வணக்கம் தோழமைகளே.. தமிழகம் என்னென்ன பெருமைகளை தன்னிடத்தே வைத்திருக்கிறது என்பதையும் நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் இதிலிருந்தும் வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன.எனவே தமிழகம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும்.
மெரீனா கடற்கரை | சென்னையில் உள்ள இந்த கடற்கரை உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை.இதன் நீளம் 13 கி.மீ.உலகின் நீளமான கடற்கரை ரியோடி ஜெனீவா கடற்கரை ஆகும். |
வைனுபாப்பு தொலைநோக்கி | வேலூர் மாவட்டத்தில் காவனூர் என்ற இடத்தில் உள்ளது .இது ஆசியாவிலேயே மிகப்பெரியது. |
திருவள்ளுவர் சிலை | கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஜனவரி 1, 2000 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது. |
கோயம்பேடு பேருந்து நிலையம் | சென்னையில் உள்ள இந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.இது ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.இதன் சிறப்பு.இப்பேருந்து நிலையம்2003 ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவினால் தொடங்கி வைக்கப்பட்டது. |
புழல் மத்திய சிறைச்சாலை | திருவள்ளூர் மாவட்டம் புழலில் கட்டப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது.இதன் சிறப்பு ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை சிறையிலடைக்கலாம். |
திருபுரம் | வேலூர் அருகிலுள்ள திருபுரம் என்ற இடத்தில் ரூ.300 கோடி செலவில் தங்கத்தினால் ஆன கோயில் கட்டப்பட்டுள்ளது.இதன் முதல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 24, 2007 அன்று நடந்தது.தமிழகத்தின் தங்க கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலின் தெய்வம் நாராயினி ஆகும். |
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.
தமிழகத்தின் பெருமைகள் என்று சென்னையின் பெருமைகளை மட்டும் தந்துள்ளீர்களே..?
ReplyDeleteநன்றாக வாசியுங்கள்..
ReplyDelete