புது வரவு :

இராம ஈஸ்வரம் ஈன்றெடுத்த இஸ்லாமே!

நேற்று மாலை தமிழ்நாடு திரைப்படப் பாடலாசியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற 'கலாமுக்கு கவிதாஞ்சலி' நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். அந்நிகழ்வில் நான் வாசித்த கவிதை..

இராம ஈஸ்வரம்
ஈன்றெடுத்த இஸ்லாமே!
புன்னகைக்கும் புத்தனைக் கண்ட
அப்துல் கலாமே!
நீ இறந்து விடவில்லை ஐயா-இன்னும்
இருந்து கொண்டுதானிருக்கிறாய்!..


எத்தனை ஏவுகனைகளை
ஏவியிருப்பாய்..
போதவில்லை போலிருக்கிறது!..
இப்போது தன்னைத்தானே
ஏவிக்கொண்டாயே ஐயா!
நீ இறந்து விடவில்லை-இன்னும்
இருந்து கொண்டுதானிருக்கிறாய்!..


ஆகாய வெளியிலே
சுற்றிக்கொண்டிருக்கிற
செயற்கைக்கோள்களுடன் -ஒரு
இயற்கைகோள் இணைந்துகொண்டது!
நீ இறந்து விடவில்லை ஐயா-இன்னும்
இருந்து கொண்டுதானிருக்கிறாய்!..



எதிர்கால இந்தியாவை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தாய்..
நீயதைப் பாராமல் போனதுதான்
எங்களின் வேதனையைத் தீராமல் செய்கிறது!
நீ இறந்து விடவில்லை ஐயா-இன்னும்
இருந்து கொண்டுதானிருக்கிறாய்!..


ஐயா!
கனவுக்கு
இலக்கணம் கற்பித்தாய் நீ..
அணுவுக்கு ஆதரவளித்தாய் நீ..


உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்களை
உசுப்பிவிட்டது உன் பேச்சு..
லட்சியம் கொண்ட மாணவர்கள்
சுவாசிக்கும் காற்று உன் மூச்சு..


அக்னிச்சிறகுகளாய்
அண்டத்தையும் ஆகாயத்தையும்
வலம் வந்து கொண்டுதான்
இருக்கப்போகிறாய் ஐயா..
நீ இறந்து விடவில்லை-இன்னும்
இருந்து கொண்டுதானிருக்கிறாய்!..

                                                                                   -மதுமதி
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

  1. லட்சியம் கொண்ட அனைவருக்கும் சுவாசிக்கும் காற்று...

    ReplyDelete
  2. சிறப்பான கவிதாஞ்சலி!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com