புது வரவு :
Home » , » திரும்பிக் கிடக்கிறது..

திரும்பிக் கிடக்கிறது..

குழந்தை
தொழிலாளர்களை ஒழிக்கும்
அலுவலக அதிகாரிகளுக்கு
'டீ' கொடுத்துவிட்டு வருகிறான்
டீக்கடைச் சிறுவன்..
-----------------------------
விதவைத் திருமணத்தை
வலியுறுத்தி மேடையில் முழங்கும்
அந்தப் பேச்சாளன் முடித்த
மூன்று திருமணத்திலும்
ஒரு விதவை கூட
இடம் பெறவில்லை..
------------------------------
பத்து திருக்குறளுக்கு மேல்
மனப்பாடமாக சொல்லத்தெரிவதில்லை
திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்
சில தமிழாசிரியர்களுக்கு..
-----------------------------------------
இல்லத்திலாவது
தமிழைக் கட்டாயம் பேசுவோம்..
இருபது வருடங்களாக
மேடையில் முழங்கும்
மூத்த தமிழரிஞரின் பேத்தி
அவரை 'க்ரேன்பா' என்றே அழைக்கிறதாம்..
------------------------
ரத்த புற்றுநோய்க்காக
தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கிறார்..
மருத்துவத்துறை அமைச்சராகப்போகும்
அரசியல்வாதி.
---------------------------------------
காவல் துறை
'உங்கள் நண்பன்'
அந்த 'உங்கள்'
தவறாமல் மாமூல் கொடுக்கும்
ஏரியா ரவுடிகளும் தாதாக்களும்.
-------------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

18 comments:

  1. திரும்பிக் கிடப்பவைகளை
    அன்றாடம் காணும் முரண்களை
    சொல்லிப் போகும் விதம் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 2

    ReplyDelete
  2. முதல் கவிதையும் முடிவுக் கவிதையும் அருமை சகோ!
    இடையில் ஒன்று சற்று நெருடல்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. /புலவர்/

    ஐயா தாங்கள் சொன்ன நெருடல் எதுவென்று தெரிகிறது..நான் கண்ணால் கண்டிருக்கிறேன்..

    கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  4. நன்றி..
    நண்டு@நொரண்டு/ரமணி/

    ReplyDelete
  5. //பத்து திருக்குறளுக்கு மேல்
    மனப்பாடமாக சொல்லத்தெரிவதில்லை
    திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்
    சில தமிழாசிரியர்களுக்கு..///

    சத்தியமா உண்மை..

    ReplyDelete
  6. அனைத்துமே அருமை. மிகவும் யோசிக்க வைப்பவை. பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  7. ஒவ்வொன்றும் நாலு வரி அல்ல - நெத்தியடிகள்

    ReplyDelete
  8. //ரத்த புற்றுநோய்க்காக
    தனியார் மருத்துவமனையில்
    அனுமதிக்கப் பட்டிருக்கிறார்..
    மருத்துவத்துறை அமைச்சராகப்போகும்
    அரசியல்வாதி.//

    இதுல எதுவும் உள்குத்து இல்லையே

    ReplyDelete
  9. நாட்டு நடப்பு.மாற்றவே முடியாது மதுமதி !

    ReplyDelete
  10. மது,

    ஊருக்கு உபதேசம் தான் நம் சமூக தலைவர்களின் தலையாயக் கடமை.

    அதை,

    விலாசிப் போகிறது கோபம் கொண்ட கவிஞனின் சொற்கள்.

    ReplyDelete
  11. ஒவ்வொரு குட்டிக்குட்டி கவிதையும் நச் ரகம் தலைவரே

    ReplyDelete
  12. சங்கப் பதிவின் கூட்டத்திற்குத்
    தாங்களும் மற்ற நண்பர்களும் உறுதி செய்து என் வலையில் மறு மொழி
    யிட வேண்டி யுள்ளேன் கவனிக்க!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. ஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லை கண்ணே ,என்பது போல தங்கள் கவிதை நல்ல கருத்தை தாங்கிஉள்ளது நண்பரே
    அருமை

    ReplyDelete
  14. பத்து திருக்குறளுக்கு மேல்
    மனப்பாடமாக சொல்லத்தெரிவதில்லை
    திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்
    சில தமிழாசிரியர்களுக்கு..


    உணமையிலும் உண்மை

    ReplyDelete
  15. ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்பது போன்ற நிகள்வுகளின் தொகுப்பினை அருமையான எடுத்துக்காட்டுக்கவிதைகளாக்கிய கவிஞருக்கு வாழ்த்துகள் அருமை சார்

    ReplyDelete
  16. அழகான கவிதைகள்.

    ReplyDelete
  17. மற்றவருக்குச் சொல்லும் எதையும் நாம் செய்யாமல் விடுகிறோமே...

    அழுத்தத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்...

    அருமை...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com