புது வரவு :
Home » » VAO 2012 வினாவிடைகள் இன்று வெளியீடு

VAO 2012 வினாவிடைகள் இன்று வெளியீடு

      ணக்கம் தோழர்களே.. ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வி.ஏ.ஓ தேர்வை சிறப்பாக எழுதியிருப்பீர்கள் என நம்புகிறேன்.. சென்ற தேர்வுத்தாளைப் போல இல்லாமல் இந்த முறை எளிமையான வினாக்கள் தான் தேர்விற்கு கேட்கப்பட்டிருக்கின்றன. பொதுத்தமிழ் மிகவும் எளிமையாக இருந்ததென சொல்லலாம்.பொது அறிவு வினாக்களும் சற்று எளிமையாகத்தான் கேட்கப்பட்டிருந்தன. இதைப் பற்றி முழுமையாக அடுத்த பதிவில் காணலாம்.



           வினாத்தாள் எளிமையாக இருந்தால் போட்டி பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.1870 வி.ஏ.ஓ பதவிகளுக்கு 9 லட்சம் பேருக்கும் மேல் விண்ணப்பித்தார்கள். 2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.7 லட்சம் பேருக்கு மேல் தேர்வெழுதியிருக்கிறார்கள். இந்த முறை தேர்வு எந்த பிரச்சனையுமின்றி நடந்து முடிந்திருக்கிறது. எப்போதும் நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்கள் அதிகமாக இடம்பெறும் ஆனால் இம்முறை நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வினாக்கள் ஏதும் கேட்கப்படவில்லை. இதனால் நடப்பு நிகழ்வுகளை நேரம் ஒதுக்கி படித்துச் சென்ற மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

          தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் கழித்தே அதற்கான முடிவுகளை தேர்வாணையம் வெளியிடும். ஆனால் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி பார்க்கும்போது ரத்தான குரூப் 2 மறு தேர்வு எழுதுவதற்கு முன்னர் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

         சென்ற குரூப் 4 தேர்வு முடிந்த இரவே அரசு தேர்வுக்கான விடைகளை வெளியிட்டது. ஆனால் நேற்று விடைத்தாள் வெளியாகவில்லை. இன்று மதியம் விடைகளை வெளியிடுவதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது.இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் உடனடி பணி நியமனம். நேர்காணல் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

         எழுதி முடித்த தேர்வுத்தாளின் விடைகளை அறிய ஆயத்தமாயிருப்பீர்கள். இன்னும் சற்று நேரத்தில் விடைத்தாளை அரசு வெளியிட்டுவிடும். தேர்வாணையம் கொடுக்கும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது கேட்கப்பட்ட வினாக்கள் தவறாக இருந்தாலோ ஒரு வாரத்திற்குள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ ஈமெயில்மூலமாகவோ  தேர்வாணைய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தலாம்.

            விடைகளைக் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்  

                                 http://www.tnpsc.gov.in/answerkeys_30_09_2012.html
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

8 comments:

  1. இது என்ன தேர்வு? எனக்குப் புரியவேயில்லை. இங்கே (மலேசியா) இப்படிப்பட்ட தேர்வு இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளித் தேர்வுபோல் தெரியவில்லையே..

    ReplyDelete
  2. இதுவா.. இது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுத்தேர்வு.இதில் தேர்வாகும் அனைவருக்கும் தமிழக அரசுப்பணி கிடைக்கும்.மலேசியாவில் அரசுப் பணிகளுக்கு தேர்வு வைப்பதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? இங்கே, பட்டப்படிப்புச் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு காலியான அரசாங்க பதவிக்கு விண்ணப்பிப்பார்கள். (சிபாரிசு இருந்தால், அது வேறு) அந்தந்த தேர்விற்குத் தோதாக கட்டங்கட்டமாக நேர்முகத்தேர்வு நடைபெறும், அதிலிருந்து தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து இறுதியாக யார் நிலைக்கின்றார்களோ, அவர்கள் பதவியில் நியமிக்கப்படுவார்கள்.இப்படிப்பட்ட தேர்வு இருப்பதாகத் தெரியவில்லையே.! விசாரிக்கின்றேன். விளக்கத்திற்கு நன்றி சார்.

      Delete
  3. TNPSC குறித்த தங்களது அனைத்து பதிவுகளுமே அருமை. தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். பயனுள்ள சேவை. தொடருங்கள்...!

    ReplyDelete
  4. கேள்வித்தாளை நானும் பார்த்தேன். மிகவும் எளிமையாகவே உள்ளது. Cut Off அதிகமாகவே இருக்கும். பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர் கட் ஆப் அதிகமாகத்தான் இருக்கும்..

      Delete
  5. cut off Mark எவ்வளவாக இருக்கும் என்று தெரிந்தால் கூறுங்கள் அண்ணா

    ReplyDelete
  6. what is mean by cut off mark. How many achieve to score

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com