சங்கி-வெங்கி - மின்னல் வரிகள் பாலகணேஷ் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , » சங்கி-வெங்கி - மின்னல் வரிகள் பாலகணேஷ்

சங்கி-வெங்கி - மின்னல் வரிகள் பாலகணேஷ்

                                                          விருந்தினர் பக்கம்

       விருந்தினர் பக்கம் பகுதிக்கு தனது நகைச்சுவை பதிவை எழுதியிருப்பவர் ''மின்னல் ரிகள்" எனும் தளத்தில் எழுதி வரும் அன்பு அண்ணன்  பாலகணேஷ் அவர்கள். நகைச்சுவை பதிவெழுதுவதில் எனக்குப் பிடித்தமானவர்.எந்தப் பதிவெழுதினாலும் அதில் நகைச்சுவை இழையோடும் என்பதை இவரது பதிவுகளை வாசித்தவர்களுக்குத் தெரியும்..
 
சங்கி-வெங்கி

    வீட்டினுள் வரும்போதே உற்சாகப் புயலாய் வந்தாள் சங்கீதா.''ஏங்க... எங்க கிளப்ல இந்த வருஷம் ஒரு போட்டி வெச்சிருக்காங்க. ஒவ்வொரு மெம்பர்ஸ் வீட்டுக்கும் ஒரு எங்க செகரட்டரி அவங்க ஹஸ்பெண்டோட வந்து ஒவ்வொருத்தர் வீட்லயும் வெச்சிருக்கற கொலுவைப் பாத்துட்டு மார்க் போடுவாங்களாம். யார் அதிகமா மார்க் வாங்கறாங்களோ, அவங்களுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் நிறைய உண்டாம்...''

''உங்க செகரட்டரி அலமேலு ஓவர் உயர்ர்ர்ரமாச்சே! பேசாம பனைமேலுன்னே பேர் வெச்சிருக்கலாம். அவங்க கொலுவைக் குனிஞ்சு ஏரியல் வியூவுல கொலுவைப் பார்த்து என்னத்த மார்க் போடப் போறாங்க...?'' என்றான் வெங்கட்.

''சும்மா கிண்டலடிக்காம ஏதாவது நியூ ஐடியா சொல்லுங்க... புது பொம்மைகளா செஞ்சு கொலுவெச்சு அசத்திடறேன் வெங்க்கி!'' என்றாள். ஹேண்ட் மேடாக பொம்மைகள் செய்து, கலர் கொடுத்து கொலு வைப்பது அவள் ஸ்பெஷாலிட்டி.

''தோ பாரு சங்கி... நீ மங்கின்னு கூப்ட்டாலும். இந்த வெங்கிக்கு கோபம் வராது. ஆனா இப்படி திடீர்னு ஐடியா குடுன்னா தான் கோபம் வரும்? யோசிக்கறேன் இரு...'' என்று அவன் தலையைச் சொறியும் போது உள்ளே நுழைந்தாள் வேலைக்காரி வெங்கம்மா. ''ஏண்டி... நேத்து வேலைக்கு வரலை?'' என்று கோபமாய் அவள் மீது பாய்ந்தாள் சங்கி.

''அத ஏம்மா கேக்கறீங்க? நேத்து என் தம்பியை மரத்து மேல ஏறி மாங்கா பறிச்சுத்தாடான்னு சொன்னேன். பாவிப்பய நாப்பது மாங்கா பறிச்சுப் போட்டுட்டிருக்கறப்பவே கால் ஸ்லிப்பாகி மரத்துலருந்து விழுந்துட்டான்...''

''ஐயய்யோ.... அப்புறம் என்ன பண்ணினே?''

''பறிச்ச மாங்காய் வேஸ்ட்டாக வேண்டாமேன்னு ஊறுகாய் போட்டுட்டேம்மா...''

''அடிப்பாவி! .உன் தம்பிய என்ன பண்ணின...?''

''அய...! தம்பியையெல்லாம் ஊறுகாய் போட முடியாதும்மா... எவன் துண்றது?''

'''ஐய்யோ... அதைக் கேக்கலை. உன் தம்பிக்கு என்னாச்சு? டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனியான்னு கேட்டேன்....''

