வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுத வேண்டும். நமக்கென வாசகர் வட்டத்தையும் பதிவர் வட்டத்தையும் உருவாக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு பதிவென எழுதவில்லையென்றாலும் வாரம் இரண்டு பதிவேனும் எழுதவேண்டும். பதிவை எழுதியதோடு விட்டுவிடாமல் சில திரட்டிகளில் இணைக்கவேண்டும். சகபதிவர்களின் பதிவுகளை வாசித்து கருத்திடவேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு ஆறுமாதமாவது செயல்பட்டால்தான் ஒரு பதிவர் பதிவுலகத்திற்கு கொஞ்சமேனும் அறிமுகம் ஆவார்.
அவ்வாறு செயல்பட முடியாமல் பல பதிவர்கள் பத்து பதினைந்து பதிவுகளை எழுதியதோடு வலையை மூடிவிட்டே சென்றுவிட்டனர். சில வருடங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் பதிவர்களும் உண்டு. தொடர்ந்து பதிவுலகில் செயல்பட முடியாமற்போவதற்குக் காரணம் தொடர்ந்து பதிவுகளை எழுத முடியாமல் போவதும் வலைப்பதிவின் மேல் கொண்ட காதல் தீர்ந்து போவதும்தான். நேர விரயம் என்பதாலும் சோம்பேறித்தனத்தினால் கூட சிலர் பதிவுகள் எழுதுவதில்லை.
இளைஞர்கள்தான் வலைப்பதிவு ஆரம்பித்து எழுதுவார்கள் என்று நான் வலைப்பூ தொடங்கியபோது எண்ணியிருந்தேன். ஆனால் பதிவுலகம் வயதானவர்களையும் ஆட்கொண்டுள்ளது என்பதைக் கண்டு முதலில் வியந்து போனேன். தட்டச்சு தெரிந்த இளைஞர்களே ஒரு பதிவை எழுதி முடித்து திரட்டியில் இணைப்பதற்குள் முதுகு வலியால் அவதிப்படுவதுண்டு. ஆனால் தட்டச்சும் தெரியாமல் ஒன்றரை வருட காலமாய் தொடர்ந்து ஓயாமல் எப்படி பதிவுகளை எழுதி வருகிறீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு ஒரு பதிவரை பார்க்கும்போதெல்லாம் கேட்பதுண்டு. அந்தப் பதிவர் வேறு யாருமில்ல புலவர் கவிதைகள் தளத்தில் எழுதி வரும் புலவர் சா.இராமாநுசம் அவர்கள்தான்.
வழக்கம்போல நேற்று அவரது பதிவை வாசிக்கும்போது அது அவரது 350 வது பதிவு என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன்.ஒன்றரை வருடத்தில் 350 பதிவுகளா? எப்படி சாத்தியம் வலைப்பதிவு ஆரம்பித்து 3 வருடங்கள் ஆன சில இளம்பதிவர்கள் இன்னும் 200 பதிவுகளைக்கூட தாண்டாத நிலையில் தனது 81 வது வயதில் 350 வது பதிவை எழுதி முடித்திருக்கிறார் புலவர். உண்மையில் அவரை பாராட்டித்தான் தீர வேண்டும். அவர் பதிவிடுவதோடு நின்றுவிடாமல் பிடித்த தளங்களை வாசித்து கருத்திட்டு உற்சாகப் படுத்தியும் வருகிறார். ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பிரம்மாண்ட பதிவர் சந்திப்பிற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர் புலவர் என்பதையும் நினைவு படுத்துகிறேன்.
நேற்று அவரை சந்தித்து வாழ்த்தைச் சொல்லிவிட்டு உரையாடினேன். ஓய்வை மறந்து தொடர்ந்து வலைப்பதிவில் ஈடுபட என்ன காரணம் என்று கேட்டேன். என மனைவியைப் பிரிந்த துயரைப் போக்கிக்கொண்டிருக்கிறது இந்த வலைப்பூ என பதிலளித்தார். இந்த வயதிலும் என்னை உற்சாகமாக வைத்திருப்பது இந்த வலைப்பூதான். என் பதிவை படித்துவிட்டு சக பதிவர்கள் கொடுக்கும் பின்னூட்டங்களே என்னை இன்னும் இளமையாக வைத்திருக்கும் ஊட்டச்சத்து என்றதும் ஆச்சர்யப்பட்டேன்.
81 வது வயதில் 350 வது பதிவை எழுதிய புலவரை பதிவுலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பேட்டி எடுத்து எனது வலையில் இடலாம் என எண்ணி அதன்படி இங்கே பகிர்ந்திருக்கிறேன்.. பாருங்கள் பதிவர்களே..
