புது வரவு :
Home » , , , » டி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும்

டி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும்

தமிழ் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கி தயாரித்து வெளியிட்டு வசூலை அள்ளும் தந்திரம்  தெரிந்தவர்கள் மிகச் சிலரே.சிலர் 5 படங்கள் வரை கொடுத்தும், சிலர் பத்து படங்களைக் கொடுத்தும் பின் காணாமல் போயிருக்கிறார்கள்.ஆனால் 100 படங்களைத் தாண்டி இன்றைய தலைமுறையினருக்கும் சிறிய பட்ஜெட் படத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் இராம.நாராயணன் அவர்கள்தான்.

 தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இராம. நாராயணன், தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, இந்தி,  போஜ்புரி ஆகிய 9 மொழிகளில் 126 படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார். வேறு எவரும் இவ்வாறு 100-க்கு மேற்பட்ட படங்களை 9 மொழிகளில் இயக்கியதில்லை.பாடலாசிரியராக எடுத்த முயற்சி தோல்வியில் முடிய கதை வசனகர்த்தாவாக தன்னை மாற்றி திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி தயாரித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களை (ஆங்கிலம்) வாங்கி இங்கே வெளியிடுவதில் கில்லாடி.



ராம.நாராயணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் 126-வது படம் 'ஆர்யா சூர்யா'. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. விஷ்ணுபிரியன், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், கோவை சரளா, நட்சத்திரா, ருத்ஷா, நளினி, ஆர்த்திகணேஷ், முகைத்கான் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்தப் படப்பிடிப்பில் பவர்ஸ்டார் இருக்கும்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருவர் சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் வழியில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது. அந்த இரண்டில் எதை தேர்ந்தெடுத்து முன்னோர்கள் என்பதே கதை. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படமாக தயாராகிறது என்றார் ராம.நாராயணன்.

இந்தப் படத்தில் பிறைசூடன், விவேகா, கானாபாலா போறோர் பாடல்கள் எழுதியிருந்தாலும் என் அருமை சகோதரர் பேராசிரியர் சொற்கோ கருணாநிதி அவர்கள்  எழுதிய ‘முமைத் முமைத் முமைத்’ என்ற பாடலையே இந்நிறுவனம் விளம்பரத்திற்காக முன்னிறுத்துகிறது.காரணம் இந்தப்பாட்டை  டி.ராஜேந்தர் பாடி முமைத்கானோடு அதிரடியாக குத்தாட்டம் போட்டு கலக்கியிருக்கிறார்.போதாக்குறைக்கு டி.ஆருடன் இந்தப் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைந்து பாடியிருக்கிறார்.

இப்பாடல் காட்சி டி.ஆர். கார்டனில் பெரிய அரங்கு அமைத்து படமாக்கப்பட்டு உள்ளது. ஐந்து நாட்கள் ஐந்து அரங்குகளில் இருபத்தைந்து நடன அழகிகள் மற்றும் முமைத்கானுடன் அவர் நடனம் ஆடி கலக்கியிருக்கிறார். கவிஞர் சொற்கோ அவர்கள் இளையராஜா இசையில் 'அழகி' 'ஜூலி கணபதி' போன்ற படங்களுக்கு பாடல் எழுதியவர்.இப்பாடல் வெற்றியடைய இப்பாடலாசிரியர் அன்பு சகோதரர் சொற்கோ அவர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.இப்படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கும் இப்பாடலை பாடி ஆடிய டி.ராஜேந்தர் அவர்களுக்கு ஏற்கனவே வாழ்த்துகளைச் சொல்லியாகிவிட்டது.



சென்னையை கலக்க இருக்கும் பதிவர் திருவிழா

சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் சென்னையை முற்றுகையிடப் போகிறார்கள் தமிழ் வலைப்பதிவர்கள். வருகிற செப் 1 சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நடக்கவிருப்பது பதிவர்கள் யாவரும் அறிந்ததே.. இந்த நிகழ்விற்கு வருகை தரும் பதிவர்கள் தயவு கூர்ந்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.. ஏனென்றால்  பதிந்த பெயர்களை மனதில் வைத்தே உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.இதில் பதிவர்களின் தனித்திறமையைக் காட்டும் நிகழ்வும் இருக்கிறது.இதில் பாடல், நடனம், பலகுரல் என பதிவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டலாம்.

இதில் பங்கு கொள்ள விரும்பும் பதிவர்கள் kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு 25.8.13 க்குள் உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.இதுவரை இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்கள் வரவை உறுதிபடுத்தியிருக்கும் பதிவர்களின் பட்டியலை இங்கே காணலாம்..


                                                 பதிவர் திருவிழா 2013 அழைப்பிதழ்

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

8 comments:

  1. ச்சே! நான் என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேனே!!

    ReplyDelete
  2. என் பெயர் பட்டியலில் இல்லை
    மதுமதி அவர்களிடம் தெரிவித்து இருந்தேன்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பட்டியலில் வெளியாகும் ஐயா..

      Delete
  3. Surely we will participate and eagerly waiting to meet others

    ReplyDelete
  4. இனிய வணக்கம் தோழர்..
    நலமா?
    திரு.இராமநாராயணன் அவர்களின் படங்கள்
    சிறுவயதாக இருக்கும் போது..பார்த்து ரசித்தவை..
    இன்னுமொரு டி.ஆர் ..எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கல்..
    ==
    பதிவர் திருவிழா சிறப்புற நடந்தேற
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்..
    இம்முறை கலந்துகொள்ளமுடியாத சூழல்...
    பணிச்சுழலில் இருக்கிறேன்..
    இன்னும் பல்லாண்டு காலம் சந்திப்பு
    தொடர்ந்து நடக்க என் பிரார்த்தனைகள்...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com