மூத்த பதிவர்ன்னா யாரு - அம்மணியும் சின்ராசும் ஆராய்ச்சி - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , » மூத்த பதிவர்ன்னா யாரு - அம்மணியும் சின்ராசும் ஆராய்ச்சி

மூத்த பதிவர்ன்னா யாரு - அம்மணியும் சின்ராசும் ஆராய்ச்சி

Written By Madhu Mathi on Tuesday, August 21, 2012 | 8/21/2012 11:55:00 AM

         கொக்கரக்கோ
         //அம்மணியும் சின்ராசும்//


"அம்மணி.. அம்மணி"

               வேகமாக அழைத்துக்கொண்டே சின்ராசு வீட்டிற்குள் நுழைய,

"என்னங் மாமா"

             என்றபடி அவனை எதிர்கொண்டாள்.

"மெட்ராஸ் போறத்துக்கு ரெண்டு பேருக்கும் ரயில்ல டிக்கெட் புக் பண்ணிட்டு வந்துட்டேன்"

"என்னங் மாமா..மெட்ராஸ் போறத்துக்கு ரெண்டு டிக்கெட்டா..யாருக்கு டிக்கெட்டு"

"என்ன அம்மணி இப்பிடி கேட்டுப்போட்டே..நானும் நீயுந்தான் மெட்ராஸ் போறோம்"

"நானும் நீங்களுமா..என்ன மாமா சொல்றீங்க?..திடுகுப்புன்னு மெட்ராஸ் போலாம்ன்னு சொல்றீங்க..எதுக்கு என்னான்னு கொஞ்சம் வெளக்கி சொல்லுங்க மாமா"

"அம்மணி..இந்த பதிவர்கள் இருக்காங்களே"

"ஆமா..ரிஜிஸ்டர் ஆபிஸ் வாசல்ல உக்காந்து எழுதீட்டு இருப்பாங்களே.. அவுங்கதானே"

"அட இல்ல அம்மணி..இண்டர்நெட்டுல எழுதுவாங்களே..நாங்கூட ஒரு நாளு சொன்னனே"

"அட ஆமாங்க மாமா"

"ம்..அவுங்க எல்லாம் ஒண்ணா சேந்து மெட்ராஸுல பதிவர் திருவிழா நடத்தப் போறாங்களாம்"

"திருவிழாவா..அப்ப கெடாகிடா வெட்டி பொங்க கிங்க வச்சு கொண்டாடப் போறாங்களா"

"அட என்ன அம்மணி ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்குற"

"இல்ல மாமா திருவிழான்னு சொன்னா எல்லாம் கேட்குற கேள்விதானே இது"

"நல்ல வேளை ராட்டினம் தூரி வருமா,அலகு குத்தி அக்கினி சட்டி எடுத்து ராத்திரி திரை கட்டி எம்.ஜி.ஆர் படம் போடுவாங்களான்னு கேட்காம விட்டியே"

"இல்ல மாமா ..இந்த பதிவர்கள் எல்லாம் ஒண்ணா சந்திச்சு ஒருத்தருக்கொருத்த பேசி சிரிச்சுக்க போறாங்க ..அப்படித்தானே"

"அது மட்டுமில்ல அம்மணி, மூத்த பதிவருங்களுக்கு பாராட்டு விழா, கவியரங்கம் புத்தக வெளியீடுன்னு ஏகப்பட்ட அம்சங்க இருக்குதாம். வெளிநாட்டுல இருந்து கூட பத்து பேருக்கு பக்கமா வராங்கன்னா பாத்துக்கோயேன்"

"ஆமா மாமா ஒருத்தருக்கொருத்தர் இண்டர்நெட்டுல பாத்து பழகிகிட்டவங்க..நேர்ல பாக்குற ஆசை இருக்குறது நாயமானதுதான..அதுசரி பதிவர் சந்திப்புன்னு வெக்க வேண்டியது தானே..அதென்ன மாரியாத்தா கோயிலுக்கு சொல்ற மாதிரி திருவிழான்னு சொல்றாங்க.."