விரைவில் ஆயிரம் பதிவுகளைக் கடந்து செல்ல வாழ்த்துகள் ஐயா..
அருமையான முயற்சி
ReplyDeleteதாங்கள் எதைச் செய்தாலும் அதில்
புதுமையையும் வித்தியாசமும் நிறைந்துக் கிடைக்கும்
இந்தப் பதிவும் விதிவிலக்கல்ல
தாங்கள் எழுப்பிச் செல்லும் கேள்விகளும்
புலவர் ஐயா அவர்களின் பதிலும்
பதிவுலககு குறித்தும் ஐயா அவர்கள் குறித்தும்
நிறையத் தெரிந்து கொள்ள முடிகிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
மகிழ்ச்சி ஐயா..
Deleteவாழ்த்துக்கள் புலவருக்கு ...
ReplyDeleteமகிழ்ச்சி பிரேம்..
Deleteஅருமை. நானும் இரண்டு வருடம் எழுதுகிறேன். பத்தொன்பது வயது தான். முதுகுவலி எல்லாம் வராது எவ்வளவு நேரம் உட்கார்ந்து எழுதினாலும், ஆனாலும், இன்னும் இருநூறு பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன். ஆனால், என்பது வயதில், முன்னூற்றி ஐம்பதா? நான் வாயைப்பிளக்கத் தான் செய்தேன்!
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டது போல, வலைப்பூ தொடங்கிய புதிதில், நிறைய எழுதியது கிடையாது, அப்போதெல்லாம் யாரும் நான் எழுதுவதை வாசித்ததும் கிடையாது, அதனால், சோர்வடைந்து விடுவேன்.
அருமையான பேட்டி. ஐயா சொன்னது நூறு சதவீதம் உண்மை. இப்போது எழுதுபவர்களுக்கு அவசியம் சுயகட்டுப்பாடு தான். மற்றவரை புண்படுத்தாத வண்ணம் எழுதுவது தானே மிகவும் அவசியம்.
இப்படி ஒரு பதிவு தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.
என்னைப் போல எழுதி வரும், சின்னப் பிள்ளைகளுக்கெல்லாம் இது பெரும் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!
மகிழ்ச்சி கண்மணி..
Deleteஅருமையான பேட்டி! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி! பகிர்விற்கு நன்றீ!
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்..
Deleteஇன்றைய நாளில் பதிவுலகில் வாழும் புலவர் திரு.ராமநுசம் ஐயா அவர்கள்தான் தொடர்ந்து தினமும் பதிவிட்டும் இளைய தலைமுறையினரை உற்சாகபடுத்தும் விதமே தனி,ஒவ்வொருமுறையும் பதிவிடும் போதும் கருத்து சொல்லி ஊக்குவிப்பார்.அவருக்கு பல நாடுகளில் இருந்தும் நிறைய வாசகர் வாசகிகள் உள்ளனர்,சிலர் அப்பா என்றும் அன்புடனும் ஐயா என்றும் உரிமையோடு கைபெசியிலும் தொலைபேசியிலும் பேசுவதை இப்போது ஊக்கமென எண்ணுவார்.அவரது துணைவியார் இறந்தபின் இப்போது எனக்கு நண்பர்களில் தொடர்பால் ஊகமை உள்ளதாக சொல்வார்.
ReplyDeleteபெருந்தகை இயா இன்னும் பல பதிவுகளிட்டு நமக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்பவர் அவரை நேர்கண்டமைக்கு மதுமதிக்கு வாழ்த்துக்கள்
ஆமாம் தலைவரே.. பிற பதிவர்களை ஐயா ஊக்குவிக்க தவறுவதில்லை..
Deleteபுலவர் ஐயாவுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தொடர்ந்து பதிவுலகில் பல கவிதைகள் படைக்க வேண்டும் ஐயா..
ReplyDeleteமகிழ்ச்சி..
Deleteபேட்டி கண்டதோடு அதை மிகவும் சிறப்பாக வெளியிட்ட தங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி! பதிவு கண்டு வாழ்திய, வாழ்த்தும் உறவுகளுக்கும் நன்றி!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா.. இன்னும் பல கவிதைகளைப் படைக்க அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்..
Deleteமதுமதி மற்றும் புலவருக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
ReplyDeleteமகிழ்ச்சி சிவா..நன்றி..
