புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவுத்தாள் - அறிவியல்

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவுத்தாள் - அறிவியல்

    வணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கிறீர்கள்..தேர்வுக்கான நாள் நெருங்கிகொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்தையும் ஓரளவிற்கு படித்து முடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    தொடராக எழுதி வந்த பொதுத்தமிழ் பகுதிகள் அனைத்தையும் எழுதியாயிற்று.நீங்கள் கேட்டதன் பேரில் மொத்த பகுதிகளின் இணைப்பையும் ஒரே பதிவில் இட்டேன்.அதை வாசித்து கொண்டிருப்பீர்கள்.புதிதாக தளத்திற்கு வந்துள்ள தோழர்கள் இங்கே  சென்று வாசித்துக் கொள்ளுங்கள்.

   
  பொதுத்தமிழை எழுதிவிட்டீர்களே பொது அறிவைப்பற்றி பதிவு இடவேயில்லை என மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசியின் வாயிலாகவும் என்னை தொடர்பு கொண்டு நிறைய தோழர்கள் கேட்டு வந்ததன் பேரில் பொது அறிவு பகுதிக்கு எந்தெந்த தலைப்பின் கீழ் பாடங்களை படிக்கவேண்டும் என்பதனை வரும் பதிவுகளில் குறிப்பிடுகிறேன். அந்தந்த தலைப்புகளின் கீழ் நீங்கள் பழைய பாடப்புத்தங்களிலோ அல்லது சமச்சீர் புத்தகங்களிலோ படித்துக் கொள்ளுங்கள்..

  ஏற்கனவே பொது அறிவுக்கு உட்பட்ட பாடத்திட்டத்தை பதிவிட்டிருக்கிறேன் இங்கே சென்று அதை ஒரு முறை வாசித்துக் கொள்ளுங்கள்..
 
    சரி தோழர்களே. இன்று அறிவியல்பகுதியில் எந்த தலைப்புகளின் கீழ் படிக்கவேண்டும் என்பதைக் காணலாம்.
  
  தினமும் நடக்கும் அறிவியல் நிகழ்வுகள் மற்றும் அறிவியல் அறிஞர்களின் ஆய்வுகள், அறிவியல் சாதனைகள் போன்றவைகளை நன்றாக அறிந்திருத்தல் அவசியம். வினாக்கள் இயற்பியல், வேதியியல் தாவரவியல் மற்றும் உயிரியல் போன்ற தலைப்புகளிலிருந்து கேட்கப்படும். 

 அறிவியல் விதிகள், அறிவியல் கருவிகள், கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்களிப்பு, மனித உடலியல், நோய்கள், நோய்களின் காரணம், சிகிச்சை மற்றும் தடுப்பு, டயட்-சரிவிகித உணவு, மனித மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலையியல், உறுப்புகள் மற்றும் சேர்மங்கள். அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மற்றும் அதைச்சார்ந்த விஷயங்கள், மின்சாரம், தேசிய ஆய்வகங்கள் மற்றும் பிற தொடர்புடைய தலைப்புகளின் கீழ் வினாக்கள் கேட்கப்படும்..

     தேர்வுக்கு தாயாராகும் தோழர்கள் எப்போதும் தலைப்புகளின் கீழ் வாசித்தீர்கள் என்றால் எதையும் தவறவிடாமல் அனைத்தையும் படித்து விடலாம்.மேற்கண்டவை குரூப் 2 மற்றும் குரூப் என இரண்டு தேர்வுகளுக்கும் பொதுவான அறிவியல் பகுதியாகும். குரூப் 4 க்கு சற்று எளிமையாகவும் குரூப் 2 க்கு சற்று கடினமானதாகவும் வினாக்கள் அமையும்.

     இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பிரிவுகளில் எந்தெந்த தலைப்புகள் இடம் பெறும் என்பதை வரும் பதிவுகளில் சற்று விளக்கமாக சுட்டிக்காட்டுகிறேன்..
நன்றி..
--------------------------------------------------------------------------------
பகிர்ந்து கொள்ளுங்கள்..படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
-------------------------------------------------------------------------------
                                                             அன்புடன்  இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

5 comments:

 1. மது மதி .....உங்கள் சமூக அக்கறை பிரமிக்க வைக்கிறது ...........

  என் தளம் என் உணர்வுகள் சார்ந்தது ..

  உங்கள் தளம் மற்றவர்களின் உணர்வுகள் சார்ந்து இருக்கு ....

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வேலைத் தேடுபவர்களுக்கு மிகவும் பயன்படும்...
  நன்றி!

  ReplyDelete
 3. you are very great, thankyou.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com