புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி பொது அறிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1

டி.என்.பி.எஸ்.சி பொது அறிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1

                   பொது அறிவு-பண்டைய வரலாறு

            வணக்கம் தோழர்களே..இந்தவார இறுதியில் நடைபெறும் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பீர்கள்.கிட்டத்தட்ட அனைத்தையும் படித்திருப்பீர்கள். என்னைத் தொடர்பு கொண்டு பொது அறிவு சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுங்கள் என்று கேட்டு வந்த காரணத்தினால் இந்தப் பதிவை இடுகிறேன்.. பொது அறிவு பகுதியில் எந்தெந்த பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பதை பொது அறிவு பாடத்திட்டம் என்ற பகுதிக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்..

           பொது அறிவுத்தாளில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை இங்கே குறிப்பிடுகிறேன்.. பாடங்களை படித்திருப்பீர்கள். அவற்றில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதைப் பற்றி இப்பதிவினில் பார்ப்போம்..

          பொது அறிவுத்தாளிலிருந்து பத்து வினாக்களை எதிர்பார்க்கலாம்.அதிலும் இந்திய வரலாற்றிலிருந்து ஏழு வினாக்களும் தமிழக வரலாற்றிலிருந்து மூன்று வினாக்களும் இதுவரை கேட்கப்பட்டு வருகிறது.

வரலாறு

        முதலில் வராலாற்றுப் பகுதியில் முக்கியம் வாய்ந்தவை எவையெனப் பார்ப்போம்..

வரலாற்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்..

         1.பண்டைய வரலாறு
         2.நவீன வரலாறு
         3.சுதந்திர போராட்ட வரலாறு

 பண்டைய வரலாறு

சிந்து சமவெளி நாகரீகம்
     
       பண்டைய வரலாறு சிந்து சமவெளி நாகரிகங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்..அதில் தொடங்கி பௌத்த மதம், சமண மதம், மௌரியப் பேரரசு, குப்த பேரரசு, துருக்கியர் படையெடுப்பு, முகலாய ஆட்சி உள்ளிட்டவற்றை பண்டைய வரலாறு என அழைக்கிறோம்..

      மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அவற்றில் முக்கியமானவை எவை என சிறு குறிப்பத் தருகிறேன்..

       படித்து முடித்த வரலாற்றை ஒரு கதையாக தன்னைத்தானே சொல்லிப் பாருங்கள்.. சொல்லமுடிகிறதா.அப்படியானால் உங்களுக்கு வரலாறு தெரிகிறது என்று அர்த்தம்.

       உதாரணமாக சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி கதையாகத் தெரிந்திருந்தால் அடுத்து யார் அவற்றை ஆராய்ந்தார்கள் எப்போது அது உலகிற்கு தெரியவந்தது, அம்மக்களின் தெய்வம், அவர்களின் வாழ்க்கை அமைப்பு போன்றவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்து சொல்லிப் பாருங்கள்..கட்டாயம் இதிலிருந்து ஒரு வினாவை எதிர்பார்க்கலாம்.

       அலெக்ஸாண்டர் பற்றி அறிந்துகொள்ளுங்கள்..புத்தர், மகாவீரர் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்..

      புத்தமதத்தை ஆதரித்தவர்கள், பரப்பியவர்கள், மாநாடு நடந்த இடங்கள் அவற்றை நடத்தியவர்கள் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.. மாநாடு நடந்த இடத்தையும் நடத்திய மன்னரைப் பற்றியும் வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

        ஒரு பேரரசைப் பற்றி படிக்கும்போது அப்பேரரசை தோற்று வித்தவர்கள் யார், முக்கியமான அரசர்கள், அவைப்புலவர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவைக்கு வந்த வெளிநாட்டு பயணிகள், அம்மன்னரின் புகழ்பாடும் கல்வெட்டுகள் , அவரின் பட்டப்பெயர்கள், அவர் வெளியிட்ட நாணயங்கள், அவர் விதித்த வரி, அவர்தம் ஈடுபட்ட போர், நடந்த இடம், அப்பேரரசின் கடை மன்னர், எந்தப் பேரரசை வீழ்த்தி இது தோன்றியது, இப்பேரரசை வீழ்த்தியவர் யார் போன்றவற்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்..

       எந்தப் பேரரசிற்கு பிறகு எந்தப் பேரரசு தோன்றியது என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.இப்படியும் வினாக்கள் கேட்கலாம்.

        இதே போல் அரேபிய, துருக்கியர்களின் முக்கிய விபரங்களையும், துக்ளக் வம்சம், லோடி வம்சம் உள்ளிட்ட வம்சங்களையும், முகலாயர்களின் முக்கிய விபரங்களையும்  தனியே படித்துக் கொள்ளவும்.

       ஏனென்றால் நிறைய வினாக்கள் உள்ளிருந்து கேட்கப்படுகின்றன.
முகலாயர்களின் ஆட்சியோடு பண்டைய வரலாறு முடியும்.

            அடுத்தப் பதிவில் நவீன இந்திய வரலாற்றைக் காண்போம்..

                                                                                 ( இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்)டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

6 comments:

 1. அருமை தொடருங்கள்!

  ReplyDelete
 2. பயனுள்ள பதிவு.
  தொடருங்கள்.

  ReplyDelete
 3. தேர்வுக்குத் தேவையான பதிவு உரியநேரத்தில்! பாராட்டுக்கள்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 4. தேர்வு எழுதுவோருக்கு நீங்கள் செய்யும் மகத்தான உதவி

  ReplyDelete
 5. please provide model OMR sheet to get downloaded by the TNPSC applicants. That will be useful to get practiced

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com