்ட எனதங்கம்
உவலை போன்றே உருகி வெடிக்கிறதே
உம்மையில் யாதேனும் ஏதஞ் செய்தேனோ?
இம்மையில் இடுக்கணும் யானும் இனிந்துருக!
போதமிருக் கிறதெனக்கு ஆனாலுங் கூட
பேதமிருக் கிறதென்னை பெற்றவருக்கும் உற்றவருக்கும்
புகரிலா யாக்கையாய் யான் பிறப்பெடுத்தும்
நிகரிலா துன்பந் தந்தது இறையென்பவனோ?
தியானஞ் செய்தும் தவ மிருந்தும்
மயான அமைதி காணும் சூழலில்லை
இறையே!மகிழ்கிறாயோ?யார் நீ
முறையே கண்முன் நில் பார்ப்போம்.
(2000 ல் வெளிவந்த எனது "தலையெழுத்திலோர் பிழையெழுத்து" நூலில் இடம் பெற்ற கவிதை)
இறைவனிடம் உருகி பாடும் சிவனடியார் பாடல்களை நினைவுபடுத்துகிறது
ReplyDeleteஅசத்தலான கவிதை...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்..
ReplyDelete// தியானஞ் செய்தும் தவ மிருந்தும்
மயான அமைதி காணும் சூழலில்லை
இறையே!மகிழ்கிறாயோ?யார் நீ
முறையே கண்முன் நில் பார்ப்போம்//
இறையையே கண் முன்னே வரச் சொல்லும் துணிவு, நீங்களும் ஒரு நக்கீரர் தானோ என எண்ணத் தோன்றுகிறது!
செய்யுள் வடிவத்திலும் அசத்திவிட்டீர் .அருமை
ReplyDeleteதமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete(மிகவும் காலதாமதமாக வாழ்த்தியமைக்காக வருந்துகிறேன், சில வினாடிகளுக்கு முன்புதான் தமிழ்மணத்தில் இதனை பார்த்தேன்)
சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
ReplyDeleteமுதற்கண் நட்சத்திரப்பதிவருக்கு வாழ்த்துக்கள்!
மெய்யுள் ஊறிய உணர்வுக ளெல்லாம்
செய்யுள் வடிவிலே பொங்கி ஒழுகிறதே
உண்மைதான்! கவிதைப் பிறப்பதே அப்படித்தானே!
நட்சத்திர வாழ்த்துக்கள்
ReplyDeleteநட்சத்திர பதிவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான வரிகள்... மிகவும் ரசித்தேன்...
ReplyDeleteநட்சத்திரக்கவிதை
ReplyDeleteநல்ல கவிதை. பாராட்டுகள் தோழரே.
ReplyDeleteநட்சத்திரப் பதிவரானதுக்கும்
ReplyDeleteஜொலிக்கும் கவிதையை பதிவாக்கித் தந்தமைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
செய்யுள் வடிவிலும் கவிதை நல்லாருக்கு சார்..
ReplyDeleteகடவுளை கண்முன்னே வரச் சொன்ன வரிகள் அருமை,
ReplyDeleteசில வார்த்தைகள் எனக்குப் புதியவை
அகராதியில் தேட வேண்டும். ( உரவு, யாய், உவலை )
தங்கள் சொல்லாட்சி என் கர்வம் குறைக்கிறது.
கற்றுக் கொள்ள வேண்டும் நான் தங்களைப் போன்றோரிடம் நிறைய.
வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை! இறையையே ஆணையிடும் துணிவு!
ReplyDeleteஉங்கள் கவிதைகள் யாவற்றையும் நோட்டமிட ஆவல். நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்!
S பழனிச்சாமி
அன்பின் மதுமதி - இறைவனை வரச் சொல்லும் தைரியம் கவிஞனுக்குத் தான் வரும். நலல்தொரு சிஅதனையில் எழுத நற்கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் மதுமதி - இறைவனை வரச் சொல்லும் தைரியம் கவிஞனுக்குத் தான் வரும். நலல்தொரு சிந்தனையில் எழுந்த நற்கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான வரிகள் ஆழ்ந்த கருத்துடையவை மிக மிக மிக தாமதமான நட்சத்திர பதிவர் வாழ்த்துக்கள் தோழரே.
ReplyDeleteமிக அருமையான கவிதை.....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)