Deleteஅய்யாவின் சாதனை மிகப் பெரியது ..அதுவும் இலக்கண கவிதைகள் ..மரபுக்கவிதைகள் ..யதார்த்தமாக..நாட்டு நடப்பு பற்றி ..அருமை ..இதை வெளியிட்ட உமக்கும் நன்றி
ReplyDeleteஆமாம் அன்பரே..உண்மைதான்..நன்றி..
Deleteவளர்ந்து வரும் சமுதாயத்துக்கு நம்பிக்கை தரும் சிறந்த ஒரு பகிர்வுங்க. ஐயாவின் ஆர்வமும் அவரது கவிதை வரிகளுமே எங்களைப்போன்றவர்களின் உற்சாக டானிக் தொடர்ந்து பல ஆயிரம் கவிதைகள் எழுதி வலையில் வலம் வர வேண்டுகிறேன்.
ReplyDeleteமகிழ்ச்சி சகோதரி.
Deleteஇது எல்லோருக்கும் சாத்தியமில்லாத பாக்கியம்...
ReplyDeleteஐயா வின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
உண்மைதான் தோழர்..நிச்சயம்..
Deleteராமாநுசம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள், மூத்த வயதில் அவர் பதிவையும் தாண்டி, பதிவர் மாநாட்டுக்கும் கடுமையாக உழைத்தவர். மிகவும் ஆச்சர்யமூட்டுபவர். தமிழ் பதிவுலக்கு புதிதாய் வருவோருக்கு உத்வேகம் கொடுக்கக் கூடியவராகவும் உள்ளார்.
ReplyDeleteனாமாம் தோழர் மறக்க முடியாது.சக பதிவர்களை உற்சாகப்படுத்த மறக்காதவராக இருப்பது தனிச்சிறப்பு..
Deleteபெரியவருக்கு என் வாழ்த்துகள். தொடரட்டும் ...
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா..
Deleteபுலவர் ஐயாவை பெட்டி கண்டு வெளியிட்டமைக்கு நன்றி. அவரது வயதில் நம்மில் பலரால் அதுபோன்று தினம் ஒரு பதிவு ஏன் பதிவே இடமுடியுமா என்பது ஐயமே. அவர் பேட்டியில், பதிவுலகத்தில் இழந்தது ஒன்றுமில்லை பெற்றதே அதிகம் என சொல்லியது பெரு மகிழ்ச்சியைத் தந்தது. அதுபோலவே அவரது புதுக்கவிதைகள் பற்றியும் கருத்தும். ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து, பதிவுலகத்தில் பவனி வர வாழ்த்துவோம்!
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் ஐயா..நிச்சயம் வாழ்த்துவோம்..
Deleteநினைத்த மாத்திரத்திலேயே எந்த ஒரு கருவையும் கவிதையாக்கும் மாபெரும் வல்லமை படைத்த ஐயா புலவர் அவர்கள் தமிழகத்தின் ஒரு வரப்பிரசாதம்...
ReplyDeleteஆமாம் தோழரே..மகிழ்ச்சி..
Deleteமுதலில் புலவர் ராமானுசம் ஐயாவுக்கு வாழ்த்துகள், இந்த வயதிலும் மிக இளமையாக இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவரை பாராட்டி எழுதிய உங்களுக்கும் மிகப் பெரிய மனது இருக்கிறது.
ReplyDeleteஇருவருக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்.
மகிழ்ச்சி செம்மலை..
Deleteபேட்டி மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது திரு மதுமதி அவர்களே! நல்லதொரு காரியத்தை செய்து பதிவர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteபதிவு உலகின் ஜாம்பவான் புலவர் ஐயா. இன்னும் பல பதிவுகள் படைத்து வளர்ந்து வரும் பதிவர்களுக்கு வழி காட்ட வேண்டும். வணக்கங்கள் பல ஐயாவிற்கு.
அன்புடன்,
ரஞ்சனி
http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
மகிழ்ச்சி அம்மா.. ஐயாவிடம் தெரிவிக்கிறேன்..
Deleteவாழ்த்துகள் ஐயா.. நன்றி மது.
ReplyDeleteமகிழ்ச்சி விஜி..
Deleteபார்வைக்கு எளிமை; பழகுவதற்கு இனிமை; பதிவுகள் ஒவ்வொன்றிலும் மரபின் பெருமை! நம் புலவர் ஐயா இன்னும் பல நூறு பதிவுகளை எழுதி நம்மை மகிழ்விக்க வேண்டும். நேர்காணலை பதிவு செய்த நண்பர் மதுமதிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
ReplyDeleteஆமாம் தலைவரே..மகிழ்ச்சி.நன்றி!
Deleteபதிவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் புலவர் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்களையும் என் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் கவிஞரே.
ReplyDeleteமகிழ்ச்சி முனைவரே..
Deleteபுலவர் அய்யா அவர்கள் கவிஞர்களுக்கு மட்டுமல்ல.பதிவுலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்பவர்.மிகச் சிறந்த பண்பாளர்.அவர் இன்னும் பற்பல பதிவுகள் படைத்து வழிகாட்ட வேண்டும்.
ReplyDeleteஉங்கள் சார்பாக நானும் அதையே கேட்டுக்கொள்கிறேன்..
Deleteஅவரின் கருத்துரைகள் என்னை மேலும் பல பதிவுகளை எழுத வைத்தது... ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுலவர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பகிர்வை பகிர்ந்ததுக்கு நன்றி மதுமதி கவிஞருக்கும்!
ReplyDeleteதனது 81 வயதில் 350 பதிவுகளுக்கும் மேலாக எழுதிவரும் புலவர் அய்யாவைக் கண்டு காணொளியில் நேர்முக உரையாடல் செய்து தந்தமைக்கு நன்றி! ஒலி-ஒளி வடிவத்தை பதிவு செய்ததைப் போல வரி வடிவத்திலும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteபுலவர் ஐயாவுக்கு வாழ்த்துகள். பேட்டி கண்டு எங்களுக்கும் தெரிவித்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.
ReplyDeleteஇந்த வயதிலும் சோர்வின்றி பல அருமையான படைப்புகள் தந்து சாதனை செய்துள்ள புலவர் ஐயா அவர்களை வணங்கிடுவோம். அவரின் பணி மேலும் மேலும் உற்சாகமாகத் தொடரட்டும்.
ReplyDeleteஅவரின் நேர்காணலை அழகாக பதிவு செய்து வெளியிட்டுள்ள தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள்.
ஐயா அவர்கள் ஆயிரத்தொரு கவிதை படைப்பார் அத்தனையும் முத்துக்களாய் ஜொலிக்க வைப்பார்.அதுமட்டுமல்ல இளைய சமுதாயத்தினரின் இன்னல தீர இன்றளவும் துடிக்கும் தீரர் அவர்.தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர் எடுக்கும் அத்தனை முயற்சிக்கும் உறுதுணையாய் இருந்து நாம் அனைவரும் அவர் வழி பின்பற்றினால் அனைவரும் பயனடையலாம்
ReplyDeleteஇந்த தகவலை தந்தமைக்காக உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்
அப்பாவின் இந்த சந்தோஷ தருணங்களில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன் மதுமதி.... மனம் மிக்க மகிழ்வு மட்டுமல்ல பெருமையாகவும் இருக்கிறது.... ரிட்டையர்மெண்ட் ஆனப்பின் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்துவிடுவதை கவனிக்கமுடிகிறது நிறைய பேரிடம்.... ஆனால் ஒருசிலர் மட்டுமே இப்படி ஒரு அருமையான முடிவெடுக்க முடிகிறது... அது மட்டுமில்லாமல் மதுமதி நீங்க சொன்னது போல வலைப்பூவில் ஒரு பதிவர் அறிமுகம் ஆகவேண்டுமென்றால் தன் படைப்புகளை பகிரும் அதே தொடர்ச்சியில் மற்றவரின் படைப்புகளையும் சென்று வாசித்து கருத்திட்டால் மட்டுமே சாத்தியம்... அதிலும் 81 வயதில் இப்படி வெற்றிகரமாக இத்தனை பதிவுகள் அப்பாவால் சாத்தியமாக முடிகிறது என்பது நினைக்கும்போது மனம் சந்தோஷத்தில் நிறைகிறதுப்பா....
ReplyDeleteஅப்பாவின் ஒவ்வொரு கவிதையிலும் ஊருக்கு நல்லது சொல்லும் விதமாக அமைந்திருக்கும். சமூக சீர்கேடுகளை அப்பா அலசுவது கவிதையில் மிக அழகாக விஸ்தாரமாக இருக்கும் அதிலும் இனிக்கும் இனிய தமிழ் கூட தூய்மையான இலக்கணச்சுத்தியுடன் இருப்பதும் தான்.....
