வணக்கம் தோழர்களே. 7.7.2012 அன்று நடந்த குரூப் 4 இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களு இரண்டாம் கட்ட கவுன்ஸ்லிங் நாளை தமிழ்நாடு தேர்வாணைய அலுவலகத்தில் தொடங்க இருக்கிறது.இளநிலை உதவியாளர்,நிலஅளவர்,வரைவாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை நடைபெற்றது. அதில் 3,485 விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்தம் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு துறைகளுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
நிரப்பப்படாத 2,899 இளநிலை உதவியாளர்,நில அளவர்,வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்பும் முகமாக இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நாளை முதல் மார்ச் 4–ந்தேதி வரை (3–ந்தேதி தவிர) காலை 8.30 மணி முதல் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அந்த விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட ஜெராக்ஸ் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்.
மேலும் கணினிவழி விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி படிப்பை தமிழ் வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமை கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர்,தலைமை ஆசிரியர்,ஆசிரியையிடமிருந்து தமிழ்வழி மூலம்தான் பயின்றுள்ளார் என சான்றிதழ் பெற்று எடுத்துவர வேண்டும்.
சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவது, அவர் பரிசீலிக்கப்படும்போது உள்ள காலிப்பணியிடங்களைப் பொருத்தே அலகு ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
நீங்க இந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் நீங்களும் அழைக்கப்பட்டிருப்பீர்கள். கவுன்சிலிங்கான முறையான அழைப்பை உங்கள் மின்னஞ்சலுக்கு தேர்வாணையம் அனுப்பியிருக்கும்.மட்டுமின்றி உங்கள் அலைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வரும்.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லுங்கள்..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !