புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு பாடத்திட்டம் - குரூப் 2 குரூப் 4(VAO)

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு பாடத்திட்டம் - குரூப் 2 குரூப் 4(VAO)

                           பொது அறிவு பாடத்திட்டம்  

           
         வணக்கம் தோழமைகளே..டி.என்.பி.எஸ்.சி தேர்வின் 150 மதிப்பெண்களுக்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை பார்த்தோம் அல்லவா..இன்றைய பதிவில் மீதமுள்ள 150 மதிப்பெண்களுக்கான பொது அறிவுத்தாளுக்கு வினாக்கள் எந்தெந்த பகுதியிலிருந்து கேட்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.இது குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் ஆகும்.குரூப் 4 தேர்விற்கு பத்தாம் வகுப்பு தரத்திலும் குரூப் 2 தேர்விற்கு பட்டப்படிப்பு தரத்திலும் வினாக்கள் கேட்கப்படும்.இதுவரையில் நடைபெற்ற தேர்வுகளின் அசல் வினாத்தாளை வைத்தே இவை கணக்கிடப் பட்டுள்ளன.

       பொது அறிவு வினாக்களுக்கான பாடத்திட்டம்           வினா வகைகள்1)இந்திய வரலாறு

2)இந்தியப் புவியியல் 

 3) இந்தியசுதந்திரப் போராட்டம்

4)இந்திய அரசியலமைப்பு

 5)பொருளாதாரம் மற்றும் வணிகம்
                    அறிவியில்
                   

6)வேதியியல்

7)இயற்பியல்

8)தாவரவியல்

9)விலங்கியல்

10)கணிதம்

10)பொது அறிவு

11)நடப்புச் செய்திகள்

13)தமிழ்நாடு,கலாச்சாரம்,இலக்கியம்

12)அறம்,தத்துவம்
  
                 

குறிப்புகள்:

1)மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்..குரூப் 4  தேர்விற்கு 6 ம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பிலான பாட புத்தகங்களை வாசித்தாலே போதுமானது.குரூப் 2 தேர்விற்கு 12 ம் வகுப்புவரை உள்ள பாடப்புத்தகங்களை வாசித்துக் கொள்ளுங்கள்.மேலே  குறிப்பிட்டவற்றில் ஒன்றிரண்டு வினாக்கள் மாறி வரலாம்.ஆனால் அறிவியல் கணிதம் பொறுத்த மட்டில் 30 வினாக்கள் நிச்சயமாக கேட்கப்படும்.

2)நாட்டுநடப்பு நிகழ்வுகள் 5 லிருந்து 7 வினாக்கள் வரையிலும்             கேட்கப்படலாம்.தமிழ்நாடு மொழி இனம் கலாச்சாரத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இதிலும் 5 முதல் 7 வினாக்கள் கேட்கப்படலாம்.

3)பொது அறிவு வினாக்கள் என்பது பாடம் சார்ந்ததாகவோ உலக விசயங்களோ நாட்டு நடப்பு விசயங்களாகவோ மொழி சம்பந்தப் பட்ட விசயங்களாகவோ கேட்கப்படலாம்..

4)உதாரணமாக உலகின் மிக நீளமான ஆறு எது? என்று கேட்கலாம்..ஐ.நா சபையில் ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது?,சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது? போன்ற வினாக்களும் இடம் பெறலாம்..

5)வணிகம் பொருளாதாரம் பகுதிக்கு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலும் கேட்கப்படுகின்றன..

         இது குறித்து விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்..

நன்றி..
-------------------------------------------------------------------------------------------------------------
பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்போருக்கு பயன்படட்டும்
-------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                         அன்புடன் ..இப்பதிவை தரவிறக்கம் செய்துகொள்ள கீழே உள்ள சுட்டியில் செல்லவும்.டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

  1. இது மாணாக்கருக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கின்றதென்றால் சந்தோஷமே......

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com