புது வரவு :
Home » , , , , » கவர்ச்சிக்கு மட்டும் பயன்படும் தமிழ்ப்பட நாயகிகள்

கவர்ச்சிக்கு மட்டும் பயன்படும் தமிழ்ப்பட நாயகிகள்

         15 வருடங்களுக்கும் முன்னர் எழுத்தாளர் ராஜேஷ்குமார் சொன்னார்.கதை கொஞ்சம் உதை கொஞ்சம் சதை கொஞ்சம் இதுதான் இன்றைய தமிழ் சினிமா என்று.கதை இருக்கும் போது உதையும் சதையும் இருக்கலாம் தவறில்லை.ஆனால் கதையே இல்லாமல் சதையும்,உதையும் மட்டுமே சிலநேரங்களில் முழு சினிமாவை ஆக்கிரமித்துவிடுகிறது.

                          ஒரு படத்திற்கு நாயகன் எவ்வளவு முக்கியமோ அதைப் போல நாயகியும் முக்கியம். அந்த இருவரைச் சுற்றிதான் பல வருடங்களாக தமிழ் சினிமா இயங்கி வருகிறது. இப்போது தனது படத்தில் பிரபல கதாநாயகிதான் நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரபல நடிகைகையிடம் கால்சீட் வாங்குவதற்கு தீவிரமாக செயல்படும் இயக்குனர், அந்தப் படத்தில் நாயகிக்கான முக்கியத்துவத்தை காட்டவோ கூட்டவோ முனைவதில்லை. பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் அவர்களுடன் மூன்று டூயட் பாடல்களில் நடனமாடுவதற்கும் நாயகன் எதிரிகளோடு சண்டை போட்டு களைத்துப் போகும்போது நாயகனின் களைப்பை போக்குவதற்கும் மட்டுமே நாயகிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

        தமிழ் சினிமாக்களின் கதைப்படி பார்த்தால் நாயகி என்றொரு கதாபாத்திரம் தேவையே இல்லை. ஆனால் கவர்ச்சி என்றொரு சமாச்சாரம் படத்தைப் பார்க்கும் ரசிகனுக்குத் தேவை. ஆகையால் அதற்காக கதாநாயகி என்றொரு பாத்திரத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. (சில படங்கள் தவிர்த்து) நாயகனை ஒட்டி மட்டுமே கதையமைத்து நாயகன் புகழ் பாடும் படத்தில் நாயகியை எப்படி பயன்படுத்துவது? கதைக்கு சம்பந்தமில்லாத காதல் காட்சிகளுக்கும் பாடல்காட்சிகளுக்கும் பயன்படுத்த வேண்டியதுதான்.

                 உலக சினிமாக்களின் படி பாடல்கள் இல்லாமல் தமிழ் சினிமா எடுத்தால் நாயகி என்றொரு கதாபாத்திரத்தின் அவசியம் இல்லாமற்போகும் போல.. ஏனென்றால் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு படத்தை ஹீரோவுக்கு ஒரு ஓபனிங் சாங், ஹீரோயினுக்கு ஒரு ஓபனிங் சாங், ரெண்டு டூயட் சாங்,  கடைசி ரீல் சாங்(குத்துப்பாட்டு) கதாநாயகியின் கையைப் பிடித்து இழுத்தவர்களை நாயகன் புரட்டி எடுக்கும் சண்டைக்காட்சி, இண்டர்வல் வரைக்கும் ரசிகர்களை இருக்கைகளில் அமர வைக்க நாயகியின் கவர்ச்சி, இருவருக்கும் காதல் காட்சி என்று படத்திற்கு சம்பந்தமில்லாத காட்சிகளை சேர்த்து ரெண்டரை மணிநேர சினிமாவாக காட்டவேண்டியிருக்கிறது.