"அட அம்மணி இது ஒரு பதிவர் சந்திப்புதான்..அதை கொஞ்சம் மிகை படுத்தி சொல்லலாமுன்னு வார்த்தைகளை தேடியிருக்காங்க..எதுவும் கிடைக்கல..கடைசியா பதிவர் திருவிழான்னு சொல்லிபோட்டாங்க"

"அப்படியா மாமா..இதுக்கு முன்னாடி இப்படி பதிவருங்க நேருக்கு நேரா பாத்து பேசி பழகி இருக்காங்களா"

"என்ன அம்மணி இப்படி கேட்டுப்போட்ட..அப்பப்ப வாய்ப்பு கெடைக்கும்போதெல்லாம் பக்கத்துல இருக்குற பதிவருங்க பேசி பழகிட்டுதான் இருக்காங்க..அட ரெண்டு பதிவருங்க பாத்துக்கிடாலே பதிவர் சந்திப்புன்னு தலைப்பை போட்டு பத்து பதிவு எழுதறத பாத்ததில்லையா"

"அட ஆமா மாமா"

"அப்புறம் நம்மூருல கூட போன வருஷம் பதிவர் சந்திப்பு நடத்தினாங்களே"

"ஆமாஆமா.ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்து சார்பா நடத்தினாங்களே"

"ம்..அதே மாதிரிதான் இப்ப மெட்ராஸ்ல நடத்துறாங்க..என்ன ஒரு வித்தியாசம்..ஈரோட்டுல நடந்த பதிவர் சந்திப்பை 'ஈரோடு வலைப்பதிவர் குழுமம் நடத்துனாங்க..இப்ப மெட்ராஸ்ல நடக்க போவுற பதிவர் சந்திப்பை எல்லா தமிழ் வலைப்பதிவர்களும் ஒண்ணா சேந்து நடத்துறாங்க"

"அப்படியா மாமா..நாங்கூட சென்னை வலைப்பதிவர் குழுமம்தான் இதை நடத்துறாங்கன்னு நெனச்சேன்"

"அப்படி நெனைக்கிறது தப்பு..ஊரைப் பாத்தே,இனத்தைப் பாத்தோ,இருக்கிற நாட்டைப் பாத்தோ யாரும் பழகல..அதனால தமிழ்ப்பதிவு எழுதுற எல்லா பதிவர்களும் ஒண்ணு சேந்து நடத்தலாமுன்னுதான் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்ன்னு பேரு வச்சு இதை நடத்துறாங்க..அவுங்க அடிச்ச அழைப்பிதழ பாத்தாலே உனக்கு புரியும்"

"ஓ..அப்படியா..சரி மாமா  போன வருஷம் கூட யூத் பதிவர் சந்திப்புன்னு நடத்துனாங்களே"

"ஆமா..அதுதான் இது வரைக்கும் மெட்ராஸ்ல நடந்த பெரிய பதிவர் சந்திப்பு..இப்ப இது நடக்கப்போவுது"

"ஆமா மாமா..எத்தனை பதிவர்கள் வரேன்னு சொல்லியிருக்காங்களாம். வெளியூர் பதிவர்களுக்கு தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணுறாங்களா ?வெளியூர்ல இருக்குற பெண் பதிவருங்களுக்கு எல்லா வசதியும் பண்ணித்தர்றாங்களா? எத்தனை பெண் பதிவர்கள் வர்றாங்க?

"ஆமா அம்மணி வெளியூர் பதிவருங்க தங்குறத்துக்கு ரூம் வேணுமின்னா முன்னாடியே கூப்பிட்டு சொல்ல சொல்லியிருக்காங்க நிறைய பேர் கூப்பிட்டு சொல்லியிருக்காங்க ..பதிவருங்க மட்டும் 100 பேருக்கு மேல வருவாங்கன்னு எதிர்பார்க்குறாங்க..பெண் பதிவருங்க இதுவரைக்கும் 15 பேரு வரேன்னு உறுதியா சொல்லியிருக்காங்க..அவுங்களுக்கும் தங்கிக்க வசதி பண்ணித் தராங்க."

"சரிங் மாமா ..எனக்கொரு சந்தேகம்..பிரபல பதிவர்கள் சொல்றாங்களே.. அவுங்கெல்லாம் வர்றாங்களா.அவுங்கள் கூப்பிட்டாங்களா?"

