டி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

டி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

                பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

                                               அறநூல்கள் - 11
                                               அகநூல்கள் - 6
                                                       புறநூல் - 1

அறநூல்கள் - 11

நாலடியார் சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
இன்னா நாற்பதுகபிலர்
இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
திரிகடுகம் நல்லாதனார்
ஆசாரக்கோவை பெருவாயின்முள்ளியார்
பழமொழி முன்றுரையரையனார்
சிறுபஞ்சமூலம் காரியாசன்
ஏலாதி கணிமேதாவியர்
திருக்குறள் திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி கூடலூர் கிழார்

 புறநூல் -1

களவழி நாற்பது பொய்கையார்


அகநூல் - 6

ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது மூவாதையார்
திணைமொழி ஐம்பதுகண்ணன் சேந்தனார்
கார் நாற்பது கண்ணன் கூத்தனார்
திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார்
ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை புல்லங்காடனார்
.
1.அறநூல்கள் விளக்கம்

 1.நாலடியார் 

        திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.இது ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படுகிறது.

       திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூவகை பிரிவுகளுடையது.

அறத்துப்பால் 13.
பொருட்பால் 24.
காமத்துப்பால் 3

             ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வரும்
நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.

“செல்வம் சகட கால்போல் வரும்”
“கல்வி கரையில கற்பவர் நாள்சில”

2.நான்மணிக்கடிகை

        கடிகை என்பதற்கு “துண்டு” எனப் பொருள்படும்.

        நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலைபோல ஒவ்வொரு
பாடலிலும் மணி போன்று நான்கு கருத்துகளுடன் பாடப்பெற்றுள்ளதால் இதனை “நான்மணிக்கடிகை” என அழைக்கப்படுகிறது.

3. இன்னா நாற்பது

        ஒவ்வொரு கருத்து முடிவிலும் “இன்னா” எனக் கூறுப்படுவதால் “இன்னா
நாற்பது” என்றழைக்கப்படுகிறது.

“ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா”
“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா”

4. இனியவை நாற்பது

          இனிய பொருட்களை பாடல்களில் தொகுத்துக் கூறியுள்ளமையால்
இப்பெயரைப் பெற்றுள்ளது.

“ஊனினைத் தின்று ஊனினைப் பெருக்காமை இனிது”
“மானம் அறிந்தபின் வாழாமை முன் இனிதே”

5. திரிகடுகம் (திரி + கடுகம்)

        சுக்கு+மிளகு+திப்பிலி இம்மூன்றினால் செய்யப்பட்ட மருந்துக்கு “திரிகடுகம்” என்று பெயர்.

“காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்”

6. ஆசாரக் கோவை

          ஆசாரம் என்பது ஒழுக்கம். கோவை என்பது அடுக்கிக் கூறுதல். ஒழுக்க
நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும்
குறிப்பிடுகிறது.

7. பழமொழி

          பழமை + மொழி.இது  பழமொழி நானூறு என்றழைக்கப்படுகிறது. நீதிக் கருத்தை விளக்கிக் காட்டும் வகையில் அமைக்கப்பட்ட நூல். திருக்குறள், நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து போற்றத்தக்க பெருமையுடையது.

“பாம்பின் கால் பாம்பறியும்”
“கண்டதைக் கற்க பண்டியதனாவான்”

8. சிறுபஞ்ச மூலம்

       மூலம் என்பது வேர். பஞ்சம் என்பது ஐந்து. சிறுவழுதுணை, நெருஞ்சி,
சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி தருவது போல இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

9. ஏலாதி

       ஏலாதி என்பது மருத்துவப் பெயர்.ஏலம் + இலவங்கம் + நாககேசரம்
சுக்கு + மிளகு + திப்பிலி ஆகியஆறுவகை மருந்து கலவையே “ஏலாதி” ஆகும்.

10. திருக்குறள்

  திரு+குறள்.

அரத்துப்பால்-38

பொருட்பால் - 70
காமத்துப்பால் - 25

133 அதிகாரங்கள்

1330 குறள்களையும் 9 இயல்களையும் உடையது.