                       முன்பெல்லாம் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வருபவர்கள் நாயகியின் நடிப்பு அப்படி இப்படி என்று புகழ்ந்து பேசிக்கொண்டு போவார்கள். ஆனால் இன்று நாயகனை மட்டும் தான் அப்படி பேசுகிறார்கள்..திரையை விட்டு நகர்ந்துவுடனேயே நாயகியை மறந்துவிடுகிறோம்.முன்பெல்லாம் நாயகியின் நடிப்பிற்காக மட்டுமே ஓடிய படங்கள் ஏராளம்.ஆனால் இப்போதெல்லாம் அப்படி ஏதும் நடப்பதில்லை.இன்றைய படங்களில் நாயகனுக்கு ஜோடியாக நடிப்பவரை நடிகை என்று சொல்வதைக் காட்டிலும் நாயகி என்று சொல்லிவிட்டு போகலாம்.நடிப்பவர்களைத் தானே நடிகைகள் என்று அழைப்போம். நடிக்கத் தெரிந்த நடிகைகளைக் கூட நமது இயக்குனர்கள் நடிக்க வைப்பதில்லை என்பது மறுபக்கம்.

                தமிழ் நடிகை தேசிய விருது பட்டியலில் இடம்பெறவில்லையே என்று ஏக்கப்படுய்ம் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் நடிகைகள் நடித்தால் மட்டுமே அதற்கு வாய்ப்பு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

                    நாட்டியப் பேரொளி பத்மினி என்றார்கள்..  நடிகையர் திலகம் சாவித்ரி என்றார்கள்.. கன்னடப் பைங்கிளி சரோஜா தேவி என்றார்கள்..  ஆனால் இன்றைய தமிழ் சினிமாவில் அப்படி யாருக்கும் பட்டம் கொடுக்க முடிவதில்லையே.. மாறாக இரண்டு மூன்று படங்களில் நாயகனாக நடித்தவர்களெல்லாம் பட்டப்பெயர்களை சூடிக்கொண்டு தானாகவே தங்களை தரம் உயர்த்திக் கொள்கிறார்கள்.. மேற்கண்டவர்கள் அன்றைய சினிமாவின் கவர்ச்சிக் கன்னிகள். அவர்களின் கவர்ச்சி ஆயுதம் அவர்களின் கண்களும் நடிப்பும்தான். சிவாஜி எம்.ஜி.ஆரின் நடிப்பிற்கும் இணையாக நடித்து பெயர்பெற்றவர்கள்.                                                                                                                                         

      இன்றைய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்றோருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகிகள் கவர்ச்சிக்காகவும் நாயகனுடன் டூயட் பாடவும் ரசிகர்களை தியேட்டருக்குள் இழுக்கவும் மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரிகிறது.. ஒரு சில படங்களில் நாயகி நடிப்பதற்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

            ஒவ்வொரு படத்திற்கும் கதைக்கரு என்றிருக்கும் அந்தக் கருவில் நாயகன் இடம் பெற்றிருப்பான்.ஆனால் நாயகி இடம் பெற்றிருக்க மாட்டாள். அது ஏனோ.. சுருக்கமாகச் சொன்னால் கதைக்கு நாயகி தேவைப்படவில்லை திரைக்கதைக்கு மட்டும் தேவைப்படுகிறாள்..

         அன்று அகத்தியர் படத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தே தீர வேண்டும் என்பதற்காக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தார் ஏ.பி.நாகராஜன். அப்போதைய முன்னணி நடிகைகள் ஐயாயிரம் பத்தாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

           இன்று ஒரு கோடி ரெண்டு கோடி என்று நாயகிகளுக்கு கொடுக்கிறார்கள். ரெண்டு டூயட் காட்சிகளில் கவச்சி மழை பொழியவும் நான்கைந்து காதல் காட்சிகளிலும் ஒரு முத்தக் காட்சியிலும் தோன்றுவதற்காக மட்டும். ஆனால் அவர்கள் படத்தில் நடிப்பதில்லை என்று சொல்வதைக் காட்டிலும் நடிப்பதற்கான சந்தர்ப்பத்தை தமிழ்ப்பட இயக்குனர்கள் கொடுப்பதில்லை என்றே சொல்லலாம்.ஆனாலும் பாலா போன்ற இயக்குனர்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