"விழா குழு யாரையும் தனிப்பட்ட முறையில கூப்பிடலை அம்மணி..
பதிவுகளை பாத்துட்டுதான் எல்லாப் பதிவர்களும் வரேன்னு சொல்லியிருக்காங்க..அதனால யாரும் என்னைக் கூப்பிடலை உன்னைக் கூப்பிடலைன்னு இதுவரைக்கும் வருத்தப்படலை"

"ஏம்மாமா இதென்ன  காது குத்தா கண்ணாலமா தனித்தனியா கூப்பிடறத்துக்கு..இது எல்லாத்துக்கும் தெரியும்..என்னைக் கூப்பிடலைன்னு யாராவது குத்தம் சொன்னாங்கன்னா 'உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் போங்கள்"  அப்படின்னு மத்த பதிவருங்க சொல்லிட்டு போயிடுவாங்க..இல்லீங்க மாமா"

"ஏம்மாமா மூத்த பதிவருக்கு பாராட்டு விழான்னு சொல்றாங்களே..மூத்த பதிவர்ன்னா www.blogger.com ஆரம்பிச்சதிலிருந்து எழுதுறாங்களே அவுங்களா"

"இல்லை புள்ள அப்படி பாத்தா பிளாக்குன்னு ஒண்ணு இருக்குன்னு யாருக்கு முதல்ல தெரிஞ்சுதோ அவுங்க மொதல்ல ஆரம்பிச்சாங்க..அப்படி ஒண்ணு இருக்கிறது தெரியாதவன் லேட்டா ஆரம்பிச்சான்..அவ்வளவுதான்..அவுங்க முன்னாடி எழுத ஆரம்பிச்ச பதிவரே தவிர மூத்த பதிவர் இல்ல .மூத்த பதிவர்ன்னா அறுபது வயசத் தாண்டி பதிவுலகுல எழுதிட்டிருக்காங்களே அவுங்கதான் மூத்த பதிவராம்..அவுங்களுக்குத்தான் பாராட்டு விழாவாம்."

"ஓ..அதுவும் சரிதான்"

"அதான் அம்மணி நாம ரெண்டு பேரும் கட்டாயம் கலந்துக்குறோம்..
நாளைக்கு யாரு யாரு விழாவுக்கு வர்றாங்கன்னு இறுதி பட்டியல் வெளியிடுறாங்களாம்..அதனால இப்பவே அவுங்க கொடுத்திருக்குற மின்னஞ்சல் முகவரிக்கு நாம வர்றத உறுதி பண்ணி கடிதம் அனுப்பிடுறேன்.. ஏன்னா மதிய சாப்பாடு மொதக்கொண்டு மத்த ஏற்பாட்டுக்கு வசதியா இருக்கும். நீ தங்கறதுக்கு தென்றல் சசிகலாவுக்கு (9941061575) போன் பண்ணி சொன்னா ஏற்பாடு பண்ணுவாங்க..நான் தங்கறதுக்கு ஆரூர் மூனா செந்திலுக்கு (8883072993)போன் பண்ணினா ரூம் ஏற்பாடு பண்ணுவாரு"

"சரி மாமா நான் இப்பவே அதை செஞ்சு போடுறேன்"

"அம்மணி உன்னோட பிளாக் அட்ரஸயும் சரியாச் சொல்லு முக்கியமா உன்னோட ஈமெயில் அட்ரச தெளிவா எழுதி அனுப்பு..ஏன்னா பதில் ஈமெயில் அனுப்பற ஜெயக்குமாரு, அவுங்கள் வுட்டுப்போட்டு வேற யாருக்கோ அனுப்பிபோடுறாராம்"

"அப்படியா மாமா..தெளிவாவே எழுதி போடுறேன்..சரி மாமா நம்மூர்ல இருந்து யாராரு கலந்துக்குறாங்க.."