''ஆச்சும்மா. தலையில தையல் போட்டு நாலு நாள் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்காரு. அதான் நேத்து வரலை...'' என்றபடி வீட்டினுள் போகிறாள். சங்கி, வெங்கியின் பக்கம் திரும்பி, ''என்னங்க... ‌வர்‌ற வெள்ளிக்கிழமை நம்ம வீட்டுக்கு விஸிட் வர்றதா சொல்லியிருக்காங்க. எதும் ஐடியா வந்துச்சா?'' என்று விரட்டினாள்.

''அடப்போடி... எனக்கு கொட்டாவிதான் வந்துச்சு. புதுசா ஐடியா பண்ண என்ன இருக்கு. பேசாம நீ பாக்கற செல்வம், கோபின்னு சீரியல்ல வர்ற கேரக்டர்களை பொம்மையா பண்ணி கொலு வைச்சுத் தொலை'' என்றான் வெங்கட் எரிச்சலாக.

''! சூப்பர் ஐடியாங்க! நான் இப்‌பவே போய் பொம்மைகள் தயார் பண்ண ஆரம்பிச்சுடறேன்'' என்று அவள் துள்ளிக் குதிக்க... 'ங‌‌ே'யென்று விழித்தபடி அலறினான். ''ஏய்... நான் சும்மா கேலிக்கு சொன்னேன்டி. நீ பாட்டுக்கு செஞ்சு தொலைச்சுடாத. எல்லாரும் சிரிப்பாங்க...''. அவன் பேச்சைக் கேட்க அவள் அங்கே இருந்தால்தானே... உற்சாகமாய்த் துள்ளி உள்ளே போய்விட்டிருந்தாள்.

    வெள்ளிக்கிழமை. மாலை ஐந்து மணிக்கு செகரட்டரி அலமேலுவும் அவள் கணவன் வரதராஜனும் சங்கீதாவின் வீட்டினுள் நுழைகிறார்கள். அலமேலு செம ஒல்லியாக, நெடுநெடுவென்று உயரமாக இருக்க, வரதராஜன் குட்டையாக, குண்டாக இருக்கிறார். ''பரங்கிக் காயும் முருங்கைக் காயும் சேர்ந்து வர்ற மாதிரி இருக்குடி உங்க செகரட்ரியையும் அவங்க ஹஸ்பெண்டையும் பார்ததா'' என்று ஒரு முறை வெங்கி கமெண்ட் அடித்து சங்கியிடம் (செல்ல) அடி வாங்கியிருக்கிறான்.

    வரதராஜனைப் பார்த்து, ''குட்நைட் அங்கிள்'' என்றான் சங்கி-வெங்கியின் மகன் பிங்கி. ''ஃபூல்! நைட்னு சொல்லப்படாது. டேன்னுதான் சொல்லணும் புரிஞ்சுதா?'' என்று சீறினார் வரது.

''டே அங்கிள், குட்நைட்!'' என்றான் பிங்கி ஸ்பஷ்டமாக. ''அடேய்... அந்த டேய் இல்லடா நான் சொன்னது. டி ஒய் - டே! புரிஞ்சுதா. இன்னும் இருட்டலங்கறதால டே டைம்னு சொன்னேன். குட் ஈவ்னிங்னு சொல்லணும். புரிஞ்சுதா...'' என்று அசடு வழிந்தார் வரது. அருகிலிருக்கும் ஒரு துண்டுப் பேப்பரை எடுத்து உருட்டி மடக்கி சுவாரஸ்யமாய் காது குடையத் தொடங்குகிறார்.

''உள்ள வாங்க மேடம்... கொலுவைப் பாக்கலாம்'' என்று சங்கி, அலமேலுவை அழைத்துப் போக, வெங்கியுடன் பேசியபடி வரதுவும் உள்ளே வருகிறார். கொலுவைப் பார்த்ததும் அலமேலுவின் கண்கள் விரிகின்றன. ''வாவ்! வொண்டர்ஃபுல் ஐடியா! ரொம்ட டிஃபரண்ட்டா இருக்கே...'' என்கிறாள். ''எல்லாம் என் ஹஸ்பெண்ட் கொடுத்த ஐடியாதான் மேடம்'' என்று பெருமையாக சங்கி சொல்கிறாள். வெங்கியின் காதில் ரகசியமாக, ''மேடத்துக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உங்களுக்கு இன்னிக்கு ஸ்பெஷல் ஸ்வீட் ரவா கேஸரி...'' என்கிறாள்.

