புது வரவு :

TNPSC பாட்டுக்கொரு புலவன் பாரதி

 இயற்பெயர்: சுப்பையா (எ) சுப்பிரமணியன் 

பிறப்பு: திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்

பெற்றோர் சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள் வாழ்க்கைத் துணை செல்லம்மாள் 

இறப்பு: செப்டம்பர் 11 1921 (அகவை 38)  

சமூக பங்களிப்பு: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி

மற்ற பெயர்கள்: பாரதியார், சுப்பையா, சக்தி தாசன் 


சிறப்புப் பெயர்கள்:

தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா

படைப்புகள்:

    குயில் பாட்டு
    கண்ணன் பாட்டு(இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின்        தொகுப்பாகும்)    

    பாஞ்சாலி சபதம்
    புதிய ஆத்திச்சூடி
    சுயசரிதை
    பாரதி அறுபத்தாறு
    ஞானப் பாடல்கள்
    தோத்திரப் பாடல்கள்
    விடுதலைப் பாடல்கள்
    சந்திரிகையின் கதை


வாழ்க்கைக் குறிப்பு:

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி 'பாரதி' என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் இந்தியா என்ற வார இதழில் சூரியோதயம்  கர்மயோகி  தர்மம் என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். 'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே' என பெண்ணுரிமையை ஏத்தினார்.

நினைவு இல்லம்:

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. MIGAVUM PAYANULLA THAGAVALGALI THANTHAMAIKKU ""NANDRI""

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com