              'ரெண்டு' படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான நடிகை அனுஷ்காவை தமிழ்த் திரையுலகம் வரவேற்கவில்லை. பின் ஆந்திராவில் 'அருந்ததி' படம் மூலம் தன் நடிப்பாற்றலை வெளிக்காட்டிய பின் தமிழ் சினிமா அவரை அழைத்தது. ஆனால் அவரை நடிக்க வைக்கவில்லை. பிரபல நாயகர்களோடு டூயட்தான் ஆட வைத்தது. அதே போல் தமிழில் டூயட் ஆடிக்கொண்டிருந்த நயன்தாராவை ஆந்திர சினிமா சீதாவாக சித்தரித்து அவரின் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது.ஆந்திராவில் வெளியான  'மகதீரா' படத்தில் ஓரளவு தன் நடிப்பை வெளிக்காட்டிய காஜல் அகர்வாலும் தமிழ்ல் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுகிறார்.அவையெல்லாம் ஹீரோயின் சப்ஜெக்ட் என்று ஒதுக்கிவிட முடியாது. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் ஜோதிகா நடிப்பிற்காக இன்னும் கூடுதலாக வசூலை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

                 ஆனால் பிரபல நடிகர்கள் படங்களைத் தவிர்த்து பார்த்தால், புதுமுக நாயகர்களோடு சேர்ந்து நடிக்கும் சில புதுமுக நாயகிகளுக்கு தமிழ்ப் படங்களில்  முக்கியத்துவம் இருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது பிரபல நடிகர்களின் படங்களில் நடிக்கும் பிரபல நடிகைகள் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது..

                  நாயகன் நாயகி என இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்த தமிழ்ப்படங்கள் இதுவரை தமிழின் முக்கியப் படங்களாக இருக்கின்றன. இனிமேலும் அப்படியான சூழல் வந்தால், வெளியாகும் தமிழ்ப்படங்களில் 80 சதவீத படங்களாவது கவனிக்கத்தக்க படங்களாக இருக்கும்.
                         
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

14 comments:

  1. இப்போதெல்லாம் மூன்று படங்களுக்கு மேல் புது நாயகிகளுக்கு வாய்ப்பில்லை. அந்த விதத்தில் சுஹாசினி,சரிதா,ராதா, ரேவதி போன்ற இன்னும் சிலரே நடிப்பால் சில காலம் நிலைத்து ரசிகர்கள் மனதில் நின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரியே..

      Delete
  2. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க சிறப்பு பேட்டி
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  3. தற்போதைய நடிகைகள் விரைவாக சம்பாதித்துக்கொள்கிறார்கள், வசதியாக யார் தயவும் இல்லாமல் வாழ்கிறார்கள். முன்புள்ள நடிகைகளுக்கு நடிப்பு இருந்தது ஆனாலும் இறக்கும் தருவாயிலும் முதுமையிலும் ஏழைகளாகவே வாழ்ந்துள்ளார்கள், வாழ்கிறார்கள் என படித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி.. சிலர் மட்டுமே வறுமையின் பிடியில் உள்ளனர்..

      Delete
  4. இப்போதெல்லாம் use and throw தான்...

    "டப்பு" எவ்வளவு...?

    கலைச்சேவை (!) செய்ய இன்றைக்கு யாருமில்லை...(சிலரைத் தவிர)
    tm3

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் தலைவா..

      Delete
  5. உண்மையான கவனிப்பு , தமிழ் கதாநாயகி பற்றிய தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது உண்மைதான் அந்தகாலத்து நடிகைக்கும் இப்ப இருப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம்

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறது என்கிறீர்களா இல்லை என்கிறீர்களா? ஹாஹாஹா..

      Delete
  7. உள்ளதை உள்ளபடி மிக அழகா சொன்னீங்க

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா !!

    அருமையான அலசல். என்ன செய்ய தமிழ் படங்கள் போகும்போக்கு அப்படி இருக்கிறது.

    நான் ஈ, படத்துல 'ஈ' நாயகனாக நடித்தது, இனிவரும் காலத்தில் ,நாயகியாகவும் ஈ நடிக்கவந்துவிட்டால் என்ன செய்வது, அதனால் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள நடிகைகள் படும்பாடுகள் சொல்ல வார்த்தைகள்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாகச் சொன்னீர்கள்..

      Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com