     காதிலிருந்து பேப்பரை எடுத்தபடி, ''இந்த மாதிரி நாவல்டியா வேற யாரும் கொலு வெச்சதில்லை. பேசாம இந்த பொம்மைங்களை நீங்களே செஞ்சு வித்தீங்கன்னா...'' என்று வரது சொல்லிக் கொண்டிருக்க, அவரின் கோட்டைப் பிடித்து இழுக்கிறான் பிங்கி. அவர் குனிந்து, ''சும்மாயிருடா கொஞ்சம்... மேடம், எங்க விட்டேன்...?''

''பேப்பரை சுருட்டி வலது காதுக்குள்ளதான் விட்டீங்க ஸார்...!'' என்று சங்கி சொல்ல தலையிலடித்துக் கொள்கிறார் வரது. ''அதைக் கேக்கலை. பேச்சை எங்க விட்டேன்னு... ஆங், பொம்மைகள் இதுமாதிரி நீங்களே தயாரிச்சு வித்தீங்கன்னா சூப்பரா சேல்ஸ் ஆகும்...'' என்கிறார். ''மேடம்...! என்னோட கொலுவுக்கு எத்தனை மார்க்?'' என்று சங்கி குழைந்தபடி கேட்க, ''உன்னோட கொலு எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா மார்க் ஜீரோதான்'' என்கிறாள் அலமேலு.

''ஐயய்யோ... பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு ஜீரோ மார்க்கா? ஏன் மேடம்...'' என்று சங்கி புரியாமல் கேட்கவும், ''தோ பாரு சங்கி! கொலு வைக்கறதுங்கறது விளையாட்டு விஷயம் இல்லை. ஒன்பது இரவுகளும் தேவியைக் கும்பிட்டுட்டு சிரத்தையோட செய்யணும். அப்படி ஒரு புனிதமான விஷயத்தை இப்படி கேலிக்கூத்தா ஆக்கிட்டியே... இதைச் சும்மா பாத்து ரசிக்கலாமே தவிர, மார்க்லாம் போட முடியாது. பூஜ்யம்தான் உனக்கு'' என்று சொல்லிவிட்டு, வரதுவுடன் கிளம்புகிறாள்.

       சங்கியின் முகத்தில்எள்ளும் கொள்ளும் வெடிக்க, ''சங்கி... இந்த முறை ப்ரைஸ் கிடைக்காட்டி என்ன... அடுத்த வாட்டி கலக்கிடலாம் விடு. அந்த ரவா கேஸரி...'' என்கிறான் வெங்கி. சங்கி முகத்தில் வரவழைத்துக் கொண்ட (கோபப்) புன்னகையுடன், ''ரவா கேஸரியா... இன்னிக்கு உங்களுக்கு பாவக்காய் பர்பி பண்ணித் தர்றேன்'' என்றபடி அவன் தலையில் ஒரு 'தட்டு' தட்ட, 'டொம்'மென்று மயங்கி விழுகிறான் வெங்கி.

                                                                (முற்றும்)

         பாணேஷ்வர்து மற்திவுளை வாசிக்ங்கே செல்வும்..

வாசித்துவிட்டீர்ளா?

சொம்பை தலையில் மாட்டிக்கொண்ட கதை
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

29 comments:

 1. என்னது, பாவக்காய் பர்பியா? ஆஹா, கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா...!

  ReplyDelete
 2. நண்பர் பதிவை இங்கு படிக்க மிக மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. பகிர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே..

   Delete
 3. கணேஷ் சார் கலக்கிட்டீங்க!இன்னொரு சேட்டைக்காரன் ஆயிட்டீங்க!

  ReplyDelete
  Replies
  1. அடாடா... இமயமலையுடன் பரங்கி மலைய ஒப்பிடலாமா முரளிதரன்? உங்க அன்புக்கு தலைவணங்கி என் நன்றி.