முதன் முதல் அப்பாவிடம் தொலைபேசிய நாளே அப்பாவின் பிறந்தநாளுக்கு முன் தினம் என்பதில் எனக்கு மட்டற்ற சந்தோஷம்... எழுத்துகளில் மட்டுமல்ல அவர் வார்த்தைகளிலும் எத்தனை அன்பு எத்தனை அன்பு தலைகோதும் தாயன்பு..... சிரிப்பு சிரிப்பு... எல்லோரையும் மனம் கவரும் அப்பாவின் எழுத்துகளைப்போலவே பேச்சும்.... அந்நியமாகவே நினைக்கத்தோன்ற இயலாத அந்நியோன்யம் அப்பாவிடம்....
அப்பாவின் சாதனைகளை அற்புதமான தருணத்தில் இங்கே பகிர்ந்தது மிக சிறப்பு மதுமதி.. தங்களின் இந்த சேவையால் எல்லோரும் அறியவும் முடிந்தது... அதற்கு என் தலை தாழ்ந்த அன்பு நன்றிகள்பா....
அப்பாவின் சாதனைகள் இன்னும் இன்னும் இன்னும் பெருகிக்கொண்டே இருக்கவும் அப்பாவின் ஆரோக்கியம் இன்னும் சீர்ப்பெற்று நலமுடன் பல்லாண்டு காலம் சிறப்புடன் இருக்கவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....
அன்புமகள்
மஞ்சுபாஷிணி
நேர்க்காணல் வீட்டில் தான்பா போய் பார்க்கணும் இங்க ஆபிசுல பார்த்தால் சிரமம்பா...
ReplyDeleteபேட்டி சிறப்பாக இருந்தது என்பதை விட அப்பாவின் மன ஓட்டங்களை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டது அருகே அமர்ந்து பரிமாறின விஷயங்கள் போல அத்தனை அருமை....
ReplyDeleteஅப்பாவின் நிதானமான குரலில் அருமையான விஷயங்கள் கேட்டேன்....
அப்பா உங்கள் உடலில் உள்ள தளர்ச்சியோ முகத்தில் இருந்த சோர்வோ உங்க குரலில் துளி கூட தெரியலை அப்பா....
மரபுக்கவிதை எழுதுவது தான் அப்பா ரொம்ப கஷ்டம்.... எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது.... அருமையாக அசத்தலாக நீங்கள் எழுதுவது இன்றைய தலைமுறையினருக்கும் அனுபவ பொக்கிஷமாக தருவது அப்பா....
எழுத்துகளில் என்றும் துறுதுறுப்புக்கு குறைவில்லை....
ஒவ்வொரு கேள்விக்கும் அசராது நீங்கள் தந்த பதில் நான் ரசித்து கேட்டேன் அப்பா....
இப்ப இருக்கும் புதிய பதிவர்களுக்கு நீங்க சொன்ன அறிவுரை மிக அற்புதம் அப்பா....
எழுத்துகளில் பிறரை துன்புறுத்தாவண்ணம், நாகரீகமாக எழுதவேண்டிய விதம் சொன்னது மிக சிறப்பு அப்பா....
முதுமையின் காரணமாக முன்பு போல எழுத முடிவதில்லை என்று நீங்கள் சொன்னபோது எனக்கும் மனசு கஷ்டமானது அப்பா...
முதுகுவலி கால்வலி இதெல்லாம் உங்க எழுத்துகளை முடக்கிவிடாது அப்பா...
வாரத்துக்கு நீங்க எழுதும் இரண்டு அல்லது மூன்று கவிதைகளே எங்களுக்கு பொக்கிஷம் அப்பா....
உங்கள் ஆரோக்கியம் நலமுடன் இருந்து எங்களுக்கு நீங்கள் படைப்புகள் தந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுதல் அப்பா....
உங்களுடன் தொலைபேசிவிட்டு தான் நேர்க்காணல் பார்க்கவேண்டுமென்று காத்திருந்தேன் அப்பா....
எத்தனை அன்பு எத்தனை அன்பு உங்க குரலில்....
ஊருக்கு எனக்கு வர விடுமுறை கிடைக்கவேண்டுமே என்று மனம் வேண்டுகிறது அப்பா....
உங்கள் அனைவரையும் காணவேண்டும் பேசவேண்டும் உங்கள் அனைவரிடமும்....
இப்படி ஒரு அருமையான வாய்ப்பை தந்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மதுமதி... உங்களுடன் தொலைபேசியதில் ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன்பா... தமிழ்லயே ஆங்கிலம் கலக்காமல் பேச முயல்வது....
தனது 81 வது வயதில் 350 வது பதிவை எழுதி முடித்திருக்கிறார் புலவர். உண்மையில் அவரை பாராட்டித்தான் தீர வேண்டும்.
ReplyDeleteசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..