நேற்றைய குடும்ப மலரை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன்.வாரவாரம் ஒரு மண் சார்ந்த, அடுத்த தலைமுறையை உற்சாகப் படுத்துகிற விதமாக சிறப்புக்கட்டுரை ஒன்று அதில் வெளியாகும். அதை தவற விடாமல் வாசிப்பேன்.அப்படி இந்தவாரம் 'கலைப்பார்வை' எனும் பகுதியில் 'வீர விளையாட்டை மேம்படுத்தும் குறும்படம்' என்ற தலைப்பில் அக்குறும்பட குழுவினரின் நேர்காணல் இடம் பெற்றிருந்தது.
அப்பகுதியில் இடம் பெற்றிருந்த குறும்படத்தின் தலைப்பு 'ரணகளம்' இதை இயக்கியிருப்பவர் 'தமிழ்த்தொட்டில்' எனும் வலைப்பூவில் எழுதிவரும் அருமைத் தோழர் தமிழ்ராஜா.இவர் திரைப்பட உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குறும்படம் பற்றி ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்.இந்தவாரம் இது குறித்த செய்தியோடு குடும்பமலர் அட்டைப்படத்தில் தமிழ்ராஜா வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
முன்னதாகவே இந்தக் குறும்படம் பற்றி பதிவிடலாம், அறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்த வேளையில் தமிழக முக்கியப் பத்திரிக்கையான தினத்தந்தி அதைச் செய்திருக்கிறது.இந்தச் செய்தியும் இந்தக் குறும்படமும் பதிவுலகத் தோழர்கள் அனைவரையும் சென்றடையட்டும் என்ற நோக்கோடு குடும்ப மலரில் வெளியான அந்தப் பகுதியை அப்படியே இங்கே பிரசுரித்திருக்கிறேன்.நான் சக திரைக் கலைஞன் என்ற ரீதியில் ஏற்கனவே வாழ்த்தியிருந்தாலும் சக பதிவர் என்ற முறையில் மீண்டும் வாழ்த்துகிறேன்.
இன்று இயக்கியிருக்கும் இந்தக் குறும்படத்திற்கும்
நாளை நீங்கள் இயக்கவிருக்கும் பெரும்படத்திற்கும்
வாழ்த்துகள் தமிழ்ராஜா..
உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி தோழர் தமிழ்ராஜாவை உற்சாகப்படுத்துங்கள்..
உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி தோழர் தமிழ்ராஜாவை உற்சாகப்படுத்துங்கள்..
சக பதிவர் - சந்தோசம்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
ReplyDeleteஅவரும் தளத்திலும் வாழ்த்துக்கள் சொல்லியாச்சி...
நானும் படித்தேன் .உங்களின் நண்பராகவும் பதிவர் என்ற வகையிலும் பெருமைகொள்ள செய்கிறது.வாழ்த்துக்கள் அவருக்கு
ReplyDeleteரேக்ளா, ஜல்லிக்கட்டு வரிசையில் இதுவும் ஒன்று போல.
ReplyDeleteஇயக்குனர் ஒரு பதிவர் என்பது நமக்கெல்லாம்
உற்சாகமூட்டக் கூடிய ஒரு செய்தி.
வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு என் பாராட்டுக்கள்.
அவருக்கு என் வாழ்த்துக்கள்.
ராஜாவிற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பரே... கதை உருவாக்கத்தில் இருப்பதால் உங்கள் பதிவை கவனிக்கவே இல்லை. சகப்பதிவர்கள் சொல்லியே தெரிந்துக் கொண்டேன்...
ReplyDeleteஉங்கள் வாழ்த்து மட்டுமின்றி அனைவரின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...
உங்களின் ஆதரவுடன் விரைவில் ஒரு திரைப்படமும் இயக்கும் வாய்ப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அதையும் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சி ராஜா..மீண்டும் வாழ்த்துகள்..
Delete