   Delete
 4. இயல்பாக நகைச் சுவை இழையோடும்
  படைப்புகளைத் தரும் பாலகணேஷ் அவர்களின்
  பரம விசிறி நான்
  அருமையான படைப்பின் மூலம் அவரை
  தங்கள் பதிவில் அறிமுகம் செய்தமைக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. என் படைப்புகளுக்குத் தாங்கள் விசிறி என்று சொல்வதை எனக்குக கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன் நான். என் இதயம் நிறைந்த நன்றி நண்பரே.

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ரமணி ஐயா அவர்களே..

   Delete
 5. பூக்கடைக்கே விலாசமா?! என் அண்ணனுக்கே அறிமுகமா?!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா..இது அறிமுகப்பதிவு இல்லைங்க.. விருந்தினர் பதிவு..ப்ளீஸ் முதல் பாரா மட்டுமாவது படிச்சுப்பாருங்களேன்..ஹிஹிஹி

   Delete
 6. அருமையான நகைச்சுவைபகிர்வு.

  ReplyDelete
 7. பாவக்காய் பர்ஃபி... அட என்ன டேஸ்ட்... :)

  சுவையான பகிர்வு. நண்பர் கணேஷ் மற்றும் உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி தலைவரே..

   Delete
 8. கணேஷ் அண்ணே, உங்களுக்குனு தனி ட்ரேட் மார்க் ஸ்டைலு வந்துடுச்சி... முழுநீள நகைச்சுவைச் சிறுகதை கலக்குறீங்க....:-)))

  ReplyDelete
 9. அவரின் ரசிகர்களில் அடியேனும் ஒருவன்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா தலைவரே..நானும்தான்..

   Delete
 10. //பரங்கிக் காயும் முருங்கைக் காயும் சேர்ந்து வர்ற மாதிரி// அல்டிமேட் வாத்தியாரே ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க... உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த மதுமதிக்கு நன்றி

  ReplyDelete
 11. அண்ணனுக்கு தங்கையாக ...
  அவர் பதிவுகளுக்கு ரசிகையாகவும்..வாழ்த்துக்கள் இரண்டு சகோதரர்களுக்கும்.

  ReplyDelete
 12. அலமேலு பனைமேலுவாகி கொலு உபதேசம் செய்து
  பாவக்காய் பர்பி கொடுத்துச் சிரிக்கவைத்திருக்கிறாரே !!

  ReplyDelete
 13. வணக்கம் தோழர் மதுமதி
  நலமா?
  உண்மை உண்மை
  நண்பர் கணேஷின் எழுத்துக்களில்
  நகைச்சுவை இழையோடி நம்மை புன்முறுவல்
  பூக்கச் செய்யும் என்பது ....
  இதோ மின்னல் போன்ற ஓளிமிக்க வரிகளால்
  ஒரு நகைச்சுவையை கொடுத்துவிட்டார்
  பாருங்கள்..
  மிகவும் ரசித்தேன் நண்பர் கணேஷ்...

  ReplyDelete

 14. அருமையான நகைச்சுவைபகிர்வு.
  ஹி ஹி ஹி ..
  இது விருந்தினர் பின்னூட்டம்!

  ReplyDelete
 15. பாலகனேஷ் அவர்களின் கதை தபோது நடக்கும் நவராத்திரியை நினைவில் கொள்வதுடன் ,,மதுமதி அவர்களின் நவரச தேடலில் ஒன்றாகிப்போனது சிறப்பானதாகும்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. விருந்தினருக்கு விருந்து கொடுப்பார்கள். இங்கு விருந்தினரே விருந்து படைக்கிறாரே. அதுவும் சுவையான நகைச்சுவை விருந்து! அதுவும் கணேஷ் கைபட்டால் பாக்ற்காய் கூட பர்ஃபியாய் தான் இனிக்கும்.

  படைத்த அவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்!!!

  ReplyDelete


 17. http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 18. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
  அங்கே தான் தெரிந்து கொண்டேன் நீங்கள் விருந்தினர் பக்கம் என்று சிறப்பாகச் செய்கிறீர்கள் என்று.

  திரு கணேஷின் படைப்பை இங்கு படித்து ரசித்து சிரித்ததில் ரொம்ப மகிழ்ச்சி!

