புது வரவு :
Home » , , , » வாரிசு இல்லையென்றால் சொத்து அரசுக்கு சேரும்

வாரிசு இல்லையென்றால் சொத்து அரசுக்கு சேரும்

சொத்துகள் ஏராளம் இருக்கிறது அதை ஆள வாரிசு இல்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அந்தச் சொத்துக்களை அக்குழந்தைக்கு கொடுப்பது இன்றளவிலும் இருக்கும் நடைமுறை. ஆனால் அப்படி தத்தெடுக்கும் குழந்தைக்கு சொத்துக்களை ஆள உரிமை இல்லை என்று சட்டம் கொண்டு வந்தால் எப்படியிருக்கும்?இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய ஆளுனர்களில் முக்கியமானவர் டல்ஹௌசி பிரபு(1848-1856).அவர் ஏராளமான இந்தியப் பகுதிகளை ஆங்கிலேய ஆட்சியுடன் இணைத்தார்.போர்கள் மூலம் நாடுகளை இணைக்கும் கொள்கையைப் பின்பற்றினார்.அதே நேரத்தில் இந்தியா நவீனமயமாக்கப் படுவதற்கான அடித்தளத்தினையும் அவர் அமைத்தார்.



இந்தியர்கள் தங்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்தால் ஆண் குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தனர். அவ்வாறு தத்தெடுத்துக்கொள்ளும் மகனுக்கு சொத்தில் எல்லா உரிமையும் உண்டு. தத்தெடுக்கப்பட்டவரும் இயற்கை வாரிசுகளைப் போல எல்லா உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளலாம். முதலில் சுதேச மன்னர்களின் தத்தெடுக்கும் உரிமையை ஆங்கிலேயர்கள் எந்த வித தடையும் இன்றி ஒப்புக்கொண்டனர். டல்ஹௌசி பிரபு ஆளுனராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு ஆங்கில ஆட்சியை விரிவு படுத்த வேண்டும் என எண்ணி வாரிசு இழப்பு கொள்கையை கடைபிடித்தார்.  

1.ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள்
2.ஆங்கிலேயர்களை சாந்ர்ந்திருந்த அரசுகள்
3.சுதந்திர அரசுகள்

மேற்கண்ட மூன்று வகையான அரசுகள் அப்போதைய இந்தியாவில் இருந்தன.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள்

இந்த அரசுகளை ஆங்கிலேயர் உருவாக்கினர். இந்த அரசர்கள் தங்கள் இறப்பிற்குப் பின் வாசிசுகளை தத்தெடுத்துக்கொள்ள ஆங்கிலேயர்கள் அனுமதிக்கவில்லை.

 
ஆங்கிலேயர்களை சார்ந்திருந்த அரசுகள்:

இந்த நாட்டு அரசர்கள் தத்தெடுக்க வேண்டுமானால் ஆங்கிலேய ஆட்சியின் அனுமதி பெற வேண்டும்.அனுமதி கிடைத்தாலும் கிடைக்கும்.மறுக்கவும் படலாம். 

சுதந்திர அரசுகள்:

இந்த அரசர்கள் தத்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் தத்துப் பிள்ளைகள் சொத்துக்கு மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அரியணையைப் பெற முடியாது. அரியணை உரிமையை ஆங்கிலேய அரசே முடிவு செய்யும்.

வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் சதாரா, ஜெய்ப்பூர், சம்பல்பூர், உதய்பூர், ஜான்சி, நாக்பூர் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயப் பேரரசுடன் டல்ஹௌசி இணைத்துக்கொண்டார்.1857 ம் ஆண்டு நடந்த பெரும் புரட்சியில் தன் நாட்டை பிடுங்கிய ஆங்கிலேயரைக் கொன்று குவித்து ஜான்சிராணி பழி தீர்த்துக்கொண்டார்.

ஜான்சி நாட்டின் ராணியான லட்சுமிபாய்க்கு பிறந்த குழந்தையான தாமோதர்ராவ் நான்கு மாதங்களில் இறந்து போக ஆனந்த ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்துக்கொண்டார்.ஆனால் அது சட்டப்படி செல்லாது என வாரிசு இழப்பு கொள்கையின் படி ஜான்சி நாட்டை ஆங்கிலேய அரசு பிடுங்கிகொண்டது குறிப்பிடத்தக்கது.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. வாரிசு இல்லாட்டி ராஜ்ஜியத்தை எடுத்துக்குவாங்க. அதை எதிர்த்து போராடினார் ஜான்சிராணின்னு மட்டும்தான் தெரியும். மேலும் அதிக விவரங்களை தெரிந்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com