புது வரவு :
Home » , » நாட்கள் போதவில்லை

நாட்கள் போதவில்லை

முகம் தெரியாத
மனிதர்கள் தான்
நம் முகத்தைப் பலருக்கும்
தெரிய வைக்கிறார்கள்..
----------------------------------
நாட்கள் போதவில்லை..
வாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..
-----------------------------------
எதிர்காலத்தில்
எப்படி வாழவேண்டுமென்று
இறந்தகாலமே
கற்றுக் கொடுக்கிறது..
-----------------------------------
-----------------------------------
இருப்பதை வைத்துக்கொண்டு
வாழ் என்கிறார்கள்..
இருக்கிறதா இல்லையா என்று
எப்போதுமே கேட்பதில்லை..
-----------------------------------
தெருவில் 
பணத்தைக் கண்டெடுத்தபோது 
ஏற்பட்ட சந்தோசம்
பொய்யானதென்று
அதே தெருவில் பணத்தை
தொலைத்தபோதுதான் தெரிந்தது.
---------------------------------
படுக்கையில் படுத்தவுடன்
இன்று என்னென்ன செய்தோம் என்று
யோசிப்பதை விட நாளை 
என்னென்ன செய்யப்போகிறோம் என்று
யோசித்தல் சிறப்பு..
-------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

14 comments:

 1. எளிமையான வரிகளில் மனித வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்... அருமை..

  ReplyDelete
 2. அனைத்துமே அருமை.
  பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 3. ஆமா, நாளைக்கு என்ன செய்யப்போறோம்?

  ReplyDelete
 4. ///இருப்பதை வைத்துக்கொண்டு
  வாழ் என்கிறார்கள்..
  இருக்கிறதா இல்லையா என்று
  எப்போதுமே கேட்பதில்லை..///

  நிதர்சனத்தைச் சொல்லிப் போகும் வரிகள்..!!!

  தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே.. அதுபோலதான்.. பணத்தை இழந்தவனுக்கும், பணத்தை கண்டெடுத்தவனுக்கும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்...!!!

  பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!!

  ReplyDelete
 5. முகம் தெரியாத | மனிதர்கள் தான் | நம் முகத்தைப் பலருக்கும் | தெரிய வைக்கிறார்கள்..
  -இந்த வரிகள் மனதில் ஒட்டிக் கொண்டன கவிஞரே... உண்மையில் தோய்ந்த வரிகள். பிரமாத்ம். உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. //இருப்பதை வைத்துக்கொண்டு
  வாழ் என்கிறார்கள்..
  இருக்கிறதா இல்லையா என்று
  எப்போதுமே கேட்பதில்லை..//
  அருமை

  ReplyDelete
 7. ////படுக்கையில் படுத்தவுடன்
  இன்று என்னென்ன செய்தோம் என்று
  யோசிப்பதை விட நாளை
  என்னென்ன செய்யப்போகிறோம் என்று
  யோசித்தல் சிறப்பு..////

  சிறப்பான வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது காரணம் நான் எப்பவும் இப்படி சிந்திப்பவன் தான் இன்று என்ன செய்தேன் என்பதை விட நாளை என்ன செய்யப்போகின்றேன் என்று

  வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 8. வாழ்வியல் ஒன்றைவிட ஒன்று அருமையாக இருக்கிறது !

  ReplyDelete
 9. இருப்பதை வைத்துக்கொண்டு
  வாழ் என்கிறார்கள்..
  இருக்கிறதா இல்லையா என்று
  எப்போதுமே கேட்பதில்லை..
  -----------------------------------
  தெருவில்
  பணத்தைக் கண்டெடுத்தபோது
  ஏற்பட்ட சந்தோசம்
  பொய்யானதென்று
  அதே தெருவில் பணத்தை
  தொலைத்தபோதுதான் தெரிந்தது.
  ---------------------------------


  அழகாக
  ஆழமாக
  சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் கவிஞரே..

  ReplyDelete
 10. "நாளை
  என்னென்ன செய்யப்போகிறோம் என்று
  யோசித்தல் சிறப்பு.."

  >>>

  இது தான் மாப்ள டாப்பு...இதை சிந்த்திதாலே பல விஷயங்கள் நன்றாக நடக்கும்!

  ReplyDelete
 11. உரத்த சிந்தனை
  படிப்போரையும் சிந்திக்கச் செய்து போகும் பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  த.ம 7

  ReplyDelete
 12. இயற்கைபோல மிக எளிமையாக சிந்தித்து தந்து இருக்கின்றீர்கள் பாராட்டுகள்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com