  உங்கள் புதுவிதமான முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 19. மனசு கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சுன்னா... இனிமே மனசை டைவர்ட் பண்ண என்ன செய்யலாம்னு யோசிக்கவேண்டாம்.. நேரா மின்னல் வரிகள் பாலகணேஷ் வலைப்பூவில் போய் ஒரு அரைமணி நேரம் பதிவுகள் படிச்சாப்போறும்... கண்டிப்பா மனசு சாந்தமாகி பழைய நிலைக்கு வந்துரும்....

  எல்லோரையும் சிரிக்கவைப்பது என்பது மிகப்பெரிய கலை... அற்புதமான விஷயம்.... நாகேஷுடைய பாடி லேங்க்வேஜ் அவர் சேஷ்டைகளை பார்த்தாலே சிரிப்பு வந்துரும்....

  எனக்கு பாலகணேஷுடைய பதிவுகள் படிக்கும்போதே சிரிப்பு வந்துவிடுகிறது....

  என்ன ஒரு ரசனையான மனிதர்ப்பா இந்த கணேஷ்....

  தன்னுடைய அனுபவத்தையே கூட சோகக்காட்சியா தராம தான் பட்ட அவஸ்தைகளை எல்லாம் கூட படிக்கிறவா ரசிச்சு சிரிச்சு படிக்கிறமாதிரி அமைப்பதில் அசத்தல் திறமை கணேஷாவுக்கு....

  எப்டிப்பா சங்கி வெங்கி மங்கி பிங்கி இப்படி எல்லாம் தலைப்பு வெக்க முடிஞ்சுது....

  சங்கீதாவை சங்கி, வெங்கட்டை வெங்கி மங்கி, அவங்க பையன் பிங்கி, பனைமேலு, வரது சொல்ற டேஏஏஏஏஏ க்கு பிங்கி எடுத்துக்கிட்ட டேஏஏஏஏஏஏ செம்ம ரசிப்பு....

  சங்கீதாவின் வித்யாசமான க்ரியேட்டிவிட்டிக்கு ஒரு அப்ளாஸ்.....

  வீட்டு வேலைக்காரி தம்பி மாங்கா பறிக்க ஏறி ஸ்லிப்பாகி விழுந்ததால் மாங்காவை ஊறுகா போட்ட மகராசி பின்ன தம்பியவா ஊறுகா போட முடியும் ஹாஹா..... த்லைல நாலு தையல் அதான் வரலையாம்...

  முருங்கைக்காயும் பரங்கிக்காயும் என்ன காம்பினேஷன் கணேஷா இது... அதரகளம் பண்ணிட்டு இருக்கீங்கப்பா...

  என்ன தான் சிரிக்க சிரிக்க எழுதிட்டே வந்தாலும்... இறுதியில் கொலு வைப்பதன் முக்கியத்துவம் அதன் மகத்துவம் பற்றி சட்டுனு மனசுல பதியற மாதிரி சொன்ன விதம் ஹாட்ஸ் ஆஃப் கணேஷா....

  ஆமாம்... தேவியரைப்போற்றி வைக்கப்படும் ஸ்வாமி கொலு, கூட சுதந்திர போராட்ட வீரர்களின் கொலு, பள்ளிக்கூடம் இப்படி எல்லாம் வைக்கலாம்...

  ஆனால் என்ன கொடும சரவணா இது சீரியல் ஆக்டர்ஸ் கொலு வைப்பாளா யாராச்சும்.. சரியா நறுக்குனு சங்கி தலைல குட்டினாப்பல கருத்து சொல்லி இருப்பது சிறப்பு கணேஷா...

  சிரிக்க வைப்பது மட்டும் என் நோக்கமன்று.. சிரித்து ரசித்து வாசித்தாலும் சிந்திக்கவும் செய்யுங்க மக்களே என்று சிந்திக்கவும் வைத்த மிக அருமையான பகிர்வை தந்தமைக்கு பாலகணேஷுக்கு அன்பு வாழ்த்துகளும்.. அதை இங்கு நாம் எல்லோரும் வாசிக்க பகிர்ந்தமைக்கு மதுமதிக்கு அன்பு நன்றிகளும்பா...

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com