" ஈரோட்டுல இருந்து அட்ராசக்க செந்துல்கொமாரு அப்பறம் நம்ம வக்கீலு நண்டு அட்டு நொரண்டு அப்பறம் வீடு சுரேச்சு,கோயமுத்தூருல இருந்து சரளா,கோவி,கோவை நேரம் அப்பறம் இன்னும் பேரை மறந்துட்டேன்..பத்து பதினைஞ்சு பேரு போறாங்களாம்"

"சரி மாமா பேசிக்கிட்டே இருக்காம..பட்டுன்னு கடை வீதிக்குப் போயி நல்ல பொடைவயா பாத்து வாங்கிட்டு வந்துடுங்க..மெட்ராஸூக்கு அம்மணி வர்றான்னு தெரிஞ்சா மின்னல் வரிகள் கணேஷ் ரொம்ம குஷியாயிடுவாரு.. பாக்கறதுக்கு நானும் டீசண்டா இருக்கோனுமில்ல ..என்ன மாமா நாஞ்சொல்றது"

"சரிதான் புள்ள"

              என்று சொன்ன சின்ராசு சிரித்துக் கொண்டே நகர,

"மாமோவ்..பதிவர் சந்திப்புல கலந்துக்க யாருக்கு போன் பண்ணி உறுதி பண்றதுன்னு மத்தவங்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லிப்போடுங்க"

"இதோ சொல்றேன்..

                   மதுமதி-9894124021
                   பால கணேஷ் -7305836166
                   சிவக்குமார்-9841611301
                   ஜெயக்குமார்- 9094969686
      
      நானும் அம்மணியும் கலந்துக்குறோம்..நீங்கள்ம் கலந்துக்கிறதா இருந்தா மேல இருக்குற நெம்பருக்கு போன் பண்ணி உறுதி பண்ணிக்கங்க.. சொல்லிப்போட்டேன்..ஏன்னா வர்றேன்னு உறுதியா சொன்னவங்களுக்குத்தான் எல்லா ஏற்பாடும்ம் பண்றாங்க"

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

31 comments:

 1. ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சார்.... தெளிவு படுத்த வேண்டிய விசயங்களை கிராமத்து நடையில் தெளிவாகிய விதம் சூப்பர்... ஆமா கணேஷ் சார் பேரு எதுக்கோ அடி பட்டதே... ஆமா அத பத்தி எனகென்ன கவலை ஹி ஹி ஹி

  ReplyDelete
 2. //ஈமெயில் அனுப்பற ஜெயக்குமாரு, அவுங்கள் வுட்டுப்போட்டு வேற யாருக்கோ அனுப்பிபோடுறாராம்"//

  Aamaa ! aamaa !

  ReplyDelete
 3. ///முக்கியமா உன்னோட ஈமெயில் அட்ரச தெளிவா எழுதி அனுப்பு..//

  please mark it as "bold" "italic" with "underline".

  கலக்கல் கான்வெர்சேஷன்.... :)

  ReplyDelete

 4. மூத்த பதிவர் யார் என்பது பற்றிய அம்மணியின் ஐயத்திற்கு சின்ராசு கொடுத்துள்ள விளக்கம் மற்றவர்கள் மனதில் இருக்கும் கேள்விக்கும் பதில் போல் ஆகிவிட்டது. அவர்கள் இருவரின் நகைச்சுவை கலந்த பேச்சினூடே பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்களையும் தந்தமைக்கு நன்றி! பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அழகிய உரையாடல் மூலம் பல தகவல்கள்... நன்றி (4)

  ReplyDelete
 6. அட இம்புட்டு சங்கதியும் இந்த ஒரு பதிவுலையேவா? நடத்துங்க சின்ராசு நடத்துங்க அம்மணி ..

  இதுக்கு மேல விளக்கமா சொல்ல என்னத்த சொல்றது .. அருமை சார்

  ReplyDelete
 7. முழுமையான தகவல் அறிவிப்புகள்.. பாராட்டுக்கள்..

  விழா சிறக்க வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. சின்ராசுவும், அம்மணியும் எப்ப வந்தாலும் எல்லா விஷயத்தையும் தெளிவா அலசிப்புடறாங்கோ. இப்பவும் பலபேரோட டவுட்ட கிளியர் பண்ற மாதிரி அவங்க பேசினது சூப்பருங்கோ...

  ReplyDelete
 9. உங்கள் பணி சிறப்பிற்குரியது ஏதோ நடத்துகிறோம் என்று இல்லாமல் எல்லோரும் மெனகேடுகிறீர்கள் உங்களை பார்கையில் பெருமைதான் எங்களுக்கு நாங்களும் உங்களோடு இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி .........நகையுடன் தகவல் மிளிர்கிறது

  ReplyDelete
 10. அம்மணிய வச்சி சூப்பரா அசத்திட்டிங்க.

  ReplyDelete
 11. பதிவர் சந்திப்பு நினைவூட்டல் தகவல் வாசிப்பு அருமை.
  கட்டாயம் கட்டுசெட்டா களையா வந்துடுங்க அம்மணி...
  அகில உலகத்துக்கும் தெரிவோம் இல்ல ... .ம்ம்ம்... இதுதான் விதி ..
  [ ஆண் பதிவர்கள் விதி ன்னு சொன்னேன் ]

  ReplyDelete
 12. திருவிழாவுல காணாம போகாமா,அல்லாரும் சூதானமா வந்து சேறுங்க!

  ReplyDelete
 13. கலக்கல் எழுத்து நடை மதுமதி சார்!

  ReplyDelete
 14. கலக்கிட்டீங்க!.பால கணேஷ் பற்றி இன்று புது செய்தி நிறைய வருகிறதே!

  ReplyDelete
 15. சும்மா! கலக்கிட்டேள் போங்கோ!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
 16. நானும் வந்துருவனுங்.. மறக்கமா நம்மையும் சேத்துக்குங்..

  ReplyDelete
 17. அம்மிணியும் சின்ன ராசும்
  ம்ம்ம் ...நல்ல இருக்கு சார்

  ReplyDelete
 18. நானும் வயதை வைத்துப் பார்க்கையில்
  மூத்த பதிவர்தான்
  அவசியம் கலந்து கொள்கிறேன்
  ஞாயிறு காலை வருவதாக மின்னல் அவர்களிடம்
  விவரம் தெரிவித்துவிட்டேன்
  த்கவல்களைக் கூட ஒரு நல்ல ரசிக்கத் தக்க பதிவாகத்
  தந்த தங்கள் திறன் கண்டு மகிழ்ந்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. பட்டுன்னு கடை வீதிக்குப் போயி நல்ல பொடைவயா பாத்து வாங்கிட்டு வந்துடுங்க..மெட்ராஸூக்கு அம்மணி வர்றான்னு தெரிஞ்சா மின்னல் வரிகள் கணேஷ் ரொம்ம குஷியாயிடுவாரு.
  ....
  இந்த வரிகளை கடுமையாக நான கண்டிக்குறேன். புதுப்புடவையை பார்த்து மயங்குற ஆள் இல்லை எங்க கணேஷ் அண்ணா. அவரு மெட்ராஸ்காரரு. ஜீன்ஸ், மிடி போட்ட பொண்ணுங்களை பார்த்துதான் மயங்குவாரு.

  ReplyDelete
 20. தயவு செய்து டேம்ப்லட்டை மாத்துங்க ....படிக்க முடியல வலிக்குது ..........அழுதிருவேன் ..............

  ReplyDelete
 21. அனைத்துத் தகவல்களையும் வெகு அழகாகவே சொல்லி விட்டீர்கள். படிக்க நல்ல சுவாரஸ்யமாக இருந்தது. பாராட்டுக்கள். விழா சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. ம்ம் சூப்பர் சார்..வாழ்த்துகள்..

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் சகோ மிக மிக அருமையாக ஒரு விளம்பரம்
  செய்துள்ளீர்கள் .ஏதோ ஒரு குட்டி நாடகம் அப்படியே மனத்தைக்
  கவ்விக் கொண்டு போய் பதிவர் சந்திப்பில் நிறுத்தி விட்டதுபோல்
  உணர்ந்தேன்!!.....அனைவரது எதிர்பார்ப்பும் அவ்வண்ணமே நிறைவேற
  இன்றே என் வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 24. Neradi oliparappil paarppathatku aarvamaaka ullen
  Thamil pathivar thiruvila
  Vetri adaya vaalthukkal

  ReplyDelete
 25. தகவல் தெரிவித்த விதம் ரசிக்கத்தக்கதாக இருந்தது.
  விழா சிறக்க என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com