புது வரவு :
Home » , , , » பதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க..

பதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க..


          ணக்கம் தோழர்களே.. பதிவர் சந்திப்பைக் குறித்த செய்திகளை விரைவில் பகிர்ந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் பாருங்கள் உங்களுக்கு சுவையான ஒரு செய்தியை சொல்ல மீண்டும் அதே தலைப்போடு வந்துவிட்டேன்..

        ஆம்..பதிவர்களே கடந்த 26.08.2012 அன்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பானது தமிழ் வலையுலகத்தில் நடந்த மிகப்பெரிய சந்திப்பு என்பதை எவராலும் மறுக்கமுடியாது.அது சரி எவராலும் அது மறக்கப்படக்கூடாதல்லவா.அதற்காகத்தான் காலை முதல் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகாக படம்பித்து இருக்கிறோம்.இன்னும் இரண்டொரு நாளில் அது கானொளியாக வெளியிடப்படும்.நேரலை மூலம் நிகழ்வை காண முடியாதவர்கள் இந்த காணொளி மூலம் நிகழ்வை கண்டு ரசிக்கலாம்.அத்தோடு நின்று விடாமல் அன்றைய நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நண்பர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியிட்டு வருகிறார்கள்.விழாக்குழுவின் சார்பாக இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.எனவே அவை விரைவில் வெளியிடப்படும்.இந்த புகைப்படங்களை அங்கொன்றும் இங்கொன்றும் என சிதறவிடாமல் அனைத்தையும் ஒன்று சேர்த்து மின் இதழாக வெளியிட இருக்கிறோம்.


       புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரோடு அவரது வலை முகவரியோடும் இருக்கும் வண்ணம் தயார் செய்யப்படுகிறது.காலம் முழுவதும் அதை நாம் அழகாக புரட்டிப் பார்த்து புரட்டிப் பார்த்து மனம் மகிழலாம்.எனவே எம்மிடம் உள்ள படங்களை  தொகுத்து தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.நீங்களும் உங்களிடத்தில் இருந்த புகைப்படக் கருவியின் மூலம் பல படங்களை எடுத்திருப்பீர்கள்.அவற்றை அனுப்பி வைத்தால் அப்படங்களையும் மின் இதழில் இணைத்துக்கொள்வோம். புகைப்படங்களை kavimadhumathi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.முடிந்தால் அதில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரையும் வலை முகவரியையும் குறிப்பிடுங்கள்.இந்த மின் இதழானது விரைவில் வெளியிடப்படும்..

                                                                                                                                  மகிழ்ச்சியுடன்,
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

45 comments:

 1. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! ஆல்பம் பார்க்கக் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 2. உண்மையில் பாராட்டப் பட வேண்டிய சிறப்பான பணியை செய்துவரும் உம் போன்றோருக்கு பாராட்டுகளும் நன்றியும் உம் பயணத்தை சிறப்புடன் தொடருக்க....

  ReplyDelete
 3. நல்ல விடயம்
  பாராட்டக்கூடிய விஷயம் சார்
  அந்த தொகுப்பை காண எனக்கும் ஆவல் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. அப்படியா மகிழ்ச்சி..

   Delete
 4. நற்செய்தி. காத்திருக்கிறேன் மின் இதழுக்காக

  ReplyDelete
 5. காணொளியையும் மின் இதழையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. உங்கள் முயற்சியை பாராட்டியே தீர வேண்டும் அருமை !!......
  இப்படியே தொடர வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 7. நல்லதொரு முயற்சி.பதிவர் சந்திப்புக்கான தங்களின் உழைப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுள்ளது மலைக்க வைக்கின்றது.வாழ்த்துகக்ள்.

  ReplyDelete
 8. இன்னும் வேலைகள் தொடர்கிறதா... ஆச்சர்யப்பட வைக்கிறீங்க எல்லாரும்! விழா குழுவினருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. ரொம்ப நல்ல விஷயம் சார் ஆவலுடன் எதிர்பார்த்து

  ReplyDelete
 10. அருமை! தொடருங்கள்!

  ReplyDelete
 11. அசத்துங்க அசத்துங்க!

  ReplyDelete

 12. ஒன்றே செய்யினும் நன்றே செய்வோம் என உணர்த்துவோம்

  ReplyDelete
 13. //புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரோடு அவரது வலை முகவரியோடும் இருக்கும் வண்ணம் தயார் செய்யப்படுகிறது//

  புதிய முயற்சி தொடருங்கள்

  ReplyDelete
 14. பதிவர் சந்திப்பு முடிந்தும் அதன் இனிமை குறையாமல் ஒவ்வொன்றும் கேட்கவே மகிழ்வா இருக்குங்க சார்

  ReplyDelete
 15. சிறுக சிறுக அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ட பதிவர் சந்திப்பு புகைப்படங்களை இதழாக காணலாம் என்று உங்களுடைய "பதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க" என்ற தலைப்பை பார்த்து ஆவலுடன் புகைப்படத்தை காணவந்தேன் ஆனால் நீங்களோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்துக்கு வரும் விளம்பரம் மாதிரி "விரைவில்" என்று போட்டுள்ளீர்கள்.விரைவில் என்பது விரைவில் இருக்கட்டும் சீரியல் போல வி.......ரை........வி.......ல் என்று இழுத்துகொண்டே நாட்களை கடத்திவிடாதீர்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் காணலாம் நண்பா..

   Delete
 16. மிக நல்ல முயற்சி. சீக்கிரம் வெளியிடுங்கள் தோழரே....

  ReplyDelete
 17. கட்டாயம் தோழரே..

  ReplyDelete
 18. இதை... இதைத் தான் சார் எதிர்ப்பார்த்தேன்...

  ReplyDelete
 19. எதிர் பார்த்து காத்திருக்கிறேன்...நன்றி மதுமதி அண்ணா

  ReplyDelete
 20. ஆல்பம் பார்க்க காத்திருக்கிறேன் அண்ணா.....

  ReplyDelete
 21. சிறந்த முயற்சி பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 22. பாராட்டக்கூடிய விஷயம் சார்...

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் நண்பரே,
  இந்த அல்பத்தை தரிசிக்க நானும் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 24. படங்களைக் காண ஆவலோடு வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

  காத்திருக்கிறேன் படங்களடங்கிய மின்னதழுக்காக....!!!

  ReplyDelete
 25. அன்பின் மதுமதி - தமிழ்ப் பதிவர்கள் திருவிழா - சிறப்பு மின்னிதழ் - விரைவினில் வெளியிட இருப்பதற்குப் பாராட்டுகள் -நல்வாழ்த்துகள் - பதிவர் சந்திப்பு நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் - இன்னும் அதே சிந்தனையில் - என்ன என்ன புதிய்தாகச் செய்யலாம் எனச் சிந்தித்து செய்து கொண்டிருக்கும் நிர்வாகக் குழுவினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நட்புடன் சீனா

  ReplyDelete
 26. பின் தொடர்பதற்காக்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com