அறத்துப்பால் (4 இயல்கள்)

பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
பொருட்பால்( 3 இயல்கள்)

அரசியல், அங்கவியல், ஒழிபியல்

காமத்துப்பால் 2 இயல்கள்

களவியல், கற்பியல்

11.முதுமொழிக் காஞ்சி

கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது எனக் கூறுகிறது.

“ஆர்கலியுகத்து மக்கட்கெலாம் ஒதலில் சிறந்தன்று இருக்கும்”

புறநூல் விளக்கம்

12.களவழி நாற்பது

      ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறுவது களவழி. இந்நூல் முழுவதும் யானைப் போர் பற்றியே அழகிய வீரக்கற்பனைகளைத் தருகிறது.


அகநூல்கள் விளக்கம்

13. கார் நாற்பது

         அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல். கார்
காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது. முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.

14. ஐந்திணை ஐம்பது

        ஆசிரியர் பொறையனார். அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம்,
பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள்
இடம்பெற்றுள்ளன. இந்நூன் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.

“ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்”
என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.

15. ஐந்திணை எழுபது

       ஆசிரியர் மூவாதியார். ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து
திணைக்குமாக 70 அமைந்துள்ளன. இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.

16. திணைமாலை நூற்றைம்பது

         ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார். இவரே எழுதியவர். ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள்  நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.

17. கைந்நிலை(ஐந்திணை அறுபது)

            ஆசிரியர் புல்லங்காடனார். இதில் 12 முதல் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன..இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.

18. திணைமொழி ஐம்பது.

           ஆசிரியர் கண்ணந் சேந்தனார். அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது. இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
------------------------------------------------------------------------------------------------------------
பதிவை பகிர்ந்து கொள்வதனால் இன்னும் பலர் பயனடைவர்..
------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                           அன்புடன்..பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

15 comments:

 1. முதல் வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 2. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் அத்தனையும் முன்பு சொல்லுவேன். இப்போது மறந்துவிட்டது. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.பயன்மிகு பதிவுகள்.

  ReplyDelete
 3. முத்திரைப் பதிவு !
  தொகுத்து வழங்கியமை அழகு..வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நான் பி.ஏ தமிழ் இலக்கியம் பயிலும்போது எங்களுக்கு “தமிழ் இலக்கிய வரலாறு “ ஒரு பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது எல்லா தமிழ் இலக்கியங்களைப் பற்றிய குறிப்புகளும் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் இப்போதைய பதிவுகளைப் படிக்கும் போது அந்தநாள் ஞாபகம் வந்தது. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் தமிழ் என்பதற்கான காரணத்தை கண்டு கொண்டேன்..தங்களின் வருகைக்கு நன்றி ஐயா..

   Delete
  2. எனது தந்தை தமிழார்வம் உள்ளவர். வடமொழியில் இருந்த சண்முகம் என்ற தனது பெயரை திருமுகம் என்று மாற்றம் செய்து கொண்டவர். நான் பிறந்தவுடன் அவரே எனக்கு வைத்த பெயர்தான் ”தமிழ் இளங்கோ” .

   Delete
  3. தந்தையாரின் செயல்பாட்டை கேட்பதற்கே மகிழ்வாக இருக்கிறது.அவரின் கடமையை அவர் செய்துவிட்டார்.நாமும் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் சென்று நம் கடமையைச்செய்வோம்..

   Delete
  4. அருமையான..... அவசியமான பதிவு....தொடரட்டும் தங்கள் தொண்டு......

   Delete
 5. மிகச் சிறந்த பணி. வாழ்த்துகள். எழுத்துப்பிழைகளைத் தயவுசெய்து கவனத்தில் கொள்க. திருக்குறள் விளக்கத்தில் இவ்வாறு உள்ளது. திருத்தம் செய்ய வேண்டுகிறேன். (அரத்துப்பால்-38 ----> அறத்துப்பால்)

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com