புது வரவு :
Home » , » டி.என்.பி.எஸ்.சி - இலவச மையங்கள் - பாகம்-4

டி.என்.பி.எஸ்.சி - இலவச மையங்கள் - பாகம்-4

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இலவச மையங்கள்

              டி.என்.பி.எஸ்.சி தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் பாகம் 3 ல் எப்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது என்று பார்த்தோம்.ஆனாலும் அதை இல்லத்தில் இணைய வசதி உள்ளவர்களால் மட்டுமே செயலாற்ற முடியும். இணையம் பற்றி தெரியாதோருக்கும் கிராமப் புற மாணவர்களுக்கும் அது முடியாத விசயமாகி விடுகிறது.எனவே இதை கருத்தில் கொண்ட அரசு தமிழகமெங்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க 500 இலவச மையங்களை தொடங்கியிருக்கிறது.சென்னை ஆயிரம்விளக்கில் இந்த சேவை மையத்தை டி.என்.பி.எஸ்.சி தலைவர் ஆர் நடராஜ் தொடங்கி வைத்தார். தேர்ந்தெடுத்திருக்கிற இந்தியன் வங்கி கிளைகளிலும் தபால் அலுவலகங்களிலும் அந்த இலவச மையங்கள் செயல்படும்..

        அந்த இலவச மையத்துக்கு விண்ணப்ப தாரர் சென்றால் அவர்களது போட்டோ வெப் கேமரா மூலம் எடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் செய்யப் படுகிறது.அத்தோடு அவரது கையெழுத்தும் ஸ்கேன் செய்யப்படுகிறது.ஆன் லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவு எண் வழங்கப்படும்.அந்த எண்ணை வைத்து இந்தியன் வங்கி கிளைகளிலோ  அல்லது நெட் பேங்கிங்,டெபிட் கார்டு போன்றவை மூலம் பணத்தை செலுத்தலாம். எனவே விண்ணப்பதாரர்கள் அருகாமையில் இருக்கும் இலவச மையங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சென்னையில் இலவச மையங்கள் செயல் படும் இடங்கள்:

இந்தியன் வங்கி கிளை:

அண்ணா நகர்
புரசைவாக்கம்
துறைமுகம்
ஆயிரம் விளக்கு
தியாகராய நகர்
மைலாப்பூர்
கீழ்ப்பாக்கம்
அண்ணா சாலை
அடையாறு
எத்திராஜ் சாலை

தபால் நிலையங்கள்:

அம்பத்தூர்
ஆவடி முகாம்
ஜி.பி.ஓ
பூங்கா நகர்
தாம்பரம்
அயனாவரம்
வேப்பேரி
வண்ணாரப் பேட்டை
கிரீம்ஸ் சாலை
அண்ணா சாலை
எழும்பூர்
மைலாப்பூர்
பெரம்பூர்
பூந்தமல்லி
பரங்கிமலை
தியாகராய நகர்
தி.நகர் வடக்கு மற்றும் தெற்கு
திருவொற்றியூர்
தண்டையார் பேட்டை
அண்ணா நகர் கிழக்கு
சேத்துப் பட்டு
பூக்கடை
ஐகோர்ட் வளாகம்
ஐ.சி.எஃப் காலணி
ஜவகர் நகர்
எம்.பி.டி.நிர்வாக அலுவலகம்
வியாசர்பாடி
கோபாலபுரம்
என்.எச் சாலை
தேனாம் பேட்டை
திருவல்லிக் கேணி
ராயப்பேட்டை
========================================================================
அடுத்தப் பதிவில் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து ஆராய்வோம்..
========================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.
=======================================================================
                                                                                                                                          அன்புடன்
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. தகவல் பகிர்வு பலருக்கும் பயன்படும் மதுமதி.

    ReplyDelete
  2. sir as i am completed diploma in electrical sir ..fr me which post will suitable fr applying in tnpsc group 4 sir.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

TNPSC - கணித பாடத்திட்டம்

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

சராசரி கணக்கு - அடிப்படை

Popular Posts

மீ.சி.ம- மீ.பொ.வ

Google+

Tips Tricks And Tutorials

எண்ணியல் - அடிப்படை

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com